தினப்பலன் 30/11/2018

0
24

☸மேஷம்:-

பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து செல்லும் வெளியூர் பயணங்கள் மன மகிழ்ச்சியை அளிக்கும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : நம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
☸ரிஷபம்:-

தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களிடம் கோபத்தை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். வாசனை திரவியங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிறு தடைகள் தோன்றி மறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : தடைகள் அகலும்.
☸மிதுனம்:-

புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். காது சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் செயல்களால் பணிபுரியும் இடங்களில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய செயல் திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : இனிமையான நாள்.

☸கடகம்:-

வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். செயல்வேகம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
பூசம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

☸சிம்மம்:-

முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். செய்யும் செயல்களை கவனமாக செயல்படுத்தவும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான இலட்சியங்களை உருவாக்கி அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.

☸கன்னி:-

பொது சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர் உண்டாகும். பிறருக்கு உதவும்போது சற்று கவனத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தலைமைப் பதவிக்கான முயற்சிகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : நற்பெயர் உண்டாகும்.
அஸ்தம் : தரிசனம் கிடைக்கும்.
சித்திரை : மதிப்பு கூடும்.

☸துலாம்:-

கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் காலதாமதமாக கிடைக்கும். புதிய தேடல் பிறக்கும். அயல்நாட்டு பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் தயக்கமான சூழல் அமையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : புதிய தேடல் பிறக்கும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
☸விருச்சகம்:-

மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். விவாதங்களின் மூலம் மாற்றமான சூழலும், அனுகூலமான பலன்களும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அனுஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
☸தனுசு:-

உடன்பிறப்புகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் நன்மைகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : நன்மைகள் உண்டாகும்.
உத்திராடம் : சுபிட்சமான நாள்.

☸மகரம்:-

செய்யும் செயல்களில் அவ்வப்போது தோன்றும் மந்தத்தன்மையால் கால விரயம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். சந்திராஷ்டம தினம் என்பதால் தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வேலையாட்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கால விரயம் உண்டாகும்.
திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
☸கும்பம்:-

குடும்ப நபர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

☸மீனம்:-

நிலுவையில் இருந்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் பல தடைகளை தாண்டி எண்ணிய எண்ணத்தை செயல்படுத்துவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படவும். பணிபுரியும் இடங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : புதிய வாய்ப்புகள் அமையும்.

-Astro பகீரதன்

220total visits,4visits today