தினப்பலன் 25/11/2018

0
34

☸மேஷம்:-

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் அமையும். செய்தொழிலில் உயர்வு உண்டாகும். சபைகளில் மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : காரியசித்தி உண்டாகும்.
கிருத்திகை : புகழ் உண்டாகும்.

☸ரிஷபம்:-

திருமணப் பேச்சுவார்த்தைகள் கைக்கூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் சாதகமான சூழல் அமையும். தொழில் சார்ந்த புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : உயர்வு உண்டாகும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
☸மிதுனம்:-

புதிய நபர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிடம் : பிரச்சனைகள் உண்டாகும்.
திருவாதிரை : மந்தநிலை உண்டாகும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.

☸கடகம்:-

பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். நிர்வாகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனைகளால் இலாபம் உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுநலத் தொண்டுகளில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள். புதிய சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : அதிர்ஷ்டகரமான நாள்.

☸சிம்மம்:-

நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். கல்வி பயில்வோரின் அறிவுக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : கீர்த்தி உண்டாகும்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
☸கன்னி:-

பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பணியில் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : உயர்வான நாள்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

☸துலாம்:-

வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். உறவுகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனைகளின் மூலம் இலாபம் உண்டாகும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
விசாகம் : சாதகமான பலன்கள் கிடைக்கும்.

☸விருச்சகம்:-

சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். சந்திராஷ்டம தினம் என்பதால் நெருங்கிய நபர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் பற்றிய கவலைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : கவலைகள் மேலோங்கும்.
☸தனுசு:-

கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தூரதேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நெருக்கமான உறவினர்களுக்கிடையே விரிசல்கள் குறையும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காது சம்பந்தமான உடல் உபாதைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : உடல் உபாதைகள் குறையும்.
☸மகரம்:-

உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
திருவோணம் : சாதகமான சூழல் அமையும்.
அவிட்டம் : மகிழ்ச்சி பிறக்கும்.
☸கும்பம்:-

உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் எண்ணியவை ஈடேறும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : புதிய வாய்ப்புகள் அமையும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : எண்ணம் ஈடேறும்.
☸மீனம்:-

அருள் தரும் வேள்விகளில் பங்கு பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட காாியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

பூரட்டாதி : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : அனுகூலமான நாள்

– Astro பகீரதன்

214total visits,2visits today