தினப்பலன் 19/11/2018

0
23

☸மேஷம்:-

நிர்வாகம் சம்பந்தமான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

☸ரிஷபம்:-

பணி சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். தலைமை அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பயனற்ற செலவுகளை குறைக்க முயல்வீர்கள். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : சேமிப்பு உயரும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.

☸மிதுனம்:-

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். திருமண முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
திருவாதிரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.

☸கடகம்:-

தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பிள்ளைகள் சாதகமாக செயல்படுவார்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.

☸சிம்மம்:-

சந்திராஷ்டம தினம் என்பதால் முக்கிய கோப்புகளை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் செயல்படவும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : உதவி கிடைக்கும்.
உத்திரம் : பேச்சில் நிதானம் வேண்டும்

☸கன்னி:-

உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தியான சூழல் அமையும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சித்திரை : திருப்தியான சூழல் அமையும்.

☸துலாம்:-
பணியில் நிதானத்துடன் செயல்பட்டு எண்ணிய செயலை முடிப்பீர்கள். புதிய அணிகலன்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பூமி விருத்திக்கான செயல்திட்டங்களை வகுப்பீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
விசாகம் : செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

☸விருச்சகம்:-

மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழிலை அபிவிருத்தி செய்ய போதுமான நிதி உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : முடிவுகள் சாதகமாகும்.
அனுஷம் : அன்பு அதிகரிக்கும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

☸தனுசு:-

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிட வேண்டாம். தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். பேச்சில் கனிவு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : முயற்சிகள் ஈடேறும்.
உத்திராடம் : பேச்சில் நிதானம் வேண்டும்.

☸மகரம்:-

கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். புதிய நபர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். திருமண வரன்கள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : சுபச் செய்திகள் வந்தடையும்.

☸கும்பம்:-

நீண்ட நாள் எண்ணங்கள் ஈடேறும். பயணங்களில் சில தடைகள் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே மனக்கசப்புகள் வந்து போகும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : சுபச் செலவுகள் உண்டாகும்.

☸மீனம்:-

சுயதொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். சபை தலைவராக இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அரசாங்கம் சம்பந்தமான பணிகளில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வீண் அலைச்சல்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் :அடர் பச்சை

பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.

-Astro பகீரதன்

729total visits,3visits today