லிவீங் டூ கெதர் – ஒரு பார்வை

0
89

வரலாறு திரும்பிக் கொண்டு இருக்கிறது.  நாம் ஆரம்பத்துல பிடிச்சவங்களோட எந்தக் கட்டுப்பாடும் இல்லாம வாழ்ந்த மாதிரியே இப்பொழுதும் நிறைய பேரு வாழ ஆரம்பிச்சிட்டாங்க. இது தான் லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறை. இப்ப உள்ள கால கட்டத்துக்கு கல்யாணம் சரிப்படாது.

பரிணாமம், கல்வி வளர்ச்சியினால மக்கள் சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்க.
பிடிச்சா வாழலாம். எப்ப வேணாம்ணு தோணுதோ அப்ப இயல்பா பிரிஞ்சு தனக்கான இணையுடன் வாழ்வது ஆரோக்கியமான மன நிலை. பிடிக்காதவங்கள சகிச்சிக்கிட்டு 50 வருசம் வாழறத விட அவங்கள விலகி நா நானா வாழறேனு நினைக்கிறது நல்ல விசயந்தான்.

என்னிடம் இது விசயமாக கவுன்சிலிங் வருபவர்களிடம் நான் சொல்லும் ஒரே வாசகம்:

“உங்களுக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தால் சமுதாயத்திற்கோ மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழுங்கள் என்பதே.”

பிறப்பது ஒரு முறை. இருக்கும் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு போக வேண்டியது தானே.

லிவிங் டுகதர் வாழ்க்கையை 50 வருசங்களுக்கு முன்னயே 18 வருடம் நம் முன்னாள் முதல்வர் வாழ்ந்துட்டு தான் அந்தப் பெண்ணை பிடித்து போய் கல்யாணமே பன்னினார்.

இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளையும் நம் சுப்ரீம் கோர்ட்டே குடுத்திருக்கு.

கொழுப்பெடுத்து ஆடும் சிலரைத் தவிர நியாயமாக டைவர்ஸ் கேட்பவர்களும் அதிகம்தான்.
கோவை குடும்ப கோர்ட்ல இந்தியாவிலயே முதலிடமா மாசம் 600 டைவர்ஸ் கேசு பதிவாகுது.
தீர்ப்புக்காக காத்திட்டு இருந்து வயசே ஆகிடுது இது தேவையா?

உங்களுக்குப் பிடித்தவரை காதலித்து இயல்பாக வாழ்ந்து மகிழ்ச்சியை அனுபவிக்க தான் நாம் படைக்கப்பட்டிருக்கோம்.

அப்பொழுது தான் நாம் ஆரோக்கியமா வாழ முடியும்.
இல்லனா மன அழுத்தத்தினால நடை பிணமாதா அலையணும்.

சிந்திப்பீர் !!!

செயல்படுவீர் !!!

-செல்வராணி தங்கவேல்

 

1402total visits,4visits today