படிமங்கள் – குறும்படம்

0
157

நான் பாலா ஹரி, அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறேன். குறும்படங்கள் எடுக்கும் ஆவல் அதிகம், சில குறும்படங்களுக்கு சிறிய உதவியாளனாக இருந்து எனது ஆசையை வளர்த்துக் கொண்டேன். இதோ எனது முதல் குறும்படம் “படிமங்கள்” உங்களுக்காக!

இது ஒரு த்ரில்லர் படம். அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்திய பிண்ணனியில் படம் எடுப்பது கடினமான விஷயம் என்பதை உணரந்து கொண்டோம்.
டாக்டராக திரு.மோகன், இவர் பல மேடை நாடகங்களிலும், குறும்படங்களிலும் நடித்த அனுபவம் மிகுந்த நடிகர். செல்வாவாக எனது அலுவலகத்தில் உடன் பணி செய்யும் நண்பர். நடிப்பு இவருக்கு புதிது. அதுபோலவே ராஜா எங்களின் ஒளிப்பதிவாளர், நடிக்க மாட்டேன் என்றவரை வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தேன்.
நான் கதை, திரைக்கதை, வசனம், எடிட்டிங் மற்றும் இயக்கம் இலாக்காக்களை கவனித்துக்கொள்ள படம் உருவாகியுள்ளது.
படம் எப்படி என்பதை நீங்கள் சொல்லுங்கள்!
https://youtu.be/3XoGXwjHbqc
https://vimeo.com/204638838
-பாலா

903total visits,1visits today