இரவு சாப்பாடும் இதய துடிப்பும்

0
110

நைட் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிச்சு தூங்கப் போங்க. அப்படியே தூங்குனா இதயத்துக்கு நல்லது இல்ல.

நாம்ப அம்மா வயத்துல கருவா வளரும்போது முதல்ல உருவாகிறது இதயந்தான்.  நாம்ப செத்த பிறகு கடைசியா சாகறதும் இதயந்தான்.

நம் வாழ்நாள்ல எத்தன முறை துடிக்கணும்ணு ஏற்கெனவே அதன் டி என் ஏல பதியப்பட்டிருக்கும். அதற்கு மேல் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்.

நம்ப எந்த அளவுக்கு கோபப்படாம டென்சன் ஆகாம இருக்கமோ அந்த அளவுக்கு இதயத் துடிப்பின் இடை வெளி அதிகரிக்கும். ஒவ்வொரு துடிப்புக்கும் இடைவெளி அதிகரிக்கும் போது நம் ஆயுள் கூடிக்கொண்டே இருக்குனு அர்த்தம். துடிப்பு எகிற எகிற ஆயுள் குறைஞ்சிட்டே போகும்.

அதனாலதா சித்தர்கள் மூச்சை தம் புடிச்சு இதயத் துடிப்பை கண்ட்ரோல் பண்ணி 120 வருட மனித வாழ்வ 2000 வருசமா மாத்திக்கிட்டாங்க. அதும் ஆச்சரியமா இருக்கா.  ஆமா நாம்ப 120 வருசம் இளைஞர்களாவே இருப்போம்.

அப்புறம் தான் aged proces start ஆகுது.  இதும் உண்மை தான்.

அதுக்கு உணவு மனம் எண்ணங்கள்  இதெல்லாம் சரியா இருக்கணும்.
அது எங்க உங்கள்ட்ட. நானெல்லாம் 10000 வருசம் வாழற ஐடியால இருக்கேன்பா.

நீங்க என்னவோ பண்ணுங்க…

இரவில் மத்த உறுப்புகள் முழு ஓய்வில் இருக்கும்.  இதயம் சிறிது ஓய்வில் இருக்கும். இத்தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை.

எப்படினா உறங்கும் போது ஒரு துடிப்புக்கும் இன்னொரு துடிப்புக்கும் உள்ள கால அளவு அதிகப்படும்.
அது தான் நாம் இதயத்துக்குக் கொடுக்கும் ஓய்வு. நாம்ப மூக்கு முட்ட சாப்பிட்டு படுத்தம்னா செரிக்கறதுக்காக இரத்தத்தை பம்ப் பண்ணி இதயம் டயர்டு ஆகிடும் . பகல்னா நம் இயக்கங்களினால சீக்கிரம் செரிச்சிடும்.

நாம்ப அப்படியே படுத்திருக்கனால தூங்கும் போது முழு ஆற்றலையும் இதயமே குடுக்க வேண்டியதாயிடுது.
அதுவும் இல்லாம அதோட சேர்ந்து வயிறு, கல்லீரல், இரைப்பை, மண்ணீரல், சிறு குடல் எல்லாத்தையும் ஓய்வு குடுக்காம வேலை வாங்கிடறோம். அப்ப அதுங்களும் சீக்கிரம் தேய்ஞ்சிடும்.

அந்த மாதிரி சீரணமாகிற உணவு நல்லாவும் சீரணமாகாது. நல்ல சத்துக்களாவும் மாற்றப்படாது. கெட்ட கொழுப்பு, கெட்ட சர்க்கரை இப்படித்தான் மாறும். அதுவும் இல்லாம பாதிக்கு மேல கழிவா அப்படியே வெளியேறி மலக்குடலை வேலை வாங்கி அதன் ஆயுளையும் கெடுத்து விட்ரும். சிலர் மதியம் சாப்பிட்டு அப்படியே தூங்குவாங்க. அதுவும் இதே கதை தான்.

அதனால் இராத்திரி  அளவா சாப்பிட்டு அது சீரணமான பிறகு தூங்கப் போங்க.

-செல்வராணி தங்கவேல்

3896total visits,2visits today