ஸ்ரீகட்ட கிளுகிளு பஞ்சாங்க ராசிபலன்

0
212
ஹேவிளம்பி வருட ராசி பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே:
இந்த வருடம் உங்களுக்கு நிச்சயம் பிகர் வருடமா அமையும். காறித்துப்பின பிகர் கூட திரும்பி புன்னகைத்து விட்டு போக கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு சந்திரன் உச்சம் பெற்றிருக்கறாதால நீங்க சந்துல சிந்து பாட வாய்ப்புக்கள் உண்டு. வாஸ்துபடி வாயை மட்டும் கொஞ்சம் கட்டினிங்கன்னா நீங்க ஓஹோன்னு வர வாய்ப்பிருக்கு. பரிகாரமா பூனம் பாண்டே புடைவை கட்டின போட்டோவை பர்ஸ்ல வச்சிகிட்டா பக்காவான பிகர் செட் ஆகும்.
ரிஷப ராசி நேயர்களே:
இந்த வருடம் அவ்வளவு உகந்ததா இல்லை. காத்துருந்தவன் பிகரை நேத்துவந்தவன் ஆட்டைய போடுற மாதிரி சம்பவங்கள் நடக்கும். மாமன் பொண்ணே அண்ணான்னு கூப்புடும். அதுனால ஒரு வருஷம் மாமா வீட்டு பக்கம் போய்டாதீங்க. சரி..அக்ரஹார அண்ணான்னு நினைச்சு மனசை தேத்தினாலும், ரக்‌ஷாபந்தனுக்கு கைல ராக்கி கட்டி கன்ஃபார்ம் பண்ணிடும். பரிகாரமா கைல இருக்குற பிகருக்கு அப்போ அப்போ ஃபுல் டாக் டைம் டாப் அப் பண்ணா பிகரை தன் பாக்கெட்லயே தக்க வச்சிக்கலாம்..
மிதுன ராசி நேயர்களே:
இந்த வருடம் உங்களுக்கு சுமாரா இருக்கு, திவ்யா போனா திரிஷா அப்படின்ற பொன் மொழி உங்களுக்கு பொருந்தும். கீரை விக்கிற குருவம்மா, மீன் விக்கிற பருவம்மா போன்றவர்களிடமும் தாங்கள் கடலை போடுற அவலம் நிகழலாம். இருந்தாலும் மன உறுதியுடன் கடலை போட்டா மன உளச்சைல்லேருந்து தப்பிக்கலாம். பரிகாரமா கருப்பனுக்கு கடா வெட்டி தலைக்கறியா பாத்து பங்காளீகளூக்கு போட்டா வறட்சிலேருந்து தப்பிக்கலாம்
 கடக ராசி நேயர்களே:
தங்களுக்கு இந்த வருஷம் அமோகமா இருக்குன்னு சொல்றதை விட தாங்கள் கடலை போட்ட பெண்களுக்கே சாதகமா இருக்கு. டக் டக்னு அவங்களுக்குல்லாம் வரன் அமையும். அவங்க கல்யாணத்துக்கு போய் பன்னீர் தெளிக்கிற பிகர்ல நல்ல பிகரா பாக்றது உங்களுக்கு நல்லது. உங்க உள்டப்பிய க்ளீன் பண்ணீ சாணி தெளிச்சு கோலம் போட்டு வைக்கிறது நல்லது. உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு பொண்ணூ பாக்க போகும் போதெல்லாம் அந்த பொண்ணை கலாய்ச்ச பாவம் உங்களை சுத்தி யடிக்குது. இருந்தாலும் வியாழனோட ஒரு துணைக்கோள் மட்டும் உங்களூக்கு சாதகமா இருக்குறால ஓரளவு கடலை போட்டு தப்பிக்கலாம்.
சிம்ம ராசி நேயர்களே:
தங்களுக்கு இந்த மன்மத வருடம் ரொம்ப கேவலமா இருக்கு, சள்ளையான பிகர்ளாம் உங்க முன்னாடி வரும், ஆனா அப்போ பாத்து உங்க சட்டை பித்தான் பிய்யும், பேண்ட் ஸிப்பு கூட கிழியும், தலைல உள்ள விக்கு பறக்கும். காக்கா தலையில கக்கா போகும். மொத்ததுல இந்த வருடம் சல்லி பைசாவுக்கு கூட நீங்க தேற மாட்டிங்க. எங்கியாச்சும் காட்டுல ஒடிப்போய் தலைமறைவா இருக்குறது நல்லது. கொய்யால..உங்களுக்கு பரிகாரமே இல்லைன்றேன்..
கன்னி ராசி நேயர்களே:
உங்க ராசியில தான் கன்னி இருக்கும், ஆனா குடிக்க பச்ச தண்ணீ கூட கிடைக்காது. நெப்டியுன் உங்க ஜாதகத்துக்கு உச்சம் பெற்றும் புளுட்டோவை பாக்றதால நீங்க பண்டோரா கிரகத்துல போய் கடலை போட்டாலும் உங்களுக்கு பிகர் சிக்காது. வேணும்னா டாக்கிங் டாம் மாதிரி ஆப்ஸ் போட்டுகிட்டு அதையே பிகரா பாவிச்சு, ஐலவ்யு சொன்னா அதும் திரும்ப சொல்லும். பரிகாரமா உங்க ஊர்லேருந்து வேளாங்கன்னிக்கு உருண்டு போனாலும்…ஒண்ணூம் வேலைக்காவாது.
துலாம் ராசி நேயர்களே:
இந்த மன்மத வருடம் ஆவரேஜா இருக்கும், போன வருஷம் தேறாதுன்னு ஒதுக்கி வச்ச பிகர் கூட கடலை போட்டு ஒப்பேத்த வேண்டிய நிலைமை வரலாம். போன வருஷம் பட்டைய கிளப்புற பிகர் கூட மாயாஜால்ல படம் பாத்த நிலைமை மாறீ….புழுதி வாக்கத்துல இருக்குற குமரன் தியேட்டர்ல சுமாரான பிகர் கூட படம் பாக்குற நிலைமை உருவாகும். ஒரு இளநீர்ல ரெண்டு ஸ்ட்ரா போட்டு பிகரோட குடிச்ச நிலைமை மாறிப்போய் ஒரு டீயை ஒன்பை டூ குடிக்கிற நிலைமை வரலாம். பரிகாராமா, பக்கத்து வீட்டு மாமிக்கு ரேஷன் சாமான் வாங்கி தந்திங்கன்னா..நிலைமை மேம்படும்.
விருச்சிகம் ராசி நேயர்களே:
இந்த மன்மத வருடம் பிச்சிகிட்டு போவும். போனவருசம் கார்ல போறாப்ப கூட திரும்பி பாக்காத பிகர்லாம், இப்பொ கேரியர் இல்லாத சைக்கிள்ல போகும் போது கூட லிஃப்ட் கேட்பாங்க. பூனம் பாண்டேகிட்டேருந்து கூட ‘’ஹவ் ஆர் யு ஹனி’’ன்னு மெசெஜ் வரும். நீங்க தடுக்கி விழுந்தா கூட ஸ்டெல்லா மேரிஸ் பிகர் மேலதான் விழுவீங்க. பஸ்ல எல்லா சீட்டும் ப்ரியா இருந்தா கூட பட்டைய கிளப்புற பிகர் பக்கத்துல வந்து உட்காரும். ட்ரெயின்ல உங்க அப்பர் பெர்த் லோயர் பெர்த் சைட் பெர்த் எல்லாத்துலயும் காலேஜ் பிகரா வந்து அம்மும். மொத்தத்துல குஜாலான வருடம் இது. வெள்ளீ கிழமை பிகர் வர நேரமா பாத்து சமயபுரத்தாளூக்கு விளக்கு போட்டா கோவிலை விட்டு வெளீய வரத்துக்குள்ளா எட்டு பிகர் செட் ஆகும்.
தனுசு ராசி நேயர்களே:
உங்களூக்கு இந்த மன்மத வருடம் ஒஹோன்னு இல்லாட்னாலும் ஓரளவு இருக்கும். கிளூ கிளூப்புக்கு குறை இருக்காது. எப்பவோ சைட் அடிச்ச பிகருல்லாம் ஃபேஸ்புக்ல வந்து ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்புவாங்க. அதுக்காக விடிய விடிய கடலை போட்ட்டு மாட்டிக்காதீங்க. மெர்குரி உங்கள மொரைச்சு பாக்குறாதால..அவங்க புருசன் கைல சிக்கிடுவீங்க. அப்படி சிக்கினா ஒடி தப்பிக்கிறமாதிரி பாடிய ஃபிட்டா வைச்சுக்குறது அவசியம். ஏதோ ஒரஞ்சாரமா கடலை போட்டா ஓரளவு தப்பிக்கலாம். பரிகாரமா..அனுஷ்கா ஷர்மா போட்டோவ பர்ஸ்ல வச்சிக்கனும்..அவ்வளோதான்
 மகர ராசி நேயர்களே:
இந்த மன்மத வருடம் சுமாரா இருந்தாலும் கெடு பலன்களை கொடுக்காதுன்னு நம்பலாம். அதுக்கு முதல்ல கேவலமான டியோவை மாத்தி ஷாட் போட்டுக்கனும். ஒரு மாசத்துக்கு மேல ஒரே ஜீன்ஸை போடுற பழக்கத்தை மாத்தி அதிகபட்சம் 25 நாள்ன்னு வச்சிக்கனும். பிகர் ஏதாச்சும் பாக்கும் போது பூனை, நாய் குட்டிகள் மேல பாசமா இருக்குற மாதிரி நடிக்கனும். அவங்க அந்த பக்கம் போகும் போது கல்லை எடுத்து அடிச்சிக்கலாம். ஏழுகழுதை வயசானாலும் கொஞ்சம் கூட வெட்கபடாம ஒரு நோட்டை தூக்கிகிட்டு ஆர்ட்ஸ் காலேஜ் வாசல்ல போய் நிக்கனும். பரிகாரமா கபாலிஸ்வரர் கோவில் வாசல்ல உட்காந்து பிச்சை எடுத்தா..ஐயோ பாவம்னு பிகர்லாம் திரும்பி பார்க்க வாய்ப்பு இருக்கு
 கும்ப ராசி நேயர்களே:
இந்த மன்மத வருடம் ரொம்ப கேவலமா இருக்கும், பஸ்ல கிழவிகளா ஏறீ வேதனைய கிளப்பும், போன வருடம் கஷ்டபட்டு பிக்கப் பண்ணதுல்லாம் பிச்சி கிட்டு போவும். போன வருஷம் ஐஐடி பிகர்லாம் உங்கள சுத்தி வந்த நேரம் போய்..இப்பொ டுடோரியல் காலேஜ் பிகர் கூட திரும்பி பாக்காது. ஒரு சள்ளையான பிகர் திரும்பி பாக்கும் போது நீங்க கொட்டாவி விட்டு காரியத்தை கெடுத்துருவீங்க. கிழிஞ்ச பனியனோட ஒட்டடை அடிக்கும் போது எதிர் வீட்டு பிகர் பாத்து காறீதுப்பிட்டு போவும். பரிகாரமா ஞாயித்து கிழமை சர்ச்க்கு போய் மெழுகு வர்த்தி ஏத்தி கதறி அழுதா..மேரிமாதா கண்ண தொறக்க வாய்ப்பு இருக்கு
 மீன ராசி நேயர்களே:
ஊரான் பிகரை உத்து பாத்து காலம் தள்ற டைம் முடிஞ்சது..இனி எனக்கும் நாலு பிகர் இருக்குன்னு நெஞ்சை நிமிர்த்து சொல்ற காலம் வந்துடுச்சு. போன மாசம் ’அன்புள்ள ரஜினிகாந்த்’ மீனா மாதிரி அங்கிள்னு கூப்ட பிகருல்லாம், மனம் திருந்தி ’எஜமான்’ மீனா மாதிரி..மாமான்னு கூப்பிட்டு குதுகலபடுத்துவாங்க..முறைப்பொண்ணே மொறைச்சு பாத்த காலம் போயே போச்சு. ஸ்கூட்டியில உங்கள கிராஸ் பண்றவங்கள்ளாம் ஸ்லோ பண்ணீ ஓரு ஃப்ளையிங் கிஸ்ஸ பறக்க விட்டு போவாங்க. மொத்தத்துல இந்த வருடம் உங்களூக்கு குஜாலான வருடம். அப்போ அப்போ ஃபேஸ் புக் இன்பாக்ஸை மட்டும் கிளீயர் பண்ணீடிங்கன்னா..எப்பேர் பட்ட காதல் தண்டபாணீ வந்தாலும் உங்களை அசைச்சுக்க முடியாது.
கட்ட தொர

1275total visits.