லீ பார்வையும் நண்பர்கள் கவிதையும்-2

0
86

சிறகை விறித்து சுதந்திரமாக பறக்கும் புறா
தன் இனம் சேராமல்
மீண்டும் தன்னை வளர்ப்பவனிடம்
வரவேண்டுமென்ற வருத்தத்துடன்
-nana

உன் சிறகிற்கு
ஓய்வு கொடுத்துவிட்டார்கள்
இன்றைய நவீன காதலர்கள்
nadhanika ray

ஓவியரின் வெறுமையை
கிழித்த திறமை
சுதந்திர சிறகு விரித்து பறக்கிறது
sita G

இறகு விரித்த
இயற்கை ஆர்வலர்
இவரே
muthu samy G

என்க்கான பாதையை உருவாகின்ற தருணத்தில்
கனவுகளையும்
இலட்சியத்தையும்
எட்ட முடியாமல்
கூண்டுக்குள்
வைத்திருந்த அந்த
பாசமிகு பெற்றோர்கள்
தானே என
ஏங்கிய இந்த புறாவைப்
போலவே
பின் வானத்தை நோக்கி உயர போ என்ற புரிதலின்
நிமித்தம்
தன்னம்பிக்கை என்ற சிறகால் உயரே எழுப்புகிறேன் அந்த மகிழ்ச்சியின்
புறா வினை போலவே
இழையனின் வாழ்க்கையும் வெற்றி பெற சிறகடித்து பறக்கின்றது……
இழையனின் கவிதை Felix Feminian

சிறகுகள் விரித்து பறக்கிறேன்
சிந்தையெல்லாம்
உன் மீதுதான்…

பால்வெளியில் தவழும்
ஏதேதோ உருண்டைகளில்
தேடி உன்னை அடைக்களம் வைத்தேன்….

அக்கினி குஞ்சொன்று
அடிவயிற்றில் இடித்தது…,
ஆராய்சிக்கு செல்கையில்,
அம்மா என்றலறியது…!
மரபொந்தில் என் இரு உயிர் ,

தாய்மையை புறந்தள்ளி
ஆள்மையை மிகை கொண்டு….
ஏழ்மையை கொன்றுவிட்டு
என்ன செய்கிறாய் அங்கே…

அணுக்களை உமிழ்ந்து கொண்டு
உயிர்களை எரித்துவிடும்
இந்த பூமியில்,
எத்தனையோ ..?
நடை பிண இதய ஓட்டைகள்,
ஆக்ஸிஜனுக்கு திணறுகிறது,

ஓசோன் கிழிந்து
உள்சுடும் பொழுதில்
மரம் ஒன்று நட
என் உயிரை அழைப்பான்
இந்த ஆராய்ச்சியின்
அரை(றை)க்கிறுக்கன்….
maha nadhi

வானவெளியில் வாகாய் சிறகை விரித்து
ஏனோ எங்கள் ஏக்கங்களைத் தூண்டுகிறாய்?
சிறகடித்து நீ சுதந்திரமாக பறக்கையிலே
பொறாமையாக உள்ளது இந்த மானிடனுக்கு
போராட்டமில்லை போராடத்தேவையில்லை
ஏரோட்டமில்லை ஏரோட்டத்தேவையில்லை

பேதங்கள் உனக்கில்லை பேடிகளென்று சொல்வாரில்லை
திங்கள் என்றும் ஞாயிறன்றும்
தினங்கள் என்பது உனக்கு இல்லை
பொங்கல் என்றும் புத்தாண்டு என்றும்
எங்கும் நீ அலைவது இல்லை
மதங்கள் என்றும் இனங்கள் என்றும்
தடங்கல் என்பது உனக்கில்லை
தட்டுத் தடுமாறும் வாழ்க்கை இல்லை
எட்டுத்திக்கு எங்கும் நீசெல்ல
எந்த உத்தரவும் உனக்கு இல்லை
உன்னை நினைக்கையிலே எந்தனுக்கு
என்ன தவம் நீ செய்தாயோ
எட்டாத உயரம் எல்லாம் நீ
எட்டிப் பார்க்கும் நிலை காண
தட்டிப்பறித்து உன்வாழ்வை
தரணியில் நான் வாழவேண்டும்
-Anura Kandasamy

சிறகை விரித்தால் மட்டும்
போதாது
சிந்தனையின் நோக்கும்
சிறந்ததாய் இருத்தல் வேண்டும்

(இது கவி அல்ல சிந்தனை)
-மகிழினி காந்தன்

பறவை ஒன்று சிறகை விரித்து
சுதந்திர காற்றை சுவாசிக்க படபடப்பாய்
கூன்டை விட்டு வெளியே வந்தது [மெரினா]
-Aari Mastaraari

சிறகுக்குள் வானை…
சிறைப்பிடித்தே…
மகிழ்கிறதோ…
சின்னஞ்சிறு பறவை.
-சசி உங்கள் ப்ரியசகி

சுதந்திரமில்லா உலகில் நீ மட்டும்
சுற்றிதிரிகிறாயோ
சுதந்திரமாக
nila sivam nila sivam

உயரத்தை நீ
எட்டியது எப்படி…..?
எத்தனை இறக்கைகள்
தைத்தாலும் ,
என்னால் …..,!
உன்னைத்தொட இயலாது….
ஏன் தெரியுமா…..?

இன்றைய தேவையை மீறிய பேராசையோடு தரையில் பறக்கிறேன்…..

இன்றைய தேவைகளுக்காக மட்டுமே நீ வானில் மிதக்கிறாய்…..

சிறு பறவையாய் நீ,
என் கண்களில்,
சிறு கடுகாய் நான்,
உன் கண்களில்….
-maha nadhi

எதை தேடி
உன் சிறகை விரித்து பறந்து செல்கிறாய்
நீ வாழ்வதற்கு இல்லாத சுதந்திரம்
உன் சிறகை அடிப்பதற்கு மட்டும்
ஏன் வேண்டும்
வாழ முடியாத உலகில் நீ வாழ
எதை தேடுகிறாய் தெரியவில்லை
-Amar Nath

நீட்சியுற்ற
பயணத்தில்
அறைந்து தள்ளும்
எதிர்கூவல்களுள்
சாடிக்கொள்ளாமல்
கடந்திடவே இறக்கை
விரிக்கிறேன்
உன் கூடடைதலின்
வனப்பட்சியாக
எம்.ஏ.ஷகி

சமாதான தூதுவனின் சிறையிலிருந்து விடுபட்டு
சிறகை விரித்து பறக்கும் சின்ன புறாவோ ,
அல்லது
ஆதிக்க விலங்கை தகர்த்தெறிந்த
சுதந்திரப் புறாவோ,
எதாகினும் நீ
நீயாகவே இரு.
அதினி. (jeeva withlove)

விரித்த சிறகில்
வில்லம்பு தொடுத்த
வேதனைக்காயங்கள்
தழும்பாய் ஆகிடினும்
மீண்டும் மீண்டும்
எழும்பிவிடத் தோன்றும்
மனத்துணிவில்
அம்புகள் மழுங்கிப்போகின்றன!
Regina Gunanayagam

சுதந்திரப் பறவை
சுதந்திரமாக
சுற்றி வருகிறது.
-Ravi kumar

என் நடை உடை கூட
இன்னொருவர் தீர்மானிக்கும்
இவ்வுலகில் நானெங்கு சிறகு விரிக்க..
Swetha Chandasekaran

அழைப்பினை மறுத்து நீ மண்ணில்
புதிய உலகம் தேடி நான் விண்ணில்
சிறகடிக்கும் எனக்கு சிந்தனை ஒன்றுதான்
என் சுதந்திரம் இன்று தான்
துயர்களின்றி வாழ்ந்தால்
இன்றே வீழ்ந்துடுவேன்
முஹம்மட் பர்ஹான்

அகண்டு விரிந்த துல்லியமான நீலவானத்தில்…..

பறவை வடிவில் பறந்து கொண்டிருப்பது

முப்பத்து முக்கோடி தேவர்களாக இருக்கலாம்,

ரிஷிகளாக இருக்கலாம்,

என் முன்னோர்களாகவும் இருக்கலாம்.. .

அவ்வளவு ஏன்?
பிரிவு தாங்காமல் மரித்துப்போன நீயாகக் கூட இருக்கலாம் கண்ணே!!
Natesan Kaliyannan

510total visits.