விடுதிகள் பதிவு கட்டாயம் – சென்னை ஆட்சியர்

0
44

சென்னையில் நாளுக்கொரு விடுதிகள் அதுவும் பெண்கள் விடுதிகள் துவங்கப்படுகிறது. பல விடுதிகள் பாதுகாப்புக் குறைவானவை. வெளியூரிலிருந்து வரும் பெண்கள் பணம் குறைவு என்பதால் இத்தகைய விடுதிகளை தேர்ந்தெடுகின்றனர்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சென்னை மாவட்ட ஆட்சியர் திரு, சண்முகசுந்தரம், “ இன்னும் ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள விடுதிகள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டுமெனவும், Tamilnadu hostels and homes for women and children என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். பதிவு செய்யப்படாத விடுதிகள் மீது செக்க்ஷன் 20(2) என்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் உள்ள பெண் விடுதிகள் மீதும், பாதுகாப்பு குறைவான அம்சத்தையும் சுட்டிக்காட்டி நிறைய புகார்கள் வந்ததால் இத்தகைய ன நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருவதாக ஆட்சியர் குறிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

– ஸ்ரீவித்யா

364total visits,2visits today