ப்ரிட்ஜில் வரும் வியாதி – பகீர் ரிப்போர்ட்

0
87

நீங்கள் உணவு பொருட்களை நிறைய வாங்கி குளிர்சாதன பெட்டியில் அடுக்குபவரா !! வெளியூர் பயணங்களுக்கு செல்லும் முன் திரும்பி வந்தப்பறம் உபயோகப்படும் என்று பிரீஸிரில் உணவுப்பொருட்களை அடுக்கி வைப்பவரா. அப்படியென்றால் இதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். மின்சாரம் விட்டு விட்டு வந்தால் பிரீஸிரில் இருக்கும் உறைந்த உணவு உருகி மீண்டும் உறையும். இதனால் உணவில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் பெருகி எளிதாக உணவு விஷமாக மாறி பல்வேறு உபாதைகள் நேரும்.

நாம் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டில் மின்சாரம் தடையின்றி வந்ததா என்பதை தெரிந்துக்கொண்டால் ப்ரீஸர் உணவுகளை உண்பதா வேண்டாமா என்பதை தெரிந்துக்கொள்ளலாம். அப்படி தெரிந்துகொள்வதும் சுலபமே.

பிரீஸிரில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அது உறைந்து ஐஸ் ஆன பின் கிளம்புவதற்கு முன் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். மின்சாரம் தடையின்றி வந்திருந்தால் நாணயம் ஐஸ் மேலே இருக்கும். இடையில் இருந்தால் கொஞ்ச நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறது. அதுவே நாணயம் அடியில் இருந்தால் மின்சாரம் ரொம்ப நேரம் இல்லாமல் இருந்திருக்கிறது.

அந்த உணவுப்பொருட்களை உட்கொள்ளாதீர்.குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும்.

எனவே, எச்சரிக்கை தேவை! ஃபிரிட்ஜ் உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க!

2139total visits.