ஏரணம் – பாகம்-1

0
122

ஒரு வார்த்தை நம்பிக்கை கொடுக்கிறது. தன்னம்பிக்கை பெறுகிறது. அலட்சியங்களை . இலட்சியங்களை செய்கிறது . பேசப்படும் வார்த்தை அல்லது தட்டச்சு செய்யப்படும் வார்த்தைகள் வாதங்களை உருவாக்குகிறது. போலித்தனங்களை காட்டுகிறது.. குற்றங்களையும் செய்கிறது. தீர்வுகளுக்கும் வழிவகுக்கிறது.

 இனி ஏரணம் @ Social Media
சென்னை –அடையாறு – ஒரு குடியிருப்பு வளாகம்.
எழுத்து இலக்கியமென முகநூலில் உலாவிய இரு இளம் பறவைகள் நடு இராத்திரியிலிருந்து இலக்கியத்தில் ஆரம்பித்து காதலில் நுழைந்து காமத்தின் அடி ஆழ உணர்வுக்கு சென்று தனி விடுகையில் தங்களை இழந்துக்கொண்டிருந்த நாழிகை இது.
யாழ்விழி : “ போடா.. போட்டோலாம் அனுப்ப முடியாது. இன்பாக்ஸ்ல பாக்குற அழகு இல்ல என்னோடது. நம்ம இல்லறத்துல பாக்க கூடியதுடா கவிஞா?”
இளவேந்தன் : “ டியர்மா.. செம மூட் ஏத்திவிட்டு.. இப்படி சொன்னா எப்படி டி?.. நீ என் லவ்வர் தானே.? ப்ளீஸ் ப்ளீஸ் ஒன்னே ஒன்னு நான் கேட்டமாதிரி.”
யாழ்விழி: “ இப்படி கெஞ்சாதே டா.. எனக்கு கஷ்டமா இருக்கு..  அதான் அடுத்த வாரம் என்னை முதன்முதலா பார்க்க வருவ இல்ல..”
இளவேந்தன்: “ அடுத்தவாரம்… எனக்கு அடுத்த யுகம் செல்லம்.. இப்போ இந்த நிமிஷம்.. இந்த நொடி  உன்னோட வாழ்றேன்.. அனுப்பு…. லைட்டா ..செக்சியா..”
யாழ்விழி : ”ஹம்ம்ம்ம்ம் போடா… நீ கெஞ்சினாலே நான் கிறங்கிடுறேன். சரி.. வாட்ஸ் அப் வா..அதுல அனுப்புறேன். “
இளவேந்தன்.. “ யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ் லவ் யூ யூ யூ..”
வாட்ஸ் அப்-ல் யாழ்விழியின் தற்படம் இடம்மாறிக்கொண்டிருக்கும் நேரம். அனுப்பிவிட்டாள். சிங்கிள் டிக்..- டபுள் டிக் -..டபுள் ப்ளு டிக்.. என படம் இளவேந்தனின் விழியில் இடம் பெயர  நொடி நேரம் கூட எடுக்கவில்லை. பார்க்கிறான். வியக்கிறான் யாழ்விழியின் அழகில்…!
சங்கு கழுத்திலிருந்து தொடங்கும் தங்கச் சங்கலி பாதியளவு  தெரியும் இரு மார்பு இடைவெளியில் விழந்து சுருள்கிறது .. இடையிலிருந்து சிறிதளவு இறங்கிய உடையுடன் தெரியும் தொடையழகு திரண்டு மிரட்டுகிறது.
கவிஞன் இளவேந்தன் விழி காமத்தில் சிவக்கிறது கோயம்புத்தூரில்.!  கவிதாயினி யாழ்விழி கன்னம் வெட்கத்தில் வெளிர்சிவப்பாகிறது சென்னையில். !
முகநூலில் விடுவிக்கப்பட்ட அரட்டை வாட்ஸ் அப்-ல் தொடர்கிறது.
“ஹே.. டியர்…. செம டி.. வாவ்.. வாட் ஏ செக்சி யூ ஆர்… ?”
“ஹம்ம்ம்.. போடா…. இப்படிலாம் அனுப்பகூடாதுன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க. உன்ன நம்பி அனுப்பிட்டேன்.”
“ம்ம்ம் நான் வேற நீ வேறயா டி ? லவ் யூ ஆல்வேஸ் …” முத்தம் சிந்தும் பொம்மை ஒன்றை பல முறை அனுப்பிவிட்டு
”இதெல்லாம் உன் உடல் மீது.
உன் உடலெல்லாம் என் உதட்டின் மீது ”
என்று கவித்துமாக்கி அனுப்ப
அவள் மயங்குகிறாள்.. தமிழில்.. தமிழ் பூசும் கவிஞனின் இளவேந்தன் சொற்களில்…!
“கவிஞன் டா நீ…..  அழகு குட்டி… நீ… லவ் யூ பப்பூ .. சரிடா கவிஞா.. பார்த்துட்டு டெலீட் பண்ணிடு டா.. ப்ளீஸ். “
“கண்டிப்பா டா..? இளவேந்தன் ஆசையின் உச்சத்தில் அன்பின் மிகுதியிலே யாழ்விழியின் அரை நிர்வாண புகைப்படத்தை கேட்டு இரசித்து தன்னை இன்பமேற்றம் செய்திருக்கிறான். ஆனால் உண்மையிலும் அவன் யாழ்விழியின் படத்தை தனது அலைப்பேசியிலிருந்து அழித்திருப்பானென நம்பியவளிடம்  நம்பிக்கை இருந்தது இளவேந்தன் தன்  எதிர்கால கணவன் என்றே..!
கவிஞன் எப்போதும் தான் கண்டதை உணர்ந்ததை ரசித்ததை கவிதையாக்கிவிடும்  போதைக் கொண்டவன்.
இரண்டாயிரத்தெட்டுக்கு முன் காதலித்த காதலர்கள் தங்களின் உணர்ச்சியை கிளர்ச்சியை கவிதையாக்கி தாளில் எழுதி மறைத்துக்கொண்டனர்.  முகநூல் என தமிழில் அழைத்து பழக்கப்பட்ட Facebook 2008ல் அறிமுகமாகி பரவலாக இந்தியாவில் வியாபித்த போது… இலக்கியம்.. கலை சார்ந்த படைப்புக்கள் தானாகவே முகநூலோடு தன்னை இணைத்து தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டன.
பிரபலமாகாத பல திறனாளர்கள்  அவர்களின் படைப்பை அவர்களே வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திக்கொள்ள மிக சிறந்த இணையவெளி கருவியாக  முகநூல் பெருமிதத்தோடு வலம் வந்துக்கொண்டிருக்கிறது.  படைப்பாளியாக முகநூலில் லைக்ஸ் எனும் விருப்பக்குறிகளை பெற்று சிலர் சாதிக்கிறார்கள்.. சிலர் ஏங்குகிறார்கள்..  Likes எனும் ஒற்றை கிளிக் ஒரு கொலை செய்யத் தூண்டுமா என்ன..?
 —
ஸ்டெல்லா… வயது முப்பத்தி மூன்று. சிவப்பு நிறம். பளபளக்கும் விழிகள். ஐந்தடி மூன்று அங்குல உயரம். மதுரையில் வசிப்பவள்.
வாழ்க்கையில் சந்தித்த துயரங்களுக்கு ஆறுதல் விடிவு முகநூலில் கிடைக்குமென  முகநூலுக்கு சமீபத்தில் அடிமையானவள். தெரிந்த இருபது முப்பது நண்பர்களை முகநூலில் இணைத்து விட்டு சமூக ஊடகத்தில் பயணிக்கத் துவங்கியவளுக்கு இன்று 3,456 நண்பர்கள். முகநூலில் அரட்டை அடிப்பதே இவளின் பொழுதுப்போக்கு மட்டுமே அதுவே இவளின் ஆறுதலும் கூட.  சோகத்தில் மூழ்கும் தனிமையாளர்களுக்கு காண்பவை யாவும் ஆறுதல். பேசுபவர்கள் யாவரும் நல்லவர்கள். குரல் இணையவெளியில் அலையும். மனம் அலைபாயும்.. குணம் குரங்காய் தாவும். இறுதியில் எதுவும் மாயை என தெரியும் போது.. தனிமை மீண்டும் வாட்டும்.
சமூக சேவகர். பட்டிமன்ற பேச்சாளர். உலகம் சுற்றும் தொழிலதிபர். மருத்துவர்.. பொறியாளர். அதிகாரி.. அரசியல்வாதி என திறமை வாய்ந்த தனித்துவ திறமையாளர்கள் உட்பட கொஞ்சம் அதிகமாகவே .. போட்டோகிராபர்.. ஓவியர்.. திரைப்பட இயக்குனர். உதவி இயக்குனர். ஒளிப்பதிவாளர்.. ஒலிப்பதிவாளர்.. எடிட்டர்.. நடன இயக்குனர்.. சண்டை இயக்குனர் என பலர் ஸ்டெல்லாவின் முகநூல் நண்பர்கள்.
அனைவருக்கும் ஸ்டெல்லாவின் கடந்த கால துயரம் தெரியும். தெரியும் என்பதாலே தொந்தரவும் நீளும்  அனைவருக்கும் இவளின் அலைப்பேசி எண் தெரியும்.. அலைப்பேசியில் பேசி இருக்கிறார்கள். நள்ளிரவிலும்.. விடியவிடிய கதிரவன் காது கிழியும் வரையிலும் பேசி இருக்கிறார்கள் .. அது இவளே அழைத்தும்.. அவர்களே விரும்பியும் விரும்பாமலும் கூட..!
அன்பு தான்…. அன்பு மட்டுமே இங்கு எல்லாருக்கும் தேவையாக இருக்கிறது. அது வக்கிரமாகவும் வெளிப்படுகிறது. ஆசையாவும் வேண்டிக்கொள்கிறது.  ஒரு புறக்கணிப்பு.. ஒரு  மனக்காயம்.. எந்த வலிமையும் செய்யகூடும் .. எந்த வழிமுறையும் தேடும்.. எந்த கட்டுப்பாட்டையும் மீறும். இந்த சமூகத்தின் நாக்கு ஸ்டெல்லா போன்ற அன்பு தேடுபவர்களை.. அன்பாலே தனக்கான வட்டத்தை விரிவுப்படுத்துபவர்களை.. பெண் என்பதால் மட்டுமே குறைச் சொல்லும். ஆண் என்றால் இயல்பு என கடந்துச் செல்லும்.
ஒருத்தியின் உடல் தேவை.. உள்ளத்தேவை என்பதெல்லாம் அவளின் தனிப்பட்ட விஷயம் மட்டுமே அன்றி.. அது அவள் சார்ந்து வாழும் சமுதாயத்தின் விஷயமல்ல. பிரச்சினையுமல்ல. ஒருத்தி என்பதை ஒருவனாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டெல்லா… நட்பு விண்ணப்பம் அனுப்பிக்கொண்டே இருக்கிறாள். பல முகநூல் குழுக்களில் சேர்கிறாள். அன்பை தேட நண்பர்களை தன் முகநூல் நட்பு பட்டியலில் இணைக்கிறாள். ஒரு சிலர் இவளை விசாரிக்கிறார்கள்.. ஒரு சிலர் இவளையும் விசாரித்தார்கள். … தேகம்.. உருவம்.. அழகு நிறம் காமம் சார்ந்த விசாரிப்புகளில் ஸ்டெல்லாவிற்கு நாட்டம் உண்டென்றாலும் ஒரு வரைமுறைக்குள் தன்னை கட்டுப்படுத்திவிடுகிறாள்.
தன்னுடன் படுக்கையை பங்கீட்டு கொள்வாயா எனும் கேள்வியை எதிர்க்கொண்டாலும்.. கேள்வியின் பிண்ணனியிலுள்ள மனிதர்கள் அந்நேர இச்சை குணங்களுக்கு அனுசரித்து மென்மையாக பேசும் அதிவினோதக்காரி. அவர்களின் உடலுறவு அழைப்புக்கு இவளும் ஒரு காரணம். ஆம்  ஒரு பெண் தனியாக வாழ்கிறாள் என்றாலே ஆணின் மனம் சஞ்சலப்படும்.. கெஞ்ச வைக்கும். கொஞ்ச வைக்கும், மிரட்டவும் செய்யும்.
தனிமை.. இரவு.. குளிர்… உடலில் ஏறும் தாபம் காமம் வெப்பம் சேர்ந்து தூண்டி ஒரு சிலரிடம் நம்பிக்கையின் பேரில் ஸ்டெல்லாவின்  புகைப்படம் தனிவிடுகையில் பரிமாறப்படுகிறது. புகைப்படத்தில்  உடலை மட்டும் பார்க்கும் அன்பர்கள் இவள் நம்பிய அனுப்பிய மனதை.. இவள் போர்த்தி இருக்கும் உடையை அகற்றிவிட்டே இரசிக்கிறார்களென இவளுக்கு தெரியுமோ தெரியாதோ? பாவம் அப்பாவி பெண்ணோ ?
ஒரு பெண் நள்ளிரவில் அதிகாலையில் முகநூலில்  இருக்கிறாள் என்றாலே.. அறிவியலால் வளர்ந்த முகநூலில் இருக்கும் சமுதாயமே அறிவை இழந்து  தவறாக எண்ணுகிறது. தப்பாகவே பார்க்கிறது. தப்பானவளாகவே எண்ணுகிறது. ஒரு சிலரைத் தவிர மீதி அத்தனை ஆண்களும் அப்படிதானோ என்கிறது பொது பெண் புத்தி. அப்படியாக  இல்லை என யார் உறுதியாக கூற இயலும் ?
ஏன் அவள் பத்திரிக்கையாளராக இருக்க கூடாது? நள்ளிரவில் அலுவலக பணியிலிருப்பவளாக இருக்க கூடாது..? அட ஏன் அவள் அவள் விரும்படியாக முகநூலில் இயங்க கூடாது.?  காம அரட்டைக்கு ஏங்குபவளாகவே இருக்கட்டுமே..அது அவள் விருப்பம். அவள் விரும்புகிறவர்களிடம் அவள் உரையாடும் சுதந்திரமென ஏன் எண்ணுவதில்லை இந்த நாகரிக சமூகம்.
பெண் விடுதலை என்பதெல்லாம் கட்டுடைத்த பெண்களின் கல்வி பொருளாதார தன்மான  வளர்ச்சி மட்டுமே அல்ல.. ஆண்களின் பார்வையில் சில முதிர் பெண்களின் பார்வையில் மாறும் முதிர்ச்சியும் கூட..!
ஸ்டெல்லா அனுப்பிய புகைப்படத்தினால் அவளை மனமுடைய செய்கிறது.. நம்பிக்கை பெற்றவனிடம் ஏமாறுகிறாள்.. ஏமாற்றப்படுகிறாள்… ஏமாற்றும் கயவன் யாழ்விழியின் காதலனோ…?
–(தொடரும்)
-R. சந்தோஷ் குமார்

855total visits,3visits today