மூளைக்கான வேலை

0
15

பிரச்சனை இல்லாதவங்கனு யாருமே இல்லங்க. ஒவ்வொருத்தருக்கும் அவங்க லெவல்ல பிரச்சனை. எல்.கே.ஜி போகும். அது கூட இப்போல்லாம் டென்ஷன்ல இருக்கேன்னுது. என்னனு கேட்டா?, எதாவது கேம் பேர சொல்லுது. அது ஒரு கேம்னே தெரியாம முழிக்கிறது எம்பிரச்சனை. அதெதுக்கு இங்க. (அசிங்கபட்டத சொல்ல மாட்டனே.💃)

பிரச்சனைய கையாள்றது நாமளா இருந்தாலும் உள்ள இருந்து இயக்குறது, ப்ரெய்ன் பய தான்.

திரும்பவும் நாம ப்ரெய்ன் பத்தி பேசலாம். லாஜிக்கல் பார்ட்(லெஃப்ட சைட்) ஆஃப் தி ப்ரெய்ன், எமோஷனல் திங்க்கிங் (ரைட் சைட்)பார்ட் ஆஃப் தி ப்ரெய்ன்.

ஒரு ப்ராப்ளம் ஃபேஸ் பண்ணும்போது ரெண்டு பக்க மூளை ஹெமிஸ்ஃபியர ஒன்னு சேர்ந்தாப்போல வேல வாங்கனும். அது எப்படினு பார்ப்போம்.

உங்களுடைய டாமினன்ட் ஹேண்ட்.. அதாவது நீங்க எந்த கை பழக்கமுடையவங்கனு பார்த்துக்கோங்க. இடது கைலதான் எழுதுறது, விளையாடனு யூஸ் பண்ணினா உங்க டாமினன்ட் ஹேண்ட் “இடது”..அதே போல ரைட் ஹேண்டட்  நபர்களும்.. சரி.. இப்போ எப்போதுமே வலதுல எழுதுறோம்ல, நாம கொஞ்சம் இடது கையால எழுதுறதோ வரையரதோ இல்ல கலர் அடிக்கிறதோ செய்யனும்.

அப்போ மூளை கொஞ்சம் ஆக்டிவ் ஆகும். மூளை வளரும், ரீ-வயர் செஞ்சுக்கும். இந்த மாதிரி நாம எப்போதும் உபயோகிக்கிற கைய விட்டு அடுத்தத உபயோகிக்கும்போது மூளை கொஞ்சம் குழம்பி தன்னைத்தானே சரி செய்ய பார்க்கும். அது வெற்றிக்கரமாக முடியவும் செய்யும்.  அதுதான் அங்க இன்ட்ரஸ்ட்டிங் ஃபாக்ட். (ஆக்ஸிடெண்ட்ல கை போனவங்க கூட சீக்கிரம் புது பழக்கத்துக்கு வந்துட முடியறத பார்த்திருப்போம்). இப்படி நான்-டாமினன்ட் (non-dominated) கையை உபயோகிக்குறது ஒரு “ப்ரெய்ன் எக்ஸர்சைஸ்”.

அடுத்தது.. வலது கைய வெச்சு இடதுகால் விரல தொடுங்க. இடது கைய வெச்சு வலது கால் விரல தொடுங்க. இதுவும் இன்னொரு எக்சர்சைஸ்.

இது போல அடிக்கடி உபயோகிக்காத கையால வேலை செஞ்சு பழகுங்க.. (வேலைனா ….!!!!) ப்ரஷ் பண்றது, ஷூலேஸ் கட்றது. இதுபோல..

இப்படி செய்யறது நம்ம மூளைய ஃப்ரெஷ்ஷப் செய்யறதுக்கு சமம்.

ஏங்க பண்ணனும்னு கேட்டீங்கனா மக்களே.. பிரச்சனை வர்றப்போ ஸ்டன் ஆகி போகாம இருக்க ரெண்டு பக்க மூளை ஹெமிஸ்ஃபியர நாம தூண்டறோம். என்ன பண்றோம்.? தூண்டி விடறோம்.!!! அதுனால ப்ரெய்ன் நியூரல் கனெக்ஷன ஸ்ட்ரென்தன் பண்ணிக்கும்.

இப்போதைக்கு இதை பண்ணுங்க. திரும்ப வேற ஏதாவது கொண்டுவர்றேன்.

-ரம்யா வர்ஷினி

 

542total visits,1visits today