பார்வைகள் பலவிதம்

0
63

குழந்தைகள் பெரும்பாலான நேரம் மேலே பார்த்த படியே இருப்பதால் ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் மீது பாசம் ஏற்படுகிறது. சில பெண்கள் குழந்தையை போலவே தலையைத் தாழ்த்தி மேலே பார்ப்பது பவ்யமான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது ஆண்களைக் கவர்கிறது.

இளவரசி டயானா திருமண வயதை அடைந்த பின்னும், இவளின் பார்வை குழந்தை போலவே இருந்ததால், அவரால் லட்சக்கணக்கான மக்களை பாசத்துடன் ஈர்க்க முடிந்தது.
ஆண்களுக்கு சுரங்கபார்வை என்ற திறன் உள்ளது. ஒரு குறிபிட்ட இலக்கை நீண்ட தூரத்திற்கு அப்பால் இருந்தும் குறிபார்க்க இது உதவுகிறது. இருந்தபோதும், குறிபிட்ட வட்டத்திற்கு அப்பால் உள்ள பொருட்களை அவர்கள் பார்க்க சிரமப்படுவார்கள்.

உதாரணமாக அலமாரி, பிரிட்ஜ் போன்றவற்றில் உள்ள அறைகளில் அவர்கள் ஒரு பொருளைத் தேடுவது கடினமாக இருக்கும். பெண்களுக்கு இது எளிதாக இருக்கும்.

பெண்ணின் பார்வை அகலமானது என்பதால் யாரும் கண்டறிய முடியாதபடி, ஒரு ஆணைத் தலையிலிருந்து பாதம் வரை அவளால் எளிதாக அளந்து விட முடிகிறது. இதனாலே பெண்களால் எப்போதும் கவனமாகவும் விழிப்புநிலையிலும் இருக்க முடிகிறது. ஆண் சிரமப்படவேண்டியுள்ளது.

ஆணிற்குக் குறுகிய பார்வை இருப்பதால் பெண்ணின் உடலில் மேலும், கீழும் அவனது பார்வை அலைவதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். இதனால், குற்றம் சாட்டப்படும் போது, பெண்களை விட ஆண்கள் எளிதில் சிக்கி விடுகிறார்கள்.

ஒரு அறையின் குறுக்கே இருக்கும் ஒரு ஆணின் கவனத்தைக் கவர ஒரு பெண் அவனது பார்வையை 2 அல்லது 3 முறை சந்தித்து விட்டு வேறுபக்கம் அல்லது கீழே பார்ப்பாள். இந்த பார்வையே அவளது காதல் ஆர்வத்தை வெளிபடுத்த போதுமானதாக இருக்கிறது. வெஸ்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மோனிகா முர் நடத்திய ஆய்வில், ஒரு பெண்ணின் முதல் பார்வையை புரிந்துகொள்ள முடியாத திறமையுடன் ஆண்கள் இருப்பதால், பெண்கள் சராசரி ஆணின் கவனத்தை ஈர்க்க 3 முறை பார்க்கிறார்கள். மெதுவாக புரிந்துகொள்ளும் ஆணின் கவனத்தை ஈர்க்க 4 முறையும், இன்னும் சிலரை 5 முறையும் பார்க்க வேண்டிள்ளது என்று கண்டறிந்தார்.

காதலர்கள் இருவரும் ஒருவர் கண்களை மற்றவர் ஊடுருவும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் கண்மணி விரிவடைந்திருப்பதைக் கவனிக்கி றார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவர் கண்கள் விரிவடைவதைக் கண்டுபரவசமடைகிறார்கள்.
கண் இமையை கீழிறக்கி, அதே சமயம் புருவங்களை தூக்கி, மேலே பார்த்து உதடுகளை லேசாக பிரிப்பது பல நுற்றாண்டுகளாக பெண்கள் பயன்படுத்தி வரும் கவர்ச்சி பார்வையாக உள்ளது. உடலுறவில் உச்சகட்ட நிலையை அடைவதற்கு முன் பெண்களின் முகத்தில் இப்படிபட்ட பாவம் தெரியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மர்லின் மன்றோ, டெபோரோ ஹேரி, ஷேரன் ஸ்டோன் போன்ற கனவுக்கன்னிகளின் காதல் பார்வை முத்திரைகள் இவை.


அதிகாரத் தோரணையுள்ளவர்கள் தலையை பின்னே சாய்த்து மூக்கின் ஓரமாக சாய்த்து பார்ப்பார்கள். தங்களது முக்கியத்துவம் உணரப்படவில்லை என்று உணர்பவர்களும் இப்படி பார்க்கலாம்.

புருவத்தைக் கீழிறக்கும்படி பார்ப்பது, மற்றவரை அடக்கவும் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்தவும் செய்யப் படுகிறது. அதேசமயம் புருவத்தை உயர்த்துவது, பணிவின் அறிகுறி.
உயரமான புருவங்கள் மர்லின் மன்றோவிற்கு பணிவான தோற்றத்தைத் தந்தது. நடுப்புறமாக கீழ் திரும்பிய புருவங்கள் ஜான்கென்னடிக்கு இருந்ததால் `எப்போதுமே அக்கறை உள்ளவர்’ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கை பெற்றுத்தந்தது.

-ஸ்வேதா சந்திரசேகரன்

2890total visits,6visits today