தினப்பலன் 21/11/2018

0
7

☸மேஷம்:-

மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுபச் செய்திகள் கிடைக்கும். வெளியூரில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான நாள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

☸ரிஷபம்:-

திட்டமிட்ட பணிகள் மற்றும் முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த தன உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
ரோகிணி : கடன்சுமை குறையும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
☸மிதுனம்:-

வெளியூர் பயணங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மிருகசீரிடம் : எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
திருவாதிரை : உடல்சோர்வு உண்டாகும்.
புனர்பூசம் : வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

☸கடகம்:-

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் உதவியால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு இன்பத்தை அளிக்கும். விருப்பமான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீர்வழி தொடர்பான பயணங்களால் பொருளாதார நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூசம் : இன்பமான நாள்.
ஆயில்யம் : பொருளாதாரம் மேம்படும்.
☸சிம்மம்:-

மனதில் திட்டமிட்ட காரியத்தை துணிவோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பணிபுரியும் இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : வெற்றி காண்பீர்கள்.
பூரம் : உயர்வு உண்டாகும்.
உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.

☸கன்னி:-

சந்திராஷ்டம தினம் என்பதால் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது சற்று நிதானம் வேண்டும். புதிய முயற்சிகள் மற்றும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : தன்னம்பிக்கையுடன் செயல்படவும்.
சித்திரை : கோபத்தை தவிர்க்கவும்.

☸துலாம்:-

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பயனற்ற எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளால் மன உளைச்சல் ஏற்படும். சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி : மன உளைச்சல் ஏற்படும்.
விசாகம் : கவனம் வேண்டும்.

☸விருச்சகம்:-

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் சற்று குறையும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : எதிர்ப்புகள் குறையும்.
கேட்டை : சாதகமான நாள்.

☸தனுசு:-

குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். ஆன்மீக பயணங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான செயல்பாடுகளில் அலைச்சலும், காலதாமதமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : பொருளாதாரம் மேம்படும்.
☸மகரம்:-

பூர்வீக சொத்துகள் தொடர்பான சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப நபர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை அளிக்கும். பொன், பொருள் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். தொழில் சார்ந்த பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : சுபிட்சமான நாள்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

☸கும்பம்:-

பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் சிறு மாறுதல்களை செய்தால் நல்ல இலாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : புதிய அனுபவம் கிடைக்கும்.
சதயம் : இலாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : நம்பிக்கை உண்டாகும்.

☸மீனம்:-

எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : செயல்களில் காலதாமதம் ஏற்படும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.

-Astro பகீரதன்

89total visits,2visits today