வாழ்த்துகள் விஜயலட்சுமி

0
41

ப்ருத்விராஜ் நடித்த ‘ஜே.சி. டேனியல்” என்ற படத்தில் “ காற்றே காற்றே” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் வீர சிவாஜி படத்தில் ’சொப்பன சுந்தரி நான் தானே’ பாடல் மூலம் தமிழில் பிரபலமடைந்தவர். அதன் பிறகு நிறைய பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கானா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பாடிய “வாயாடி பெத்த புள்ள” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

விஜயலஷ்மிக்கு கடந்த வருடம் சந்தோஷ் என்பவருடன் திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்குமான கருத்து வேறுபாடு காரணமாக அந்த் திருமணம் நின்று விட்டது. அதன் பிறகு மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன் திருமண முயற்சி ஏற்பட்டு, இன்று காலையில் வைக்கமில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்தில் நண்பர்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. விஜயகுமார் என்பவர் இயக்கும் இத்திரைப்படத்தில் வைக்கம் விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் கேரள மழைவெள்ள நிவாரண நிதிக்கு மீன் விற்று நிதியளித்த மாணவி ஹனன் ஹமீது என்பவர் நடிக்கிறார்.

– ”சினிமா” பாபு

357total visits,5visits today