தினப்பலன் 26/11/2018

0
29

☸மேஷம்:-

உறவினர்களிடமிருந்து கிடைக்கும் சுபச் செய்திகளால் சுப விரயம் உண்டாகும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

அசுவினி : சாதகமான நாள்.
பரணி : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
கிருத்திகை : சுபிட்சம் உண்டாகும்.
☸ரிஷபம்:-

வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதுவிதமான முயற்சிகளால் சாதகமான சூழல் அமையும். பொருளாதார மேம்பாட்டிற்கான எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.
மிருகசீரிடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
☸மிதுனம்:-

புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழலும், உதவிகளும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சில தடைகளுக்குப்பின் எண்ணிய பலன்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கலந்து பேசுவது நன்மை அளிக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் உடலில் சோர்வும், பணியில் காலதாமதமும் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மிருகசீரிடம் : மாற்றம் பிறக்கும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : காலதாமதம் நேரிடலாம்.

☸கடகம்:-

மனதில் தோன்றும் பலவித எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. முக்கிய முடிவுகளில் முன்கோபத்தை விடுத்து தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். புத்திரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.

☸சிம்மம்:-

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் பண நெருக்கடியை தவிர்க்க இயலும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை தவிர்த்து கனிவுடன் பழகவும். பயணங்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதன் மூலம் மாற்றம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பண நெருக்கடி குறையும்.
பூரம் : கனிவுடன் பழகவும்.
உத்திரம் : மாற்றம் பிறக்கும்.

☸கன்னி:-

இணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் கவனத்துடன் செயல்படவும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
சித்திரை : அமைதி வேண்டும்.

☸துலாம்:-

அரசு தொடர்பான பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். போட்டித் தேர்வுகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் புதுவிதமான அனுபவத்தை உருவாக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் தடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : விவேகம் வேண்டும்.
சுவாதி : புதிய அனுபவம் கிடைக்கும்.
விசாகம் : தடைகள் அகலும்.

☸விருச்சகம்:-

முடிவுகளில் இருந்து வந்த தடுமாற்றம் நீங்கி தெளிவு பிறக்கும். எதையும் செய்வதற்கு உண்டான தன்னம்பிக்கையும், துணிச்சலும் பிறக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் திருப்தி உண்டாகும். முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : தெளிவு பிறக்கும்.
அனுஷம் : திருப்திகரமான நாள்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.
☸தனுசு:-

தொழில் நிமிர்த்தமான சிந்தனைகளும் அதற்கான தகுந்த வழிகாட்டுதலும் கிடைக்கும். நண்பர்களுடனான பயணங்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். மனை தொடர்பான பத்திரங்களை கையாளும்போது கவனம் வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
பூராடம் : சாதகமான சூழல் உண்டாகும்.
உத்திராடம் : சுமூகமான தீர்வு கிடைக்கும்.

☸மகரம்:-

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் பழகவும். தூரத்து உறவினர்களிடமிருந்து கிடைக்கும் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
☸கும்பம்:-

உயர் அதிகாரிகளிடம் கோபமான பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. இணையதளம் தொடர்பான பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழலும், உயர்வும் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான உதவிகளும், பதவி உயர்விற்கான முயற்சிகளும் நற்பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : உயர்வு உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
☸மீனம்:-

சாமர்த்தியமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பயணங்களின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். உறவினர்களிடம் உங்களின் செல்வாக்கு உயரும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரட்டாதி : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
ரேவதி : செல்வாக்கு உயரும்.

-Astro பகீரதன்

223total visits,3visits today