லீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்

0
295

மரணித்தலில்
ஓர் இயக்கம்
-அன்பில்பிரியன் அன்பில்பிரியன்
இலையுடன் இறகுகளும் உதிரும் காலம்.
-Kamesh Kamal

மரணிக்கும் மனிதத்தை
தாங்கிப்பிடிக்கும்மனிதம் இருக்கும் வரை
மறையுமா மண்ணில் மனிதம்
இறக்கினும் இன்னோருயிரின்
இயக்கத்தில் வாழும் மனிதம்
-Sivagananaraj Suvanthini Sivasuvanthi

சிறகை அசைக்காமல்…
உயரப்பறக்க ஆசை…
உதிரும் சருகு ஊர்தியாக..
சிலநொடிப்பயணம்…
மண்ணில் விழும்வரை மகிழ்வாய்…
– Yazhini Sri

ஒற்றை இலையில் சிக்கி கொண்ட ஈ.
இந்த இடம் வருவதற்கு முன்னால் ஊரெல்லாம் அலைந்து திரிந்தது.
சில நொடிகள் யாரோ பச்சை தாவணி அணிந் பெண்ணின் தோள் மீது!
சில நொடிகள் வெட்டப்பட்ட இறைச்சி துண்டின் மீது!
சில நொடிகள் ஊர் எல்லையில் இருக்கும் பெரிய கருப்பசாமிக்கு படைக்கப்பட்ட கெடா விருந்தின் எச்சில் இலைமீது!
சிவ நொடிகள் அனுமதி மறுக்கப்பட்டு கோவில் வாசலை தினமும் கடந்து செல்லும் பெயர் அறியா என் சகோதரன் கால் செருப்பின் மீது!
இப்போதிருப்பதோ என்றோ ஓர் நாள் என் காதலை ஏற்க மறுத்த என் முன்னாள் காதலி வீட்டின் நிழல் தரும் மரத்தின் ஒற்றை இலை மீது.
கடந்தே செல்கிறேன் நான்.
அவளின் வீட்டையும்,
என் நினைவுகளையும்.
இப்போது நானும் அந்த ஈயை போலத்தான் என்பதை புரிந்து கொண்டால் நீயும் என் தோழனே!
-Abu Sheit

பறப்பது
இலை
மட்டுமில்லை
அதை
ஸ்கெட்போர்டாக
பயன்படுத்திய
‘ஈ’யும்தான்
-Chanakya VisnuGupta

இறந்த இலையும் பறந்தது
ஈயின் இறகுகளால்
-மனோகரன் உழவன்

விழும் வரை நீ பற!
விழுந்தபின் நான் பறக்கிறேன்!
உன் நினைவுகளுடன்!!!
-Giri Tharan

இலையுதிரும் போது
ஈக்களுக்கும் வாழ்வளித்து
மெரினா திரட்சியில்
ஞானம்
பிறக்கும்
வஞ்சித்தவர்களுக்கு
நான் ஈ வந்து
நாண வைக்கும்
-துவாரகா சாமிநாதன்

இறந்த இலையில்
பயணிக்கும் ஈ
நினைவுபடுத்தி போனது
பிணத்தை கொண்டு
நடக்கும் அரசியலையெனக்கு
-Thiyan Eswar Dhika

சற்றே இளைப்பாறு!
சிறிது நேரம்தான்!
பின் மீண்டும் உயரப் பற
-Giri Tharan

பறத்தலை
பற்றியிருக்கிறது
சிறகு
-Vinoth Spike

உதிர்ந்த
இலையில்
ஊரும்
ஈக்கு
தெரிய
வாய்ப்பில்லை
இலையுதிர் காலம்!
-இராஜா நவநீதம்

இலைகள் வீழ்கிற போது
மஞ்சள் பூசிக்கொள்கின்றன
-Ramesh Kannan

ஈரஇலை ஈ’யையும் ஈர்த்தது !!!
-Madhan kumaRr

அந்திப்பொழுதின்
தென்றல் ஸ்பரிசத்தில்
தன்னை விடுத்துக்கொண்ட
இலையோடு தவழ்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும் ஈ யின் இறகுகளில் மரத்தின் ஆன்மா..
-Raja kumaran

உதிர்ந்த இலை
விழுகையில் பறக்க
எத்தனிக்கிறது

-இரா.கவிமலை து.வெள்ளாளவிடுதி

உதிர்ந்த நிலையிலும்
சுமக்கும் இலை
அறியாது ஈ
விலகும் நேரத்தை
-Thiyan Eswar Dhika

இலைக்கு
பறக்கும் ஆசை
ஈக்கு
தடுக்க ஆசை
-சுந்தர் நிதர்சன்

வீழும் இலை
இரட்டைச் சிறகோடு
அமர்ந்திருக்கும் ஈ !
-மகிழ்நன் மறைக்காடு

இறந்து விழுகிறது
இலை
தரையைத் தொடும்வரை
மறந்து தொலைக்கிறது
தனக்கு இறகு இருப்பதை
மறந்த ஈ
-Vanniappan Raja

வறட்சியில் வதங்கியதா
உன் மனம்
இன்னும் கொஞ்சம்
இறுக்கிப்பிடி
இதோ வருகிறது மழை
நீயே உதிர்ந்தால்
நான் மட்டும் எப்படி
உயிர்பேன்,
உன் இலை நடுவே
என் இதயம் நுழைக்கிறேன்
இலை அடுத்து ஈ தானே தமிழில்
உயிர்துறக்கும்,
நீ மட்டும் மனம் தளராதே,
முதல் உயிரே…
-மகாநதி

காலத்தின் கட்டளையை
அனிச்சை நிகழ்வாக்கிய
ஈயின் எதிர்பாரா தடுமாற்றத்திற்கும்
இலையின் தள்ளாட்டத்திற்கும்
இடைப்பட்ட மன கதகதப்பை
ஒத்திருந்தது நம் முதல் சந்திப்பு
மூன்று நொடியில் நிகழ்ந்த
மூவாயிர யுத்தகணமது மட்டுமே…
-சீதா ஜீ

ஒரு யுத்தகளத்தில் தப்பித்த
மாணவனாய் பறந்து வருகிறேன்…
சருகான போதும் இறகாய்
துணைக்கு வருகிறாய்
தான் வீழ்ந்தபோதும் துணைக்கு வரும்
மீனவன்குடி போல் ..
தூரத்து மணல்வெளியில் விழுந்து
உன்னை புதைக்காமல்
துள்ளும் நதிநீரில்
விட்டு விடுகிறேன்…
நதியோரம் அமர்ந்திருக்கும்
ஏதாவதொரு கடவுளின் காலடியில்
சென்று சேர்வாய்..
நன்று செய்தோரெல்லாம்
கடவுளின் காலடியில் ஒருநாள்..
சில நேரம் கடவுளாகவே !!!
-நிர்மலா கணேஷ்

நுல் அறுந்துப்போன காத்தாடி நான்!!
ஊசலாடும் விதியில் இது என்ன!!
கண நேர சந்திப்பு…
உன் இம்மியளவு இளைப்பாறலுக்கா?? எஞ்சியிருக்கும் என் உயிராற்றலுக்கா??
உள்வாங்கி வெளியிட்டு போ
என் வாழ்க்கை அரத்தங்களையும்…
ஊசலிலும் உதவிய உறவென்று… பற்றிக்கொண்ட கதகதப்பு போதும் நான் சறுகாகி போக…
நி மெம்மேலும் பறந்தோங்கி போக…
-ஸ்வேதா சந்திரசேகரன்

சருகாகி விட்டேன் என்று சலனம் வேண்டாம் உரமாகி விடுவேன் உறுதியாக
-நதனிகா ராய்

வீழ்ந்து போகும் தருணங்களில்
இறுதி உயிர் மூச்சில்
இறுகக் கால்பதித்து
இயற்கைப்போராட்டத்தில்
இழந்ததை ஈடுசெய்யவேனும்
இதயத்தை எழுப்ப நினைக்கையில்
நோய் பரப்பும் ஈயாக நினைத்து
நோகவைத்துச் செல்கிறது
நம்பிக்கையற்ற சமூகம்!
-ரெஜினா குனநாயகம்

தடுமாறி விழவிருக்கும் நிலையில் கூட
இடறி நீ வீழ்ந்திடாமல் என் அன்பே
படகாகி உனைக்காக்கும்
உள்ளம் நான் கொண்டேன்
சருகென்று எனை எண்ணிடாதே அன்பே
உருகின்றேன் என் உயிர் தந்து
உனைக்காக்கும் காதலுடன்
மண்ணில் நான் வீழ்ந்து
மக்கித்தான் போனாலும்
விண்ணுயர நீ பறந்து
விளையாட வேண்டும் என் அன்பே
-Anura Kandhasamy

உதிரும் சருகொன்றினை
காற்று ஏந்திக்கொள்கிறது
ஒரு தாயின் அரவணைப்பென
மெல்லத் தரைசேர்க்கும்
பயண ஒத்திகையில்
இறகுகள் ஈந்து உதவுகிறது
ஈ ஒன்றும்.
-Saya Sundaram

இலைச்சருகில் இளைப்பாரும் ஈ க்கு தெரிந்திருக்க நியாயம்
இல்லை!
இலைசருகிற்கு சிறகுகள்
இல்லையென்பது !!!
-Saravanan Shankar

இறப்பிற்கு
கிடைத்தது
இறகு
-செல்வக்குமார் சங்கரநாராயணன்

நானும் பறப்பேன்தான்…
ஆனாலும் உன்னுடன் பறந்து மெய்மறப்பது அலாதிதான்.
-Raja Arun

சிறகுகள்
எனக்கு
இல்லை
அதனாலென்ன
பறப்போம்
வா
என்னுடன்.
-M.Boopathy Raja

உதிரும் சருகில்
உலரா பசுமையின் மிச்சம்
மொய்த்திடும்
ஈயதன் உணவாய் …
உதிரலின் பின்னும்
இன்னொரு பயணம்
உயிரதை துறந்தும்
உறவதை பேசி …
நகலென கடந்திடும்
நடைப்பிண சருகதில்
நினைவு ஈக்கள்
நன்றியை நவில்கையில்
நாளதை கடத்தியே
நான் …
-இரா. செந்தில் குமார்

உதிர்ந்த சருகும்
இறுகப்பற்றும் ஈயும்..
நினைவூட்டுகிறது…
நம்மையும்…
நமக்கான வாழ்வையும்..!
-குரு.முருகன்

ஈதல்
இசைபட வாழ்தல்.
இவையிருப்பின்
இனிக்கு முன் சாதல்
காய்ந்த இலையொத்த
உன்னுடலின் ஊர்வலத்தை
ஈயென மொய்ப்பர்
அருமை மக்கள்.
-Gopi Nath

ஈயென இளித்து
இவ்வாழ்வைக் கழித்தே
சோர்ந்திடும் தருணம்
சற்றே இளைப்பாற
சாமரம் கிடைப்பதில்லை
சப்பரம் இருப்பதில்லை
அலைந்தாடும் சருகொன்று
அதுவும் நிலைப்பதில்லை.
-Gopi Nath

லீ

மெய் !
-M.S.Duraimuthu

ஈ’கை’
‘இலை’யெனில்
என்னாகும்
இவ்வுலகு ?
-Gopi Nath

வாழும்போதில்லை
உன்னுடன் அதனாலென்ன
சகியே
வீழும்பொழுதில்
ஏந்திக்கொள்கிறேன்
வீனையென ஏந்திழையே..
-Selva Sarvesh

உதிர்ந்ததில்
துளிர்க்க
தேடும்
ஓர்
உயிர்….
-Girubagar Shanmugam

சருகிலையில் பயணம்
இறக்கை மறந்து போனது
அண்டிப்பிழைப்பது கையாலாகத்தனம்.
-Vasanthadheepan

துணையில்லா இவ்விலையை
நம்பியிருக்கும் ஈயைப் போலத்தான்
நாமும் ஏதோ ஓர்
அன்பில் பிணைந்திருக்கிறோம் !
-Sekar Sakthivel

தாயின் சாகாவரத்திற்கு
தன்னையே சாக கொடுக்கும்
தனையனின் பயணத்தில்
தார்மீகமாய் கரம்கோர்க்கிறேன்…
உன் வேருக்கு நீ உரமாகிடும்
உலாவில் நின் உடனிருப்பதே வரம்!
உலர்ந்த பின்னும்
உனக்குள் தான் எத்தனை ஈரம்..!

– நான் ஈ
-Ashwin Vijay

இறகுகளின் தொய்வில்
ஓய்வு வேண்டியே இலைகளில் அமர்ந்தேன் கண் அயர்ந்து
அமர்ந்த நொடியில் கிளையிடம்
விடை பெற்று சருகாய் வீழ்ந்தது இலையது
நிலை குலைந்து நானும் சரிய
சட்டென விழித்து சிட்டென பறந்த நொடியினில் உணர்ந்தேன்
பிறர் துணை நாடல் என்றும் பிழையே என்று .
இன்று விண்ணில் பறக்கிறேன்
கலக்கலாய் தன்னம்பிக்கையோடு
-Santhosh Sasi

இறந்த இலையின்
இறுதிப் பயணத்தில்
இறுக்கமான மனதுடன்
இணைந்த நட்பு…ஈ
-Srividhya Ramachandran

அடடா காய்ந்த சிறகானாலும்
வீழ்ந்து விடாமல்
விடா முயற்சி
ஆகா
அணைத்துக் கொண்டது
இலையை
ஈ காய்ந்த சிறகை
உள்ளம் ஈக்கு ஈரம்
-Senguttuvan Yazhini

இலையான உன்னை எடையாக உணராமல் ஈயாகிச் சுமந்து சிரமங்கள் கடந்து போகுமிடமெலாம் தொடர்ந்தே செல்வோம். அடர்ந்தே வாழ்வோம்.
-Ammachatram Saravanan

ஒற்றை வானம்
ஓராயிரம் கனவு
மூன்றாம் சிறகு
-முருகன் சுந்தரபாண்டியன்

சருகும் ரதமாகும், ஒரு ஈயின் பயணத்தில்
முடிவும் தொடர் நிலைதான், வாழ்க்கை பயணத்தில்
உணர்வின் பயணத்தில். உருகும் மனிதங்கள்
காற்றின் திசை நோக்கி, நாமும் நகர்கின்றோம் !
-Mohamed Batcha

உம்மை சுமந்து செல்லும்
வாய்ப்பு எனக்கு மட்டும்…
-ஜெ.சதீஷ் குமார்

மண்ணுக்கு உரமாக செல்லும்
உன்னை திசைமாறாமல் கொண்டுப்போய்
நான் சேர்க்கின்றேன்
-Seidhigai Solvom

வீழும் இலை
வாழும் ஈ
உதவுவதே உயிரின் இயல்பு
-ச.க.இரமேசு எழில்

வாழ்வு முடிந்து உதிர்ந்து விழும் இலை
விழுந்தால் அதற்கு அடிபட்டு விடுமோ என அதை நன்முறையில் பூமியில் சேர்க்க முனையும் உதவும் கரங்கள் ஈ
உலகம் இந்த உதவும் கரங்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது
-கிரி

வாழ்வு முடிந்து உதிர்ந்து விழும் இலை
விழுந்தால் அதற்கு அடிபடுமோ என தவிக்கும் ஈ.
பர்ஃபெக்ட் லேண்டிங் செய்ய வேண்டி பைலட்டாக மாறிய ஈ
-கிரி

சறுகு என்னை ஏற்றுக்கொண்டபின்,
இறகு எனக்கு பாரமெனத் தோன்றவில்லை!!
மரணச் சறுகுக்கு மற்றுமோர் யுகம் காக்கவோ!!
– ஈ’ஸ் பர்செப்ஷன்!!
-குருப்ரம்மா

வீழும் இலை சுமந்திருந்த
ஈ முட்டைகள்
பொரியுமோ. . .
புதையுமோ. .
பதை பதைப்பில் ஈ !!!
-ஜீவன்

உதிரப் போகிறேன்
பறந்து செல்
என்றது இலை
உதறிச் செல்ல
மனமின்றி
உறைந்து அமர்ந்த ஈ
-பேபி ப்ரியா

மரம் தாண்டி மரணம் தழுவ,
விழுந்த அன்புச்சறுகை விடாமல் பிடித்த,
ஈகையிற் சிறந்த இந்த
ஈ கைகள்,
மூடிச் செல்லட்டுமே பல முதியோர் இல்லங்களை!!
-குருப்ரம்மா

“இது..
இலையுதிர்ப் பயணம்..!
அன்பின் சுவை இனிப்பு..
அனுபவத்தின் நிறம் பழுப்பு..
என..
தன்னையே தந்த
பிரியமானவளுக்கு..
பிரியாவிடையாக..
அவளுடன்
ஒரு பயணம்..
இது..
இலையுதிர் ஈப் பயணம்..!!”
– Sasithara Dhamodharan

719total visits,2visits today