மன்னிப்பாவது ஹைகோர்ட்டாவது?

0
47

அரசியல் அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்ற மோசமான முன்னுதாரத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. அதுவும் மாநிலங்களில் கோமாளிகளை தலைவராக நியமித்து இந்திய சட்டங்களையும், மரபுகளையும் மீறிக் கொண்டு இருக்கிறது.

1. IPC Section 143சட்ட விரோத கும்பல்

2.Section 188 அரசு அதிகாரிகள் பணியின் நிமித்தம் இடும் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமை

3.Section 153 A இனம், மதம், மொழி, பிறப்பிடம் சார்ந்த இரு வேறு குழுக்கள் இடையே பகைமை தூண்டும் வண்ணம் செயல்படுதல்

4.Section 290 பொது அமைதிக்கு தொல்லையாக இருத்தல்

5.Section 294 (B) பொது அமைதியைக் சீர்குலைக்கும் வண்ணம் சொற்கள், செய்கைகள் & பாடல்கள் ஆகியவற்றை பொது இடத்தில் வெளியிடுதல் & பேசுதல்

6.505 (1) (B) (C) Section அரசு அதிகாரிகள் அலுவலை நிறைவேற்றுவதைத் தடுக்க குற்றமுறு வன்முறையை பிரயோகித்தல்

7.506 (1)கொலை மிரட்டல்

மேற்கண்ட 7 பிரிவுகளின் கீழ் H. ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒன்றிரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருந்தாலே மக்களுக்காகப் போராடுபவர்கள் சிறை செல்வதும் ஜாமீன் கேட்டு நீதி மன்றப் படியேறுவதமாய் இருக்கையில் ராஜா என்கிற சமூக விரோதிக்கு நீதிமன்றம் மன்னிப்பு வழங்கி இருக்கிறது. நல்லது . இதில் sections 505 , 290, Section 75 of TN City police Act ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தான் சோபியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 143சட்ட விரோத கும்பல், 505 (1) (B) (C) Section அரசு அதிகாரிகள் அலுவலை நிறைவேற்றுவதைத் தடுக்க குற்றமுறு வன்முறையை பிரயோகித்தல், 290 பொது அமைதிக்கு தொல்லையாக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் தான் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை , நீட்டுக்கு எதிரான போராட்டம் என தோழர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். பொறுக்கித்தனம் பண்றவன்லாம் மன்னிப்புக் கேட்கும் போது மக்களுக்காகப் போராடும் நமக்கென்ன போராடிவிட்டு மன்னிப்பு கேட்போம். தரவில்லையெனில் H.Raja Vs Police Commissioner of Pudukottai என்கிற வழக்குத் தீர்ப்பை (Judge made law) மேற்கோள் காட்டுவோம்.

-த. ஜீவலட்சுமி

1058total visits,1visits today