மருத்துவ காப்பீடு திட்டம் – மோடி எனும் கேடி

0
92

பிரதமர் மோடி அறிவித்த ’ஆயுஷ்மான் பாரத் – மோடிகேர்’ தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யாருக்குமே உதவாத, ஒரு மோசடி திட்டம் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஓராண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக மோடி பெருமையாக அறிவித்தார். ஆனால், இந்தத் திட்டத்தின் பயனாளிகள் குறித்து தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்திரவின் மூலம், இது யாருக்குமே பயன்படாது என்பதை அறிந்து மருத்துவத்துறை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு தகுதியுள்ளவர்கள் யார் என்பது குறித்து தேசிய சுகாதார நிறுவனம் மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் என குறிப்பிட்டுள்ள விவரங்கள்:

1. குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது’

2. ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக்கூடாது’

3. லேண்ட்லைன் போன் வைத்திருக்கூடாது’

4. வீட்டில் 2 அறைகள் இருக்கக்கூடாது’

5. வீட்டில் சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருக்கக்கூடாது’

6. மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம் இருக்கக்கூடாது’

7. விவசாயிகள் கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வைத்திருக்கக்கூடாது’

8. அரசு ஊழியராக இருக்கக்கூடாது’

9. வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர், விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர் திட்டத்தில் பங்கேற்க முடியாது.

10. 2.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம், பாசன உபகரணங்கள், 5 ஏக்கர் அல்லது அதிகமான பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர் பருவங்களில் வைத்திருப்போர், குறைந்தபட்சம் 7.5 ஏக்கர் நிலம், பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்’

அப்புறம் யாருக்குதான் இந்தத் திட்டம் என்றால், ஒருவருக்கும் இல்லை என்பதே பதில்.

ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்கள் தங்கள் மாநில நல திட்டங்களே திருப்தியாய் இருக்கிறதென்றும் மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் சேர முடியாது எனவும் ஒதுக்கி விட்டன.

ஆளும் பாஜக தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அரங்கேற்றி இருக்கிறது. இந்த திட்டம் ஒருவருக்கும் பயன் தராது எனினும் இன்னும் நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். ஏற்கனவே மருத்துவ காப்பீடு திட்டத்தில் நீங்கள் சிகிச்சை பெற்று இருந்தால் இந்த புதிய காப்பீடு திட்டம் உங்களுக்கு பொருந்தாது.

-வினோ

749total visits,1visits today