தினப்பலன் 05/12/2018

0
16

☸மேஷம்:-

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் உத்தியோகம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பயனற்ற செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சுயதொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : முயற்சிகள் ஈடேறும்.
பரணி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

☸ரிஷபம்:-

விடாமுயற்சியுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் மனதில் எண்ணிய காரியங்கள் ஈடேறும். கலைப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். வியாபாரத்தில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் இலாபம் அடைவீர்கள். புதிய நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : முயற்சிகள் மேம்படும்.
ரோகிணி : காரியசித்தி உண்டாகும்.
மிருகசீரிடம் : புதிய நட்பு கிடைக்கும்.

☸மிதுனம்:-

வாக்குவன்மையால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளின் மூலம் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.

☸கடகம்:-

கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சோர்வு நீங்கும். உறவினர்களைப் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் இலாபகரமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.
பூசம் : சோர்வு நீங்கும்.
ஆயில்யம் : உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

☸சிம்மம்:-

திட்டமிட்டு செயல்படுவது காலதாமதத்தை தவிர்க்கும். பணியின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் அமையும். முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பிரச்சனைகள் மூலம் மனக்கவலைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மகம் : திட்டமிட்டு செயல்படவும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : விவேகம் வேண்டும்
☸கன்னி:-

பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி கொள்வீர்கள். புதிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் பணி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.

☸துலாம்:-

தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு செயல்படுவது நல்லது. பொருளாதாரம் சார்ந்த சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : புரிதல் வேண்டும்.
விசாகம் : கவனம் தேவை.

☸விருச்சகம்:-

ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பேச்சில் நிதானம் வேண்டும். மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : ஆசிகள் கிடைக்கும்.
அனுஷம் : அனுபவம் உண்டாகும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

☸தனுசு:-

வீடு மற்றும் வாகனத்தை விருப்பம் போல் மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.
பூராடம் : மதிப்பு கூடும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

☸மகரம்:-

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

☸கும்பம்:-

வியாபாரத்தில் புதிய வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் மூலம் ஆதரவான நிலை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். அரசு காரியங்களில் இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : இலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

☸மீனம்:-

சந்திராஷ்டம தினம் என்பதால் மனதில் சஞ்சலமான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்ப விவகாரங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்வதை தவிர்க்கவும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறதியால் சில காலதாமதம் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : அமைதி வேண்டும்.
உத்திரட்டாதி : வாக்குறுதியை தவிர்க்கவும்.
ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

-Astro பகீரதன்

367total visits,3visits today