தினப்பலன் 13/11/2018

0
41

☸மேஷம் :-

செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உறவினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : இன்பமான நாள்.
பரணி : சாதகமான சூழல் அமையும்.
கிருத்திகை : ஆதரவான நாள்.

☸ரிஷபம் :-

உடல் ஆரோக்கியம் மேம்படும். வாசனைத் திரவியம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : உங்களின் மதிப்பு கூடும்.
மிருகசீரிடம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

☸மிதுனம் :-

பயணம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தாயின் உடல்நலத்தில் இருந்த வந்த இன்னல்கள் நீங்கும். செய்யும் பணியில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் அகலும். பணிபுரியும் இடங்களில் பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : முடிவுகளில் கவனம் வேண்டும்.
திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.
புனர்பூசம் : எதிர்ப்புகள் அகலும்.

☸கடகம் :-

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுத்திறமையால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : உறவு மேம்படும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : திறமையால் இலாபம் கிடைக்கும்.

☸சிம்மம் :-

தாய்மாமன் உறவுகளால் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் ஒருவிதமான பய உணர்வு ஏற்படலாம். எதிர்பாலின மக்களிடம் நிதானம் வேண்டும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். சந்தேக உணர்வினால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சாதகமான சூழல் அமையும்.
பூரம் : முடிவுகளில் காலதாமதம் உண்டாகும்.
உத்திரம் : மனக்கசப்புகள் ஏற்படலாம்.

☸கன்னி :-

வீட்டிற்கான பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தொழிலில் இருந்த நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் செயல்படவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திரம் : பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம்.
அஸ்தம் : அமைதியை கடைபிடிக்கவும்.
சித்திரை : புதிய அனுபவம் கிடைக்கும்.

☸துலாம் :-

பெரியோர்களின் ஆசிகளும், ஆலோசனையும் கிடைக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பணியில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : ஆசிர்வாதம் கிடைக்கும்.
சுவாதி : இன்பமான நாள்.
விசாகம் : சுபிட்சமான நாள்.

☸விருச்சகம் :-

உத்தியோகஸ்தரர்கள் எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிப்பார்கள். செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். புதிய முயற்சிகளால் பாராட்டும், மதிப்பும் உயரும். இளைய சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

☸தனுசு :-

குடும்ப பொருளாதாரத்தில் இருந்த தடைகள் அகலும். புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : தடைகள் அகலும்.
பூராடம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : சுபிட்சம் உண்டாகும்.

☸மகரம் :-

குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஏற்படும் மந்தத்தன்மையால் காலவிரயம் உண்டாகும். பிறரின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் சார்ந்த அலைச்சல்கள் மேம்படும். மனதில் எண்ணிய பிராத்தனைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : கால விரயம் உண்டாகும்.
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

☸கும்பம் :-

கூட்டாளிகளுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். மனைவி வழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். ஜாமின் கையெழுத்துகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரட்டாதி : புதிய உத்வேகம் பிறக்கும்.

☸மீனம் :-

மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியத்தில் சில காலதாமதம் உண்டாகும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிரிகளால் சில இன்னல்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

-Astro பகீரதன்

457total visits,1visits today