கலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019

0
42

நகரங்களில் உள்ள தொழிற்துறை மற்றும் வணிக நிலங்களைச் சுத்தம் செய்வதற்காக மாகாண அரசின் நிதியளிக்கும் திட்டங்கள் மூலம் குறைந்த விலையிலான வீட்டுவசதிக்கு உதவும் என ஒன்ராரியோவின் பசுமைக் கட்சி தலைவர் மைக் ஸ்க்ரீனர் தெரிவித்துள்ளார். பழுப்பு நிலப்பகுதிகள் என்றும் அழைக்கப்படும் நிலங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை அல்லது குறுகிய பயன்பாட்டிலேயே காணப்படுகின்றது. இந்நிலையில் ஒன்ராரியோ முழுவதும் புறநகர் எல்லைகளுக்குள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பழுப்பு நிலப்பகுதித் தளங்கள் உள்ளன என மைக் ஸ்க்ரீனர் தெரிவித்துள்ளார்

நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது. 71 பயணிகளை கொண்ட அந்த விமானம் வங்கதேசத்தில் உள்ள தாக்காவில் இருந்து புறப்பட்டு காத்மாண்டுவை சென்றடைந்தவுடன் தீப்பற்றி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான மோசமான தொடர்பே விமான விபத்துக்கு காரணம் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால், விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், விமானக் குழுவினருடன் கோபமாக பேசியதாகவும், விமானியறையில் புகைப்பிடித்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்

சீனாவில் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கனேடியர் ஒருவர் மக்காவ்வில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேசிலில் உள்ள மற்றுமொரு சுரங்க அணை உடையும் அபாயத்தில் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது

கனேடிய வான் பரப்பினுள் நுளைந்த ரஷ்யாவின் இரண்டு போர் விமானங்கள் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

வெனிசுவேலா நாட்டில் தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்ட எதிர்க் கட்சித் தலைவர் குவான் குவைடோவுக்கோ, அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்

அடுத்த தேர்தலில் மீண்டும் லிபரல் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டி ஏற்படும் என கன்சர்வேடிவ் தலைவர் அண்ட்ரூ ஷெர்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி நாளை (ஜனவரி 30) தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மூடுமாறு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் 1942 ஆம் ஆண்டு ஒரு இளம் பெண் லீ என்பவர் பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஜப்பானிய ராணுவ வீரர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அப்பெண்ணை வடகிழக்கு சீனாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்குதான் அப்பென் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.அதே போல பல லட்சம் பெண்கள் இரண்டாம் உலகப் போர் நடக்கும் காலகட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4 லட்சம் என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குடிபோதையில் அண்ணியின் கையை பிடித்து இழுத்த தம்பியை அண்ணன் குத்திக் கொலை செய்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெரு

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் டெல்லியில் இன்று காலமானார்.

ஒரு அரசியல் தலைவர் பாசிட்டிவ் கருத்தை வெளியிட்டால் அதை கண்டுகொள்ளாத ஊடகங்கள் அரசியல்வாதிகளின் சிறிய தவறை கூட பெரிதுபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதைபோலவே சித்தராமையா தவறாக நடந்து கொண்டதாக வெளிவந்த செய்தியில் முழுவதையும் அறியாமல் பல ஊடகங்கள் அவர் துப்பட்டாவை இழுத்ததை மட்டும் செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் சித்தராமையாவால் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணே தன் மீதுதான் தவறு என்று திடீர் பல்டி அடித்துள்ளார்

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவவேய் நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை நிதி அலுவலர் மங் வான்ஜோ மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை.

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை இதுகுறித்து சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்ட்டு வருகின்றன. இனி பொய் அல்லது தவறான தகவல் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகளை ஊக்குவிக்க மாட்டோம் என்றும் தவறான தகவல்கள் தருபவர்களின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் சமூக வலைத்தள நிர்வாகிகல் தெரிவித்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் ‘தேவை இல்லை’ என்று பரிந்துரைக்கும் பதிவுகள், வீடியோக்கள் அவர்களுக்கு அளிக்கப்படாது என்றும் சமூக வலைத்தளங்கள் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்க்கான புதிய தொழில் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதே போல புதுச்சேரியிலும் நடைபெறப் போகிறது

தற்போதைய இந்திய தலைமையில் இருந்து பெரிய முடிவை எதிர்பார்க்க முடியாது ; தேர்தலுக்குப் பிறகு மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என பாகிஸ்தான் அமைச்சர் கூறி உள்ளார்

அயோத்தி சர்ச்சைக்குரிய இட வழக்கில் சர்ச்சையில் இல்லாத கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள இடத்தை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது

பினாமி ஒழிப்பு சட்டத்தின்கீழ் ரூ.6,900 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன என ஐ.டி. துறை தெரிவித்துள்ளது

வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சென்னையில் 74 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் 4 வாரம் தடை விதித்து உள்ளது

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறி உள்ளார்

சீன துணை பிரதமருடன் வருகிற 31ந்தேதி டிரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தை

12-ம் வகுப்பு செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு தேர்வு துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்

10% இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது : உச்சநீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் மனுத்தாக்கல்

மத்தியப் பிரதேசத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் 64 பேர் உயிரிழந்து உள்ளனர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

துருக்கியை புரட்டி போட்ட சூறாவளி: காற்றின் காரணமாக விமானநிலையம் சேதமடைந்த காட்சிகள் வெளியீடு

மாஸ்கோவில் கடும் பனிப்புயல் : சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

சிறு சிறு கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் ரயில் மருத்துவமனை: 27 ஆண்டுகளை நிறைவு செய்தது!

கொடைக்கானலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 45 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 3,510 பேர் விண்ணப்பம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி விசைத்தறி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு நீராதாரமாக அமைந்துள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 23ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, நேரடி விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு நீர் இருப்பு இல்லை. எனவே, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 88 ஏரிகளுக்கு மட்டும், வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது

2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது. அக்டோபர் 24 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்-2ல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பரிகார பூஜை

பள்ளித்தேர்வை விட வாழ்க்கையே முக்கியம்: மோடி

குடிநீர் பற்றாக்குறை: முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கன்னியாகுமரியில் ரப்பர்ஷீட் தொழிற்சாலையில் தீவிபத்து

தங்கம் விலை ரூ.25 ஆயிரத்திலேயே நீடிப்பு : சவரனுக்கு ரூ.56 உயர்வு

பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு சரிவு

அவினாசியில் சபாநாயகர் தனபால் முற்றுகை

பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 2 வரை, 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

No toll plazas on National Highways? Soon, making toll payments on national highways will become easier and more convenient! The National Highways Authority of India (NHAI) is planning to eliminate all toll plazas that are present on National Highways across the country, states a Dainik Bhaskar report.

– Raji

1462total visits,10visits today