ஹர்ஷிதா பார்வை-4 vs நண்பர்கள் கவிதையும்

0
167

இத்தனை
ஈட்டிகளுக்கிடையில்
உன் உலகை
எப்படி படைத்தாய்
-சுந்தர் நிதர்சன்

ஏதாவதொரு குழந்தையிடம்
உடைபட காத்திருக்கிறதோ!
-தமிழ்க் காதலன் விக்கி

பயணக் களைப்பில்
புல்லின்மேல் ஓய்வு
உடையும் வரை
-Thiyan Eswar Dhika

அவளைப்போல்
ஒரு
மழலைக்காக காத்திருக்கிறேன்
குமிழாய்
என்னை குவித்தே …
என்
உடைதல் உறுதியே …
அதற்கான
அவளின் ஆயுதம்
விரலா
இதழா என்பதில்
இயங்குகிறது
என்
மொத்தங்கள் ..
-Sendhil Fdl

இந்த கண்ணாடி குமிழ்
உடைபடும் நேரம் வரை
கண்களை அதில் பதிக்கிறேன்
-Raja Arun

உடையுமுன் ஒருமுறையேனும்
மண்ணை முத்தமிடும்
ஆசையில் நீர்க்குமிழி
-Thiyan Eswar Dhika

பயிலும் வரை பல கனவுகளோடே
வளர்ந்தேன்
முடித்ததும் வேலை
கிடைத்ததும் வீடு
பயணத்திற்கு மகிழுந்து
விடுமுறையில் கொண்டாட்டம்
ஆண்டிற்கொரு இன்ப சுற்றுலா
நினைத்தவளுடன் திருமணம்
நண்பர்களோடு குதூகலம் என
இன்னும் பல
வளாகம் விட்டு வெளிவந்து
வேலை தேடி திரியும் போதே
தெரிந்தது வாழ்க்கை ஒன்றும்
திரைப்படமல்ல
நாம் நினைத்தபடி காட்சியமைக்க
ஆதவனின் வெப்பத்தில்
உடைபடும் நீர்க்குமிழியாய்
நொடியினில் தகர்ந்தது
என் இன்ப கனவுகளும்
-Santhosh Sasi

நுனி புற்களில்
தப்பிய பனித்துளி
அதன் மடிதனில்
ஒய்யாரமாய்….
-Srividhya Ramahandran

பட்டாம்பூச்சிகள் முகம் பார்க்கவே
பிறந்தேன்…
காற்றே…
அவசரப்பட்டு உடைத்திடாதே…
-Yazhini Sri

நிலையில்லாததெனினும்
ரசிக்க வைத்து ஈர்த்துக் கொள்ளும் குமிழி
வாழ்க்கையைப் போல்!
-மகிழினி காந்தன்

மனிதர்கள் பலவிதம்
செய்யும் நன்மைகள் கணக்கற்றவை
கணத்தில் காற்றில் கரைபவை
நிலையற்ற கலைக்கூடமிந்த பசுமை
கண்ணாடி வளைய வாழ்வு…
-Sita G

பனிக்கால பாதுகாப்பில்
கண்ணாடி மாளிகையில்
பச்சைப் புல்!!!
-தோழர் குட்டிச் சுவர்

புல்வெளிச் சூழலின்
தற்காலிக பாதுகாவலன்!
குமிழ்வடிவோன்
-SaRvesh R

அந்த அழகிய இதழை முதன்முதலாய் உன் அழகில் தானே ரசித்தேனே
என் சோகத்தை உன்னிடம் சொல்லவே வந்தேன் நீயே வேண்டாம் என குமிழால் போர்த்திக்கொண்டாய்
அவள் யாரென்றே தெரியாத புல்வெளியில் உன் குமிழ் கண்ணாடியால் என் கண்களில் பிரதிபலித்தாள்
இது உன் இயற்கையாக அமைந்த அழகாக கூட இருக்கலாம்……….
இழையனின் கவிதையில்…….
-Felix Feminian

சில நொடியெனும் சிறை பிடித்தேன்
என்பதை மறந்து விடாதே…
-Nandhanika Ray

அழகிய வாழ்க்கை என
அடம்பிடிக்கும் மனம் அது
வழுகிப்போகும் நிலையை
விரும்பாத மனக்குரங்கு
பளிங்கு மாளிகை போல
படமிடும் மனத்திரை
எழிலாக எல்லாம் எண்ணும்
எண்ணி முடிப்பதற்குள்
எழிலவன் வரவு வர
எல்லாமே மாயையாகும்
இதுதானே வாழ்க்கை நிலை
எடுத்தியம்பும் இயற்கை நிலை
-Anura Kandasamy

உன் மௌனம் என்ற குமிழ்
உள்ளே சிக்கிய புல்நுனி
நான்…
-கவி காமாட்சி

810total visits,2visits today