லீ பார்வையும் நண்பர்கள் கவிதையும் -3

0
62

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

நீரின்றி உலகில்லை என்பது
நம் மறை முன்மொழியும் உண்மை.
அதையே வழிமொழிகிறது விஞ்ஞானம்.

விளம்பகேள்!

உலகின் முதல் உயிர் தோன்றியது
தண்ணீரில் தான்!
நாமெல்லாம் தண்ணீரின்
தொப்புள் கொடி உறவுகள்!

ஆம், நாமும் தாயின் வயிற்றில்
தண்ணீர் குடத்தில் தான் சுவாசித்தோம்
பத்து திங்களாக!

தண்ணீருக்கும் நமக்குமான உறவு
ஒரு தொடர்!
அது முடிந்து போவதில்லை என்றும்!

நாமும் தண்ணீரும் வேறு வேறல்ல!
நமக்குள் பற்றிய வேர் அது!
நாம் வெறும் மரமே!
தண்ணீர் இல்லையேல்
நாம் சாய்ந்து விடுவோம்!

காரணம் பகர்கிறேன். அறி!

நம் உடல்
65% நீராலேயே இயங்குகிறது.
ஓடும் 7.2 லிட்டரும்
உப்புத் தண்ணீரே!

தண்ணீர் தான் உயிர்!
நாமெல்லாம் வெற்று உடல்!

தண்ணீர் தீர்ந்த பின்னே மட்டும்
அதன் அருமை அறிவதிலிருந்து
மீள்வோம்!
நம் அறியாமையை மீட்டுக் கொள்வோம்!

தண்ணீர் இல்லையேல்
மனித உற்பத்தி கூட
நடைபெறாது!
நம் தலைமுறை நம்மோடே
அழிய நேரிடும்!

தண்ணீரை நேசிப்போம்!
தண்ணீரைக் காப்போம்!

உலகத் தண்ணீர் தின வாழ்த்துகள்!

– Menaga Meenu

நீரும் நீரும்
எம் தாகம் தீர்க்கும்
முக்கியங்கள்!

நீரும் நீரும்
எம் ரகசியம் அறிந்த
தீண்டல்கள்!

நீரும் நீரும்
எம் மனம் விரும்பும்
தேடல்கள்!

நீரும் நீரும்
எம் உயிர் பற்றிக் கொண்டிருக்கும்
வேர்கள்!

நீரும் நீரும்
எம் உலகை இயக்கும்
கடவுள்கள்!

Menaga Meenu

தாயைப்பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே
தாயை விட தண்ணீரை
உயர்ந்த வழி போற்றும்
தரணியில் வந்தவர்கள் நாம்
பஞ்சபூதத்தில் படைத்தவன்
படைப்பினிலே போற்றும் படைப்பது
பஞ்சம் கண்ட வயிறு
பருகிடும் ஒருதுளி நீர்
படைத்தவன் மகிமை கூறும்
நிலத்தின் தேவைகளும்
நெருப்பின் தேவைகளும்
ஆகாயத்தின் தேவைகளும்
பூமியின் தேவைகளும்
இந்த நீருக்குள் அடங்கியிருக்கும்
இதுதான் படைத்தவனின் சித்தம்
பசியோடு பட்டினியும்
பறந்தோடும் நீர்கண்டால்
பயிரும் வளரும் நீர்கண்டால்
மீனும் வாழும் நீர் நிறைந்தால்
நீரே வாழ்வாய் நீரே உயிராய்
நீ வாழும் வாழ்வாயிருக்கும்
போது
நீ மாசாக்கி
நீரை அசுத்தமாக்கி
நீரை சேறாக்கி
நீ ஏன் பாவமாகிறாய்
பாதுகாப்போம் பலன்பெறுவோம்

Anura kandasamy

நீர் பறவைக்கு
நீலமே நிலம்!

Senthilkumar Nagarajan

காத்திருத்தல் என்பது
இரையொன்றுக்கான
வலைவீசுதலாய் இருக்கலாம்
அல்லது தோட்டா ஒன்றுக்கான
இரையாகவும் அவன் இருக்கலாம்
கிடைத்த பரிசொன்றின்
உற்சாகக் கூச்சலுக்கு
அலகுநீவி சற்றே உயரப் பறக்கலாம்
அல்லது துயரம் படிந்த
குருதி வடியும் ஓலத்தில்
சற்றே உயிர்ப்பறவையென
உடன்பறக்கலாம்
விழிமூடும்முன் ஒரு சொட்டு
நன்னீர் அவன் உதடு துடைக்க
கொடுக்கமுடியா இயலாமையில்
உங்கள் விழிகளில் இருந்து வடியும் நீர்
கடலை இன்னும் கொஞ்சம்
உவர்ப்பாக ஆக்கிவிட்டுச் செல்லட்டும்
நீர் ஆதாரம்
நிராதாராம் ஆகாமல்
ஆகக் கடவது.

Saya Sundaram

825total visits.