பசுமை விவசாயம்- மாற்று வழியா?

0
4

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்கள் நட்டு அது பயன்தர நாளாகும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் என்றாலும் அதில் மூன்று சென்ட் அல்லது நான்கு சென்ட் இடத்தை முதலில் திருத்தி, கீரை, காய்கறிகளை பயிர் செய்யலாம். 50 லிருந்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். விவசாயிகளின் உணவுத் தேவையும் பணத்தேவையும் ஒருங்கே நிறைவேறும்.

பூக்கள் என்றாலே தோவாளை, கிருஷ்ணகிரி, மதுரை சுற்றுவட்டாரங்களை நம்பித்தான் உள்ளோம். கோழிக்கொண்டை , துளுக்கமல்லி ( கேந்தி ) ஆங்கிலத்தில் marigold என்று அழைக்கப்படும் மலர்களை பயிர் செய்யலாம். நல்ல வெயில் மற்றும் அளவான தண்ணீர் போதும். பெரிதாக நோய் எதுவும் தாக்காது. இதுவும் விரைவில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

சுழற்சி முறையில் அறுவடைக்கு தயாராவது போல விவசாயிகள் திட்டமிடலாம். உடனடி வருமானத்திற்கு சிறந்த வழிகளை தேடவேண்டிய கட்டாயம்.

சென்னை, கோவை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் micro greens, sprouts இரண்டும் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

Micro greens : கீரையானது முளைத்து பதினைந்து நாட்களுக்கு முன் உணவாக எடுத்துக் கொள்ளும் போது அதன் சத்துக்கள் முழுவதும் கிடைக்கும் என்பதே இன்றைய உணவு நிபுணர்களின் கருத்து. மேலும் பெண்களுக்கு கீரையை சுத்தம் செய்யும் நேரமும், வேலையும் மிச்சம். கீரையை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்தி குடிப்பவர்களின் முதல் தேர்வு micro greens தான்.

கீரை வகைகள் மட்டும் அல்லாமல் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, ஆளிவிதை ( flaxseed) என்று மைக்ரோக்ரீன்ஸ் முறைகளில் வளர்த்துகிறார்கள்.

வசதி படைத்த நிறுவனங்கள் அல்லது தொழிலதிபர்கள் ஏசி வசதி செய்யப்பட்ட வாகனம் மற்றும் ஊழியர்களை ஏற்பாடு செய்து காலை முதல் மாலை வரை ஒவ்வொரு கிராமத்தின் முக்கியப்பகுதியில் இருந்து அன்றாட அறுவடைகளை விற்பனைக்கு எடுத்துக்கொண்டு அதிக demand உள்ள முக்கிய நகரங்களுக்கு விற்பனைக்கு எடுத்து செல்லலாம்.

விவசாய நிபுணர்களும் , விவசாயிகளும் கலந்து ஆலோசிக்கும் போது இன்னும் பல்வேறு விதமான திட்டங்கள் தோணலாம். மீனை கொடுத்து கொண்டு இருக்கும் நாம், நம் சகோதரர்கள் மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-மகிழினி தமிழ்

112total visits,2visits today