மோசமான பெண்கள் நடிக்க வருகிறார்கள் – நடிகர் சங்க தலைவர் பேட்டி

0
67
 நடிகைகள் சிலர், ‘சினிமா வாய்ப்புக்காக தங்களை படுக்கைக்கு அழைத்ததாக’ பகிரங்கமாக பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
இந்நிலையில் மலையாள நடிகரும், மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ அமைப்பின் தலைவருமான இன்னொசென்ட் பேட்டி ஒன்றில் கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.
மோசமான பெண்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கேட்டு படுக்கை வரை செல்வதாகவும், மலையாள திரையுலகை பொறுத்தவரையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் யாரிடமும் இல்லை.

நடிகைகளை படுக்கைக்கு அழைத்ததாக எந்த புகாரும் நடிகர் சங்கத்துக்கு இதுவரை வரவில்லை என்றும் இன்னொசென்ட் தெரிவித்திருந்தார்.

இவரது கருத்து மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகைகள் குறித்து தரக்குறைவாக பேசியதாக அவருக்கு சில நடிகைகள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

3008total visits.