இந்தியன்-2 வில்லன் யார்?

0
42

1996ம் ஆண்டிற்கு பிறகு பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும், உலக நாயகன் கமலஹாசன் நடிக்க இருக்கும் இந்தியன் இரண்டாம் பாகம் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் லொகேஷன் பார்க்க இயக்குனர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் ஹெலிக்காப்டரில் சுற்றியது எல்லாருக்கும் தெரிந்த கதை தான்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஏற்கனவே கதாநாயகியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட்டுகள் போடப்பட்டு வருகிறது. இது தவிர 20நாட்கள் போலந்து, உக்ரைன் நாடுகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே அஜய் தேவ்கான் நடிப்பதாக இருந்தது. ஷங்கரின் 2.0 விழாவிலும் கமலின் விஸ்வரூபம்-2 விழாவிலும் அஜய் தேவ்கான் கலந்துக் கொண்டு பரபரப்பு செய்திகளை உண்மை என்றாக்கினார்.

தற்போது என்ன ஆனதோ, வில்லன் கதாபாத்திரத்திற்கு அக்‌ஷய்குமார் நடிக்க இருக்கிறார். அக்‌ஷய்குமார் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– பரட்டை பாபு

1176total visits,7visits today