ஜெயிப்பார்களா???

0
49

தன் ஆஸ்தான நாயகன் சந்தானத்தை வைத்து “SMS” M.ராஜேஷ் இயக்குவதாக இருந்த படம், தேனான்டால் பிலிம்ஸ் இடம் இருந்து பிரபுதேவா வசமானது

தயாரிப்பு சிக்கலால் தாமதமாகி கொண்டே இருப்பதால், அதற்கு முன்பு அடுத்த படத்திற்கு தாவிவிட்டார் இயக்குனர் ராஜேஸ்

தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்குகிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனோடு வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் கைகோர்த்து இருந்தாலும் அது தன் சிஷ்யன் பொன்ராம்க்காக கதை வசனம் பொறுப்பு ஏற்று இருந்தார்.

அதன் பிறகு
இந்த படம் மூலம் இயக்குனராக சிவகார்த்திகேயனோடு கை கோர்க்கிறார் ராஜேஷ்.

இருவருக்குமே காமெடி நல்லா வரும்னாலும், பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு பிறகு பெரிய அளவுல ராஜேஷ் வெற்றி கொடுக்கவில்லை.

கடைசியா எடுத்த கடவுள் இருக்கான் குமாரும் பெருசா பேசப்படல.

படமும் வந்து ஒன்னரை வருசம் ஆகுது. சந்தானம் படமும் தள்ளி போகுது. ஆகையால் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கார்.

சிவகார்த்திகேயனுக்கும் காமெடி ஹீரோவில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்த வேலைக்காரன் பெரிய வரவேற்பு இல்லை. எனவே அவரும் காமெடியில் தன்னை நிரூபிக்க வேண்டும்.

இப்ப பொன்ராம் இயக்கத்தில் சீமைராஜா படத்தில் நடித்துக்கொண்டு இருக்கார். அதை முடித்து இந்த படத்தில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஷ்யன் பொன்ராம் படத்தை முடிச்சிட்டு குரு ராஜேஷ் படத்துக்கு வரவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதை ஞானவேல் ராஜா வின் ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்

– சினிமா பைத்தியம் கருவாயன்

2519total visits,2visits today