மோகன்லால் படத்தில் ரஜினி

0
39

அடுத்த ஜாக்பாட்டிற்கு தயாராகிறார் மோகன்லால்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு புலிமுருகன் படத்தில் பட்டையை கிளப்பியவர் தற்போது ஒடியன் மாணிக்கம் என்ற திரைப்படம் மூலம் ரசிகர்களின் நாடி துடிப்பை எகிற வைத்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவரும் இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பது கணிப்பு.

படத்தின் வெற்றிக்கு ஒடியன் குழுவினர் சுமார் 100 ஒடியன் சிலைகளை தயாரித்து கேரளா முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இப்படத்தை விளம்பர பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். தயாரிப்பு மோகன்லாலே தான். மஞ்சுவாரியார் கதாநாயகியாக நடிக்க பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

காசி, பனாரஸ் இடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு 18கிலோ எடை குறைத்து இளமையாக காட்சியளிக்கிறார் மோகன்லால்.

படத்தின் வெற்றிக்கு வித்திடும் வகையில் சில வசனங்களை மலையாளத்தில் மம்முட்டியும், தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் ஜூனியர் என். டி. ஆரும் பேசி உள்ளனர்.

ஒடியன் மாணிக்கம் திரைப்படம் டிசம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

-சினிமா பாபு

427total visits,5visits today