தினப்பலன் 04/11/2018

0
6

☸மேஷம் :-

பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் சுபச் செய்திகள் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : ஆதரவு கிடைக்கும்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.

☸ரிஷபம் :-

தொழிலில் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். தாய் வழி உறவினர்களின் ஆதரவினால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீகச் சொத்துகளால் விரயம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். கூட்டாளிகளின் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிடம் : சேமிப்பு உயரும்.

☸மிதுனம் :-

தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக காரியங்களை செய்வீர்கள். பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மிருகசீரிடம் : ஆதரவான நாள்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.

☸கடகம் :-

புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உயர்கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி உண்டாகும். தந்தை பற்றிய கவலைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : வெற்றிகரமான நாள்.

☸சிம்மம் :-

வாகனப் பயணங்களின்போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : உடைமைகளில் கவனம் தேவை.
பூரம் : விவேகம் வேண்டும்.
உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.

☸கன்னி :-

திட்டமிட்ட பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : பணியில் கவனம் வேண்டும்.
சித்திரை : மனக்கவலைகள் நீங்கும்.

☸துலாம் :-

நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : அமைதியை கடைபிடிக்கவும்.
விசாகம் : முடிவுகளில் கவனம் வேண்டும்.

☸விருச்சகம் :-

வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : விருப்பங்கள் நிறைவேறும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

☸தனுசு :-

அரசு தொடர்பான செயல்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உயர் பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : தெளிவு பிறக்கும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

☸மகரம் :-

தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பயணம் சார்ந்த தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
திருவோணம் : புனித யாத்திரை செல்வீர்கள்.
அவிட்டம் : மேன்மையான நாள்.

☸கும்பம் :-

தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். முயற்சிகள் கைக்கூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

☸மீனம் :-

சர்வதேச வணிகத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகளால் நன்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : சுபமான நாள்.
உத்திரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ரேவதி : மதிப்பு உயரும்.

-Astro பகீரதன்

136total visits,1visits today