தினப்பலன் 22/11/2018

0
40

☸மேஷம்:-

சொத்து வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். பேச்சில் அனுபவ அறிவு மேம்படும். வியாபாரத்தில் எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகளில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அசுவினி : அறிவு மேம்படும்.
பரணி : காரிய சித்தி உண்டாகும்.
கிருத்திகை : முடிவுகளில் நிதானம்
☸ரிஷபம்:-

எதிர்ப்புகளை களைந்து திட்டமிட்ட செயல்களை செய்து அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வீடு மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் அமையும். கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் அமைதியுடன் செயல்படவும். புதுவிதமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.
ரோகிணி : வாய்ப்புகள் அமையும்.
மிருகசீரிடம் : புதுவிதமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

☸மிதுனம்:-

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சிக்கனமாக செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : சுபிட்சம் உண்டாகும்.
திருவாதிரை : சேமிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : திருப்திகரமான நாள்.

☸கடகம்:-
மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் கிடைக்கும் சாதகமான தீர்ப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
☸சிம்மம்:-

கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து இலாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். திறமைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : ஆதாயம் உண்டாகும்.
பூரம் : முயற்சிகள் கைக்கூடும்.
உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
☸கன்னி:-

சந்திராஷ்டம தினம் என்பதால் செய்யும் பணிகளில் பதற்றம் ஏற்படும். அதிக வேலைச்சுமையால் மற்றவர்களின் மீது கோபம் தோன்றி மறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் பேச்சில் உள்ள உண்மையை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்படவும்..

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : பதற்றம் ஏற்படும்..
அஸ்தம் : விவேகம் வேண்டும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.

☸துலாம்:-

எதிலும் அவசரம் இன்றி நிதானத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : அமைதி வேண்டும்.
சுவாதி : அன்பு அதிகரிக்கும்.
விசாகம் : இலாபம் உண்டாகும்.
☸விருச்சகம்:-

செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்பட்டால் அவப்பெயர்களை தவிர்க்க இயலும். எதிலும் சிந்தித்து செயல்படுவது மேன்மையை தரும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : செயல்களில் கவனம் தேவை.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : சிந்தனைகள் தோன்றும்.

☸தனுசு:-

திட்டமிட்ட செயல்களை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் செயல்களில் உள்ள குறைகளை கனிவுடன் வெளிப்படுத்தவும். வாகனப் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் : ஆசிகள் கிடைக்கும்.

☸மகரம்:-

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். புத்திரர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். புதிய வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : ஆதரவு அதிகரிக்கும்.
திருவோணம் : வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
அவிட்டம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

☸கும்பம்:-

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். விவசாயம் தொடர்பான செயல்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
சதயம் : மதிப்பு உயரும்.
பூரட்டாதி : நுட்பங்களை கற்பீர்கள்.

☸மீனம்:-

புதிய முயற்சிகள் சார்ந்த பணிகளால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

-Astro பகீரதன்

411total visits,1visits today