மெர்க்குரி – சினிமா விமர்சனம்

0
110

#மெர்க்குரி – வசனங்கள் இல்லாத பேய் படம்

படத்தின் முக்கிய பாத்திரங்கள் அனைவருமே சிறு சிறு வேடங்களில் வேறு படங்களிலும், குறும்படங்களிலும் நடித்து இருந்தாலும் ரசிகர்களை திரையரங்கை நோக்கி இழுக்க வைப்பது “பிரபுதேவா”வும் “கார்த்திக் சுப்புராஜு”வும் தான்..

படத்தின் ஆரம்பக்காட்சியை பார்க்காதவர்களுக்கும், படத்தை ஆழ்ந்து பார்க்கத்தவர்களுக்கும் நிச்சயம் ஒரு குழப்பமான படமாகவே தோன்றும். காரணம் இது ஒரு “சைலன்ட் மூவி” ஆம் படத்தில் வசனங்களே இல்லை.

வெகுநாட்களுக்கு பிறகு (கடைசியாக கமல், அமலா நடிப்பில் வெளியான பேசும்படம் வந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு) தமிழ் சினிமாவிற்கு ஒரு சைலன்ட் மூவி, இன்றைய இளைஞர்களுக்கு இது புதிய முயற்சியாகதான் தெரியும்.
காது கேளாத, வாய்பேசவும் இயலாத ஐந்து நண்பர்கள், அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பிரபுதேவாவிற்கு செய்த தவாறால் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனையே….. அவர்களுக்கும் பிரபுதேவா-விற்கும் இடையில் நடக்கும் அந்த யுத்தமே கதை.

முடிவில் அது ஒரு தவாறான யுத்தம் என்பதை உணர்ந்துகொள்ளும் போது இந்துஜா – பிரபுதேவா இருவர் முகமும் காட்டும் அபிநயங்கள் அவ்வளவு அருமை.

ஆம் அவர்களின் யுத்தம் எதற்கு எதிராக நடக்க வேண்டுமோ அங்கேயே நடக்கின்றது. எதிராக அல்ல, எதிர்பாராத விதமாக பாதிக்கப்பட்டவர்களுக்குள்ளேயே நடக்கிறது. அது தான் விபரீதம்.

காதுகேக்க, வாய்பேச இயலாத பாத்திரத்தில் முக்கிய பாத்திரங்கள் அனைவரும் தங்களின் உடல்மொழியின் மூலமாகவே நமக்கு உணர்த்துகிறார்கள். பிரதான நாயகன் “பிரபுதேவா” கண் தெரியாத, வாய் பேச இயலாது காது மட்டுமே கேக்கும் பாத்திரத்தில், அடிபட்டு ரத்தமும், காயமும் நிறைந்த முகத்தில் இருந்து பலவித உணர்வுகளை நமக்கு உணர்த்துகிறார்.

பேய் படங்களுக்கு வசனங்கள் தேவை இல்லை, காட்சிகளும், ஒலி, ஒளியும்தான் தேவை. அந்த வகையில் இந்த படத்திற்கு கேமராவும், இசையும் சற்று உதவியாக இருக்கின்றன. இருந்தும் இருக்கை நுனிக்கே வரும் அளவிற்கு பார்வையாளர்களை பயமுறுத்தவில்லை என்பது வருத்தமே.

கிட்டத்தட்ட இரண்டு மாத விடுமுறைக்கு பிறகு வெளியான முதல் படம், வெற்றிப்படமாக இருந்து இருக்க வேண்டும். ரசிகர்களின் விருப்பத்தை ஏனோ பூர்த்தி செய்யவில்லை.

திகில், சஸ்பென்ஸ் படங்களுக்கான பின்னணி இசை என்று பார்த்தால் இது குறைவு தான். இருந்தும் பாராட்டுக்குரிய அருமையான இசை. ஒளிப்பதிவு தேவையான ஒளியை சுமந்து வந்தாலும், பல இடங்களில் திகிலூட்டவில்லை.

கார்த்திக்சுப்புராஜின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதே…

-செந்தில்குமார் நாகராஜன்.

3043total visits,6visits today