கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பேட்டி

0
37

*காளி*

2013 ல் “மிர்ச்சி சிவா” “பிரியா ஆனந்த்” நடிப்பில் வெளிவந்த “‘வணக்கம் சென்னை”” படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து “கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்” இயக்கவிருக்கும் படம், “காளி”..

இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த்து பல பிரச்சினைகளுக்கு பிறகு சிம்பு விலகிகொள்ள இப்பொழுது இசையமைப்பாளரும் நடிகருமான ” விஜய ஆன்டனி ” நடிக்கிறார்.

நாயகன், இசையமைப்பாளர் என்ற இரண்டு பொறுப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பையும் அவரே கையிலெடுக்கிறார்.

விஜய் ஆண்டனியிடம் இரண்டு கதையை கூறியதில் சிம்புவிற்க்காக எழுதிய இந்த கதையை தேர்ந்தெடுத்ததோடு தயாரிப்பையும் தானே பார்த்துக்கொண்டார் விஜய் ஆண்டனி.

படத்தில் “அஞ்சலி” “சுனைனா” வோடு சேர்த்து 4 நாயகிகள் நடிக்கிறார்கள்.

4 நாயகிகள் இருந்தாலும் இதில் காதல் காட்சிகளை தாண்டி பல விசயங்கள் ரசிகர்களை கவரும் என்று இயக்குனர் கூறுகிறார்.

கிருத்திகா உதயநிதி பேசும் போது ஒரு பெண் இயக்குனராக நிறைய சவால்களை சந்தித்து இருந்தாலும், தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி நிறைய உதவியாக இருந்ததாக கூறுகிறார்.

விஜய் ஆன்டனியும் கிருத்திகா உதயநிதியும் லயோலாவில் ஒன்றாக படித்து இருந்தாலும் அப்போது அவரை யாரென்று தெரியாது என்கிறார்.

மேலும் உதயநிதியை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு வீட்டில் சினிமாவை பற்றி பேசுவதில்லை என்று கூறினார். அவருக்கான கதை அமையும் போது அதை பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார்.

அடுத்த படத்தை தனுஷ் அல்லது விக்ரமை வைத்து இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

-சினிமா பைத்தியம் கருவாயன்

படபிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேளைகளில் இருக்கும் இந்த படம் சித்திரை 1 அன்று வெளியாகும்

818total visits,6visits today