மனதில் நின்ற நாவல்கள்-25வது நிகழ்வு

0
33

வெள்ளி விழா…மீண்டும் ஒரு முறை..! 🙂

அசோக் நகர் வட்டார நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும், ‘ மனதில் நின்ற நாவல்கள் – ஒரு அறிமுகம்’ வாராந்திர தொடர் நிகழ்வில், இன்றைய 25-ஆவது நிகழ்விற்கான அழைப்பிதழ்.

துவக்கம் முதல் இன்று வரை வாசகசாலை அமைப்பானது வாசகர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி, அவர்களது சீரிய பங்களிப்பையும் சேர்த்துக் கொண்டு உருவான ஒன்று.

அதையொட்டி இன்றைய முக்கியமான நிகழ்வையும், ஒரு வாசகர் கொண்டாட்டமாக மாற்ற எண்ணியதன் விளைவே இந்த வடிவம்..!

ஐந்து நண்பர்கள்…ஐந்து நாவல்கள்..! இந்த தொடர் நிகழ்வானது நாவல்கள் பற்றுய ஒரு அறிமுக அரங்கேயன்றி, விமர்சனம் / திறனாய்வு செய்யும் களமல்ல என்பது ஒரு தெளிவுக்கு…!

வாய்ப்பும் நேரமும் விருப்பமும் அமையப் பெற்ற நண்பர்கள் அனைவரும் இன்றைய மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, #வாசகசாலை அன்புடன் கேட்டுக் கொள்கிறது. நன்றி. மகிழ்ச்சி..

2381total visits.