இளங்கோவன் பதவி பறிப்பு- நடந்தது என்ன?

0
54

திமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து டி. கே. எஸ் இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

2016ம் ஆண்டு கட்சியின் அனுமதியின்றி திமுக குறிப்பிட்ட தொகுதி எண்களை தாண்டி போட்டியிடும் என்று தன்னிச்சையாக அறிவித்தார். பிறகு கட்சி தலைமையின் கோபத்திற்கு ஆளாகி மன்னிப்பு கடிதம் கொடுத்து பதவியை காப்பாற்றிக் கொண்டார்.

சற்றுமுன் கட்சியின் மூத்த தலைவர் க. அன்பழகன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் காரணம் ஒன்றும் சொல்லவில்லை. பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றே உள்ளது.

கலைஞருக்கு அறிவாலயத்தில் நவம்பர் 15 ம் தேதி வெண்கல சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் திமுக சார்பில் விழாவிற்கான அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.கே.எஸ் இளங்கோவன் தன்னிச்சையாக சோனியா கலந்துக் கொள்வார் என குறிப்பிட்டு கூறியது கூட்டணி குறித்தும் தேர்தலுக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்சி சார்பு இயங்குதலாகவும் அமைந்து விட்டது. இந்த காரணத்திற்காக இளங்கோவன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

-வினோ

1169total visits,3visits today