தினம் ஒரு தகவல் – 14

0
133

560. “தீ இனிது“ என்று பாடிய கவிஞர்
யார்?
–பாரதியின் வசனகவிதை

561. “புத்தகங்களே குழந்தைகளைக்
கிழித்துவிடாதீர்கள்“ என்ற கவிஞர் யார்?
–அப்துல் ரகுமான்.

562. “முகத்தில் பிறப்பதுண்டோ
முட்டாளே“ என்ற கவிஞர் யார்?
–பாரதிதாசன்.

563. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை
பின்னர் நாவலாக வளர்ந்தது?
–அக்னிப்பிரவேசம்.

564. “பள்ளிக்கூடம் இல்லாத ஊரில்
படிக்கப்போறேன்“ என்றவர் யார்?
–பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

565. தன் மனைவியை இறைவனுக்காக
விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
–இயற்பகை நாயனார்.

566. கடவுளும் கந்தசாமியும் –
சிறுகதை ஆசிரியர் யார்?
–புதுமைப்பித்தன்

567. கலப்புத் திருமணத்தைக்
கருவாகக் கொண்ட அண்ணாவின்
நாவல் எது?
–குமரிக்கோட்டம்

568. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை
இயற்றியவர் யார்?
–கோபாலகிருஷ்ண பாரதி

569. பண்ணாய்வான் பசு எனப் புகழப்படும் இசைத்தமிழறிஞர் யார்?
–குடந்தை ப.சுந்தரேசனார்.

570. வள்ளலாரின் கீர்த்தனைகள்
அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
–யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை.

571. “இருபத்துநாலாயிரம் நபிகளில்
ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன்
வாப்பா” – யார் எழுதிய கவிதை?
–எச்.ஜி.ரசூல்.

572. “காவிய காலம்“ என்ற ஆய்வு
நூலை எழுதியவர் யார்?
–வையாபுரியார்.

573. “புதுக்கவிதை –சொற்கள்
கொண்டாடும் சுதந்திரதின விழா“ என்றவர் யார்?
–வைரமுத்து.

574. “இரவில் வாங்கினோம்,
விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?
–சேலம் ம.அரங்கநாதன்.

575. “உழைப்பின் வாரா உறுதிகள்
உளவோ”என்று கூறியவர் யார்?
–பட்டினத்தார்.

576. “இன்னாதம்ம இவ்வுலகம் இனிய
காண்க அதன் இயல்புணர்ந்தோரே”
பாடிய புலவர் யார்?
–பக்குடுக்கை நன்கணியார்.
(“உண்டாலம்ம இவ்வுலகம்” கடலுள்
மாய்ந்த இளம்பெருவழுதி).

578. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” வரிகள் இடம் பெற்ற
நூல்கள்?
–புறநானூறு, மணிமேகலை.

579. தமிழில் விருத்தப்பாவில் எழுந்த
முதல் காப்பியம்?
–சீவகசிந்தாமணி
( கம்பராமாயணம் இல்லை).

580. ஐம்பெரும்காப்பியம் எனும்
வழக்கை முதலில் கையாண்டவர்?
–மயிலை நாதர்.

581. “ யான் பெற்ற பெரு பெருக
இவ்வையகம்”, “என்னை நன்றாக
இறைவன் படைத்தனன் தன்னை
நன்றாகத் தமிழ் செய்யுமாறே” எனக்
கூறியவர்?
–திருமூலர்.

582. “தமிழன் என்று சொல்லடா தலை
நிமிர்ந்து நில்லடா” என்றவர்
–நாமக்கல் கவிஞர் ( பாரதிதாசன்
இல்லை).

583. “இப்படை தோற்கின் எப்படை
வெல்லும்” வரி இடம்பெறும் நூல்?
–மனோன்மணியம்.

584. “காக்கை விடு தூது”
நூலாசிரியர் யார்?
–வெள்ளைவாரணர்.

585. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு
நடைபெற்ற ஆண்டு
–1969.

586. இந்திய சுதந்திரப் போராட்ட
வரலாற்றில் 1930ம் ஆண்டுடன்
தொடர்புடையது?
–சட்ட மறுப்பு இயக்கம்.

587. பொன்னியின் செல்வன் என்ற
தமிழ் நாவலை எழுதியவர்?
– கல்கி.

588. சர்க்காரியா கமிஷன் நியமனம்
செய்யப்பட்டது மத்திய-மாநில அரசு
உறவு முறை ஆய்வுக்கு.

589. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்
கிரக இயக்கத்தை தலைமையேற்று
நடத்தியவர்
–சி. ராஜகோபாலாச்சாரி.

590. தமிழ்க்கவிஞர் சுப்பிரமணிய
பாரதியின் பிறந்த ஊர்?
–எட்டயபுரம்.

591. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
– பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.

592. தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
– கார்ல் சேகன்.

593. தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
– 8 ஆண்டுகள்.

594. ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
– பாரதியார்.

595. ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
– மயிலை . சீனி . வேங்கடசாமி.

596. கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
–க. சச்சிதானந்தன்.

597. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
– ராமச்சந்திரகவிராயர்.

598. குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
– பாரதிதாசன்.

599. அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
– சிங்காரவேலனார்.

600. அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
– அகராதி நிகண்டு.

-ரேவான்

718total visits.