தினப்பலன் 9/11/2018

0
22

☸மேஷம் :-

உடல்நலத்தில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் கவனம் தேவை. பொது சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமற்ற சூழல் உண்டாகலாம். நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அசுவினி : பணியில் கவனம் வேண்டும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.

☸ரிஷபம் :-

அறச்செயல்களால் நற்பேறுகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சகஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களால் பொறுப்புகள் மற்றும் உயர்வு கிடைக்கும். கூட்டாளிகளால் தொழில் அபிவிருத்திக்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : நட்பு வட்டம் பெருகும்.
மிருகசீரிடம் : விவேகத்துடன் செயல்படவும்.

☸மிதுனம் :-

செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். புதிய முயற்சிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : அமைதி வேண்டும்.
திருவாதிரை : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
புனர்பூசம் : தன்னம்பிக்கை உயரும்.

☸கடகம் :-

புதிய தொழில் சம்பந்தமான முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

புனர்பூசம் : செயல்களில் வெற்றி கிடைக்கும்.
பூசம் : சுபமான நாள்.
ஆயில்யம் : தடைகள் அகலும்.

☸சிம்மம் :-

பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் சக ஊழியர்களினால் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். பாசன வசதிகள் மேம்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஒற்றுமை மேம்படும்.
பூரம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

☸கன்னி :-

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும். பணியில் சாதகமான சூழ்நிலை அமையும். இளைய உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். திட்டமிட்ட பணிகளில் சிறிது காலதாமதத்திற்கு பின்பு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : மேன்மை உண்டாகும்.

☸துலாம் :-

பிள்ளைகளின் மூலம் ஆதரவான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் சுபிட்சம் உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். பணிபுரியும் இடங்களில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : சுபிட்சம் உண்டாகும்.
விசாகம் : புதிய வாய்ப்புகள் அமையும்.

☸விருச்சகம் :-

உறவினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்ளவும். நிர்வாக துறையில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். கீர்த்தி உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்க காலதாமதமாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். சொத்துச் சேர்க்கைக்கான முயற்சிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.

☸தனுசு :-

தம்பதிகளுக்கிடையே உறவுகள் மேம்படும். வாகன பயணங்களால் இலாபம் உண்டாகும். கண் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். கால்நடைகள் மூலம் விரயம் உண்டாகும். நண்பர்களின் மூலம் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமான செய்தியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மூலம் : உறவுகள் மேம்படும்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

☸மகரம் :-

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். பொதுகூட்டப் பேச்சுகளில் எண்ணிய ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் வீண் அலைச்சல்கள் மற்றும் பதற்றம் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

☸கும்பம் :-

சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற அவச்சொற்களை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.
சதயம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூரட்டாதி : பயணங்களால் நன்மை உண்டாகும்.

☸மீனம் :-

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். தந்தை வழி உறவுகளால் சுபச் செய்திகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் வரும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

-Astro பகீரதன்

559total visits,2visits today