தினப்பலன் 12/11/2018

0
27

☸மேஷம் :-

உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய வீடுகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். உங்களின் மீதான மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : உறவினர்களால் நன்மை உண்டாகும்.
பரணி : முன்னேற்றமான நாள்.
கிருத்திகை : மதிப்பு கூடும்.

☸ரிஷபம் :-

சம வயதினரிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். கடல் மார்க்க பணிகளில் உள்ளவர்களுக்கு மந்தமான இலாபம் கிடைக்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முடிவுகளை எடுக்கும்போது பிறரின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : பணியில் கவனம் தேவை.
மிருகசீரிடம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

☸மிதுனம் :-

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். இறை வழிபாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்

மிருகசீரிடம் : சுபச் செலவுகள் உண்டாகும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேம்படும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

☸கடகம் :-

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தலைமை அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : முன்னேற்றமான சூழல் அமையும்.
ஆயில்யம் : சேமிப்பு அதிகரிக்கும்.

☸சிம்மம் :-

தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மகம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : சாதகமான பலன்கள் கிடைக்கும்.

☸கன்னி :-

பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சுயதொழில் செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் அமையும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கௌரவ பதவிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.
அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.

☸துலாம் :-

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்வீர்கள். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். நிலுவையில் இருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

சித்திரை : ஒற்றுமை மேம்படும்.
சுவாதி : வாதத்திறமையால் இலாபம் உண்டாகும்.
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.

☸விருச்சகம் :-

மனைவியால் சுப விரயங்கள் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்குகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.
அனுஷம் : நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள்.
கேட்டை : எண்ணங்கள் ஈடேறும்.

☸தனுசு :-

சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். கூட்டாளிகளால் சில காரியத் தடங்கல்கள் உண்டாகும். சாஸ்திர அறிவு மேம்படும். கலைஞர்கள் சற்று கவனமாக செயல்பட்டால் தேவையற்ற அவச்சொற்களை தவிர்க்கலாம். மலைநாட்டு பயணங்களில் உள்ள தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : தடைகள் நீங்கும்.

☸மகரம் :-

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புத்திரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைக்கூடும். ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : சுபமான நாள்.
திருவோணம் : ஜெயம் உண்டாகும்.
அவிட்டம் : முயற்சிகள் கைக்கூடும்.

☸கும்பம் :-

சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.

☸மீனம் :-

விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். சம வயதினரின் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். மனக்கவலைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : உடைமைகளில் கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.

-Astro பகீரதன்

296total visits,1visits today