நடை பயணத்தில் ஒரு கவிதை

0
61

நானும் சசியும் s7 ல தான் எப்பவும் போவோம். அரைகிலோமீட்டர் நடக்கனும் காலேஜ்க்கு. அப்போ எதிர்தாப்ல ரெண்டு பேர் எப்பவுமே கடந்து போவாங்க.  கருப்பா களையா உயரமா ஒருத்தர்… குட்டையா செவத்தவர் ஒருத்தர் . கண்ணால சிரிக்க ஆரம்பிச்சார் கருத்தவர், இன்னொருவர் நல்லாவே சிரிப்பார். இப்ப புரியனுமே யார பத்தி சொல்ல வரேன்னு.

வருஷம் கழிச்சு ஒரு தைரியம் அந்த கருத்தவர பாத்து நான் மை போடற மாதிரி சைகை பண்றது…காலேஜ் குறும்பு தான். கருப்பாம் அத ஸிம்பாளிக்கா கிண்டல் பண்றது. அவரும் சிரிச்சுட்டே போவார். கொஞ்ச நாள் கழிச்சு என் நண்பன் கிட்ட என்ன பத்தி கேட்டிருக்காங்க… ஏன்னா நாங்க பஸ்ஸ மாத்திட்டோம்ல அதனால டைமிங் மாறிடுச்சு…  எதுக்கு விசாரிச்சாங்கனு கேட்டா சும்மா காணோம்னு கேட்டாங்கனான்.
அவன் சொல்லி தான் அவங்க 2பேரும் போலீஸ் டிபார்ட்மெண்ட் ல இருக்கறதே தெரிஞ்சது… கொஞ்சம் பயம் வந்துச்சி, ஆனாலும் காட்டிக்கல… மை போட்டு காட்டறதையும் மறக்கல.
லீவ் முடிஞ்சு பைனல் இயர்ல திரும்பவும் s7…. அதே டைம் அதே இருவர் எதிர் எதிர். இப்போ நம்ம ஹீரோ தைரியமா பேச ஆரம்பிச்சார்…  குட் மார்னிங் தான் அது. ஒரு வெள்ளிக்கிழமை கவர நீட்டினார் டைரிமில்க் கூட…. யாருக்கு னு முழிச்சா… ஶ்ரீ உனக்குத்தான் அப்டீன்னாரு நாஸர்(குட்டை) ஹீரோ பேர் வெங்கடேஷ் பா.
சசிக்கு சிரிப்பு தாங்கல… எனக்கு செம டென்ஷன்..  காலேஜ் போய் மொத வேலையா சாக்லேட்ட தின்னுட்டு கவர பிரிச்சா….நம்ம பேர கவிதையா எழுதி இருந்தாரு ஹீரோ…english poetry u know..
S
H
R
E
E
V
I
D
H
Y
A
ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமான வர்ணனைல…. ஒரு மாதிரி கெத்து பீல்… ரிசர்வு போலீஸ் ல நல்ல பதவில இருக்கற ஆள் லெட்டர் குடுத்தா😍. சந்தோசமா நாலு தடவ படிச்சு சிரிச்சுட்டு காத்துல போட்டுடேன். மீண்டும் சந்திக்கவும் இல்லை அத பத்தி சிந்திக்கவும் இல்லை.
இந்த கலக்கல்ஸ் க்ரூப் னால வெங்கி நினைவுக்கு வந்தார்.
கண்ணுக்கு மை அழகு😍😇
-ஸ்ரீவித்யா இராமச்சந்திரன்

1859total visits,5visits today