பங்குனி மாத ஜோதிடபலன்

0
384
சூரியன்

புதன் சுக்கிரன்

செவ்வாய்

 

   
கேது 17 – புத– மேஷம்

25- புத -மீனம்

29– செவ்- ரிஷபம்

 

 
  ராகு
  சனி   பங்குனி மாத இராசி பலன் (2017) 

                      பங்குனிமாத இராசி பலன் (2017) 

வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் பங்குனி மாத கிரக நிலை…

மேஷம் : உண்மையாக வாழ்வதே உயர்வைத்தரும் என்பதை உணர்ந்து வாழும் மேஷராசிக்காரர்களான உங்களுக்கு இந்த மாதம் செய்தொழில் நன்றாக நடைபெறும். தொட்டக்காரியங்கள் துலங்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். ரியல் எஸ்டேட்,  கமிசன் தரகு தொழில்கள் நல்ல நிலையில் நடைபெறும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள், புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபார சம்பந்த வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். புதிய வேலையாட்கள் அமைவார்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு சற்று மன வருத்தம் ஏற்படும். விரும்பதகாத இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வேலைசுமை அதிகரிக்கும், மரியாதை குறைவான சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலைகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். பழையக்கடனை பைசல் செய்வதற்கு புதிய முறையை யோசிப்பீர்கள். குடும்பத்தினருடன் செலவிட நேரம் மட்டும் கிடைக்காது. வீண்அலைச்சல், உடல் சோர்வு, களைப்பு, எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் அலைச்சல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் வேலை, மேற்படிப்பு மேற்கொள்ள பயணப்படுவார்கள். பூர்வீக சொத்து வழியில் சிக்கல்கள் பிரச்சனைகள் வந்து செல்லும். நண்பர்கள், உறவினர்கள் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துக்கொண்டே இருக்கும். எதையோ இழந்ததை போல மனம் கடந்து அல்லாடும். சிறுநீர் உபாதைகள், வாயுத்தொல்லை போன்ற வியாதிகளால் அவதியுர்வீர்கள். மாணவ மாணவிகள் கவனமாக படித்து, எழுதிப்பார்த்து மனப்பாடம் செய்துக்கொள்ளவும். கன்னிப்பெண்கள் நண்பர்களிடம் கவனமாக பழகவும், உணவு விசயத்தில் கட்டுப்பாடு அவசியம். உயர்கல்வி வாய்ப்பு உண்டு, அரசியல்வாதிகளுக்கு கோஷ்டிப்பூசல் பிரச்சனை தீரும். கலைத்துறையினருக்கு தடைப்பெற்று இருந்த உங்கள் படைப்புகள் வெளியே வரும். விவசாயிகளுக்கு தோட்டப்பயிர்கள் லாபம் தரும். நிம்மதியையும், மனதைரியத்தையும் தரக்கூடிய மாதமிது…

சந்திராஷ்டமம்: மார்ச்17ந் தேதி இரவு மணி 08.00 முதல் 18, 19, மற்றும் 20ந்தேதி காலை 08.00 மணிவரை சந்திராஷ்டமம் வீண் அலைச்சல் ஏற்படும்…

 பரிகாரம் : முருகனை வழிபட்டால் பிரச்சனை தீரும். பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடவும். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கவும்.

ரிஷபம் : கடின உழைப்பே நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் என்று உழைக்கும் ரிஷப இராசியினருக்கு இந்த மாதம் வியாபாரத்தில் அதிசயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக விற்பனை ஆகாமல் இருந்த பழைய சரக்குகளை தள்ளுபடியில் விற்பனை செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவரும் விதமாக நிறைய உக்திகளை கையாளுவீர்கள். நீண்ட நாட்கள் வராமல் இருந்த வருமானம் வந்து சேரும். வேலையாட்களிடம் மட்டும் கவனம் தேவை. சிலர் சொந்தப்பணத்தில் புதிதாக தொழில் துவங்கவும் வாய்ப்பு உள்ளது. பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. கமிசன், தரகு தொழில், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் சிறப்பாக நடைபெறும். ஷேர் மார்கெட் மூலம் அதிக லாபம் கிடைக்கும். அரசால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் நெருக்கடி நிலை ஏற்படும். மேலதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். இதுவரை மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கப்பெறும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானத்தால் விலை உயர்ந்த ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. மூச்சுதிணறல், முதுகுவலி, வருவதற்கு வாய்ப்பு உண்டு. மனைவிக்கு இடுப்பு வலி பிரச்சனை உண்டாகும். பிள்ளைகளால் டென்சன் உண்டாகும். பெண்கள் கவனமுடன் இருப்பது நல்லது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் பயணங்களில் கவனம். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் ஏற்படும். மாணவ மாணவிகள் நன்றாக படித்து வெற்றிப்பெறுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு மனதுக்கு பிடித்த வரன் அமையும், புதிய நட்புகள் ஏற்படும், அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும், தலைமையிலும் மதிப்பு உண்டாகும். கலைஞர்கள் கற்பனைத்திறன் அதிகரிக்கும். மூத்த கலைஞர்கள் நட்பால் சாதனை படைப்பீர்கள். விவசாயிகள் நல்ல விளைச்சல் இருக்கும். கிணறு, போர் தோண்டுவதற்கு உகந்தகாலம், சிக்கல் நீங்கி சிறப்பாக வாழும் மாதமிது.

சந்திராஷ்டமம்: மார்ச் 20ம் தேதி காலை முதல் 21, மற்றும் 22ந் தேதி மாலை 6.30 மணி வரை முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்மைத்தரும்.

பரிகாரம் : ஈசன் வழிப்பாட்டால் இன்பம் கூடும் மாதமிது.

மிதுனம் : விருப்பு வெறுப்பின்றி அனைவரிடமும் அன்போடு பழகும் மிதுன ராசியினருக்கு, இந்த மாதம் வியாபாரம் அமோகமாக நடைபெறும், ஸ்டேசனரி, ஹோட்டல் பிசினஸ் சிறப்பாக நடைபெறும், சிலருக்கு  சொந்த கட்டிடத்தில் கடைத்திறக்க வாய்ப்பு அதிகம், வியாபாரத்தில் புதிதுபுதிதாக உக்திகளை கையாண்டு, நிறைய வாடிக்கையாளர்களை கவர்வீர்கள், தொழிலில் செல்வாக்கு கூடும் மாதமிது, உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள், சக ஊழியர்களிடம் ஒற்றுமை வலுப்படும், எதிரபர்த்த இடமாற்றம் கிடைக்கும், வேலைத்\தேடுவர்களுக்கு நல்ல வேலை அமையப்பெரும், தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக வாய்ப்பு உண்டு, சம்பள உயர்வும் கிடைக்கும், வருமானம் பெருகும், செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள், எதிரிகளால் கூட ஆதாயம் அடைவீர்கள், வீடு, மனை வாங்குவதற்கு கேட்டு இருந்த வங்கி கடன் கிடைக்கும், வீடு வாங்க முன்பணம் கொடுப்பீர்கள், மனைவி வழியில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள், சொந்த ஊரில் செல்வாக்கு உயரும், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும், குடும்பத்தில் சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும், சகோதரிக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும், தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும், பிள்ளைகள் உயர்கல்வி, உத்தொயோகம், திருமணம் போன்ற முயற்சிகள் வெற்றியடையும், உடல்நிலையில் கவனம் தேவை, சளித்தொல்லை, தொண்டைவலி, தோல் அரிப்பு ஏற்படும், மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், நுழைவுத்தேர்வுக்கு ஆயுத்தமாவீர்கள், கன்னிப்பெண்கள் உயர்கல்விக்கு வாய்ப்பு அதிகம், அரசியல்வாதிகள் புகழ் செல்வாக்கு கூடும், கலைத்துறையில் பெரிய வாய்ப்புகளை பெற்று மகிழ்வீர்கள், விவசாயிகள் இயற்க்கை விவசாயத்தால் ஆதாயம் அதிகரிக்கும், புதிய நிலம் வாங்கி மகிழ்வீர்கள், இந்த மாதம் எல்லாவகையிலும் செல்வாக்கு கூடும்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 22ந் தேதி மாலை மணி 6.30 முதல் 24ந் தேதி வரை எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

பரிகாரம்: பெருமாளை வழிபடவும், ஆதரவற்றோர்களுக்கு உதவுவது பிரச்னையை தீர்க்கும்…

கடகம் : மனசுக்கு பிடித்த வாழ்க்கையே உண்மையான வாழ்க்கையென்று நினைக்கும் கடகராசியினருக்கு இந்த மாதம் வியாபாரத்தில் கடுமையான போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும், லாபத்திற்கு குறைவிருக்காது, வாடிக்கையாளர்களைகனிவாக நடத்துங்கள், பங்குத்தாரர்களிடம் அனுசரித்து செல்லவும், அனுபவம் மிக்க வேலையாட்கள் வேலையை விட்டு செல்வதற்கும் வாய்ப்பு அதிகம், உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும், சக ஊழியர்கள் சமரசமாக போவார்கள், உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி, பழைய சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள், வெளிவட்டாரத்தில் புகழ் செல்வாக்கு கூடும், பழைய நண்பர்கள் நாடி வருவார்கள், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்கள் உதவியும் கிடைக்கப்பெறுவீர்கள், புதிய யுக்திகளை கையாண்டு பழைய பிரச்சனைகளுக்கான தீர்வு காண்பீர்கள், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி நல்ல முக்கிய முடிவுகளை  எடுப்பீர்கள், கடந்தக்கால சம்பவங்களை நினைத்து மனவேதனை அடைவீர்கள், கெட்டக்கனவுகள் வந்து உறக்கம் கெடும், எதைத்தொட்டாலும் பிரச்சனையாகிறதே என்று அலுத்துக்கொள்வீர்கள், சோதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கும், செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கும், தந்தைக்கு வேலைச்சுமை, அலைச்சல், டென்சன் வந்துப்போகும், அவருடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும், அரசு சம்பந்தப்பட்டவேலைகள் தாமதமாகி முடியும், கன்னிப்பெண்கள் காதல் விவகாரத்தை தள்ளிவைத்துவிட்டு, கல்வியில் கவனம் செலுத்துங்கள், பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள், கர்ப்பிணிப்பெண்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடந்துக்கொள்ளவும், மாணவ மாணவிகள் நன்றாக படித்து, எழுதிப்பாருங்கள், நியாபகமறதி அதிகமாகும் கவனம், சந்தேகங்களை ஆசிரியர், நண்பர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளவும், அரசியல்வாதிகள் மற்றவர்களின் சொந்த விசயங்களை பற்றி பொதுவெளியில் பேசவேண்டாம், தொகுதி மக்கள் குறைகளை கேட்டு தீர்வுக்காண பாருங்கள், கலைத்துறையில் உங்களது படைப்புகளுக்கு பெரிய வரவேற்ப்பு கிடைக்கும், விவசாயம் சிறப்பாக இருக்கும், நெல், எண்ணெய்வித்துக்கள், கிழங்குகள் நல்ல லாபம் அளிக்கும், விடாமுயற்சியால் வெற்றிக்காணும் மாதமிது.

சந்திராஷ்டமம்: மார்ச் 25ந் தேதி முதல் 26 மற்றும் 27ந்தேதி காலை 9 மணிவரை சந்திராஷ்டமம், யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

பரிகாரம் : சிவனையும், அம்பாளையும் வணங்குங்கள், ஏழைகளின் கல்விக்கு உதவி புரியுங்கள்..

சிம்மம்: வாழ்க்கைக்கான வரைமுறையுடன், வெளிப்படையாக வாழும்  சிம்மராசியினருக்கு, இந்த மாதம் வியாபாரத்தில் போட்டிகள் இருக்காது, லாபம் சிறப்பாகவே இருக்கும், இருந்தும் வியாபாரம் ஏற்ற இறக்கதொடே நடைபெறும், வேலையாட்கள் தோல்லை கொடுப்பார்கள், அறிமுகமில்லா நபர்களை பார்ட்னராக சேர்த்துக்கொள்ள வேண்டாம், உத்தியோகத்தில் சில டெக்னிக்கனாவிசயங்களை அறிந்துக்கொள்வீர்கள், சக ஊழியர்களால் வேலைசுமை பாதியாய் குறையும், அதிகாரிகளும் ஆதரவாகவே இருப்பார்கள், எப்படியான நிலையையும் சமாளிக்க கூடிய ஆற்றல் இருக்கும், உறவுகளும், நட்புகளும் உதவியாய் இருக்கும், நீண்டகாலமாக கிடப்பில் இருந்த வேலைகள் முடிவடையும், உடன்பிறப்புகள் ஆதரவாக வருவார்கள், கடனை அடைப்பதற்கு வழிவகுப்பீர்கள், சொத்து பிரச்சனை தீர்வுக்கு வரும், பயணங்கள், அலைச்சல் இருந்தாலும் அவசியமவதால் அலுப்பிருக்காது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துவதால் அவமானத்தில் இருந்து தப்பிக்கலாம், குடும்பத்தினருடன் பழைய பிரச்சனைகளைப்பற்றி பேசி வாக்குவாதம் செய்ய வேண்டாம், எப்போதும் சிடு சிடுவென இராமல், சற்று சிரித்து பேசவும் கற்றுக்கொள்ளுங்கள், கன்னிப்பெண்கள் விரும்பிய படியே சிறப்பான வரன் வந்து வாயில்கதவைத் தட்டும், மாணவ மாணவியர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பீர்கள், போட்டித்தேர்வுகளில் கலந்துக்கொண்டு வெற்றிபெறுவீர்கள், அரசியல்வாதிகள் தேவையில்லாத கருத்துக்கள் கூற வேண்டாம், மக்கள் மத்தியில் விமர்சனதிற்கு ஆளாக கூடும், கலைஞர்கள் கடின உழைப்பால் வெற்றிப்பெறும் மாதம், விவசாயிகளுக்கு வாய்க்கள், வரப்பு தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, விளைச்சலுக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், கடினஉழைப்பால் வெற்றிபெறவேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம்: மார்ச் 27 மற்றும் 28, 29 மதியம் 1 மணிவரை சந்திராஷ்டமம்  எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம் : முருகனை வணங்கினால் முயற்சிகள் வெற்றியடையும்.

கன்னி: சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து முன்னேறும் எண்ணம் கொண்ட  கன்னி ராசியினர் இந்த மாதத்தில் வியாபாரத்தில்லாபம் அதிகரிக்கும். தொழில் நிலையத்தை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள், வேலையாட்களிடம் கறாராக இருக்கவும், அக்கம் பக்கம் கடைக்காரர்களிடம் சண்டைப்போடாதீர்கள், புதிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது, உள்ளதை வைத்து திருப்தி அடையுங்கள், அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை செலுத்திவிடுங்கள், அபராதம் தவிர்க்க உதவும், உத்தியோகஸ்தர்களுக்கு மிக சிரமமான மாதமிது, சகஊழியர்கள் முன் ஒன்று பேசி, பின் ஒன்று பேசுவார்கள், அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்காது, விருப்பமில்லா இடத்திற்கு மாற்றம் ஏற்படும், மனத்தைரியம் அதிகரிக்கும் அதன் மூலம் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள், தேவைப்படும் இடங்களில் உங்கள் திறமைகளை காட்டுவீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், சூரியன் பார்வையால் தூக்கமின்மை, டென்சன், தொண்டை எரிச்சல் ஏற்படும், மனதை தியானம் மூலம் அமைதிப்படுத்துங்கள், வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவும், செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் சகோதர வகையில் பிரச்சனை, ஏமாற்றம், சிறு சிறு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இடம் சொத்து வாங்கும் பொது கவனமாக இருக்கவும், கடன் பற்றியக்கவலை ஏற்படும், எளிதில் சீரணம் ஆகும் உணவை எடுத்துக்கொள்ளுங்கள், மாணவமாணவிகள் கவனமாக படித்துப்பார்த்து விடையை எழுதி பாருங்கள், கவனம் சிதறும், விளையாட்டை குறைத்துக்கொள்ளுங்கள், கன்னிப்பெண்களுக்கு பெற்றோரிடம் அன்பு அதிகரிக்கும், காதல் வெற்றிப்பெறும், அரசியல்வாதிகள் தொகுதியில் தேவையறிந்து பணியாற்றுங்கள், கலைஞர்கள் வேற்று மொழியில் இருந்து வாய்ப்பு கிடைக்கப்பெறுவீர்கள், விவசாயம் நல்ல விளைச்சல் இருந்தாலும், பூச்சி வகைகளால் தொல்லை இருக்கும், தடைகளை தகர்த்து வீறு நடைப்போடும் மாதமிது..

சந்திராஷ்டமம்: மார்ச் 29 பிற்பகல் முதல் 31ந்தேதி பிற்பகல் 3.30 வரை வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்..

பரிகாரம் : பைரவ வழிபாடு பலன் தரும்.

துலாம் : இனிமையாய் பேசுவது மட்டுமல்ல, குறிப்பறிந்து பேசுவதுமே பிறர் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை அறிந்த துலா ராசியினரே, இந்த மாதம் வியாபாராம் அமோகமாக இருக்கும், புதிய வாடிக்கையாளர்கள் நிறையவே வருவார்கள், பழைய வாடிக்கையாளர்களும் மீண்டும் வருவார்கள், கடையை விரிவுபடுத்துவீர்கள், பங்குத்தாரர்கள் ஆதரவாக இருப்பார்கள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தொழிலை விரிவுப்படுத்துவீர்கள், வேலையாட்களை மாற்றக்கூடிய யோகம் உண்டு, உத்தியோகத்தில் சவாலான வேலையை கூட மிக எளிதாய் செய்து முடிப்பீர்கள், வேலைசுமை அதிகரிக்கும், சக ஊழியர்கள் அனுசரித்து செல்வார்கள், உயர் அதிகாரிகளிடம் பகைத்துக்கொள்ள வேண்டாம், பணியிடத்தில் வீண்பழியை ஏற்க நேரிடும், மற்றபடி வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும், கடன் பிரச்னையை சமாளிக்க புதிய முடிவை எடுப்பீர்கள், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை, சிறு சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வழக்குகள் முடிவுக்கு வரும், குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், மனக்குழப்பங்கள், மோதல் சண்டைகள் வந்துச்செல்லும் மனம் விட்டு பேசுவது நல்லது, சகோதர வகையில் திருமண முயற்சி வெற்றியடையும், உறவுகளை அனுசரித்து செல்வது நல்லது, குடும்ப விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது, வருங்காலத்தை பற்றிய கவலை வேண்டாம், பெண்களுக்கு காதல் இனிக்கும், புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள், சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள், மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள், பொது அறிவு வளரும், அரசியலில் புதிய வாய்ப்புகள், பதவிகள் வந்து சேரும், கலைத்துறையில் உங்களது படைப்புகளை போராடி வெளியிட வேண்டும், விவசாயம் மாற்று பயிரால் மகத்தான லாபம் காண்பீர்கள், பூச்சித்தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள், காரியத்தில் கவனம் செலுத்தி வெற்றிக்காண வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம்: மார்ச் 31ந் தேதி மாலை மணி 3.30 முதல் ஏப்ரல் 1 மற்றும் 2ந் தேதி மாலை 6 மணி  வரை சந்திராஷ்டமம் மனஉளைச்சல் ஏற்படும், கவலை வேண்டாம் அமைதியாய் இருங்கள் போதும்.

பரிகாரம் : சிவனை வழிபடுவது சிந்தையை சிறப்பாக்கும்.

விருச்சிகம்: கடின உழைப்பே காரியத்தை சாதிக்கும் எனும் எண்ணம் கொண்ட விருச்சிக இராசியினருக்கு இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் உண்டு, இருந்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும், லாபம் குறையாது, பங்குத்தாரர்கள் வேலையாட்கள் ஒத்துழைப்பு கிடைக்கும், பெரிய நிறுவனங்களிடம் புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள், உத்தியோகத்தில் உயர் அதிகரிகள் ஆதரவோடு இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள், சக ஊழியர்கள் மத்தியில் ஈகோவை தவிர்க்கவும், தேவையில்லாத வாக்குவாதத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள், மரியாதை குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு, சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் அறிமுகத்தால் செல்வாக்கு ஏற்படும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும், அடிவயிற்றில் வலி வந்து போகும், உங்கள் நண்பர்களை யாருக்கும் அறிமுகப்படுத்திவைக்க வேண்டாம், அக்கம்பக்கம் எதிர்வீட்டுக்காரர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம், உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக்காட்டுங்கள், மனதில் சோர்வு, தாழ்வு மனப்பான்மை, உறவினர், நண்பர்களுடன் மோதல் ஏற்படும், பணப்பற்றாகுறை இருக்கும், சகோதர வகையில் ஒற்றுமை வலுப்படும், இடம் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் முடிவுக்கு வரும், தள்ளிப்போன காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும், வீடு கட்டுவது தொடர்பான வங்கிகடன் கிடைக்கும், சிலருக்கு புதிய வாகன சேர்க்கை உண்டு, பிள்ளைகள் வகையில் கருத்து மோதல், மனகசப்பு, நிம்மதியற்ற தன்மை உண்டாகும், பெண்கள் யாரிடமும் கவனமுடன் பழகவும், தகுதியானவர் என்று நம்பி ஏமாற வாய்ப்பு உண்டு, காதல் தோல்வி, குழப்பங்கள் உண்டாகும், பெற்றோரின் விருப்பபடி நடந்துக்கொள்ளுங்கள், மாணவ மாணவிகள் அரட்டைஅடிப்பதை நிறுத்தி, பாடத்தில் கவனம் செலுத்துங்கள், முக்கியமான பாடங்களை எழுதிப்பாருங்கள், அரசியல்வாதிகள் தலைமையை பகைத்துக்கொள்ளாதீர்கள், மக்களை சந்திப்பதை தவிர்க்காதீர்கள், கலைத்துறையினருக்கு பாராட்டுகள் குவியும், விவசாயிகள் பக்கத்து நிலத்துகாரரிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது, சவால்களை சந்தித்து வெற்றிப்பெற கடினமாக உழைக்கவும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 2ந் தேதி மாலை 6 மணி முதல் 3 மற்றும் 4ந் தேதி இரவு 9 மணி சந்திராஷ்டமம் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் : அம்மனை வழிபடவும், ஏழைகளுக்கு உதவுங்கள்.

தனுசு : எதுவும் காலத்தில் நடந்தால்தான் நல்லது என்பதை அறிந்த தனுசு ராசியினருக்கு இந்த மாதம் வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை தரும், வாடிக்கையாளரை கவரும் விதத்தில் விளம்பரம் செய்வீர்கள், புதிய முதலீடுகள் ஏற்படும், பழைய பாக்கிகள் வசூலாகும், அரசாங்க உதவிகள் கிடைக்கும், பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள், உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பார்வை உங்கள் பக்கமே இருக்கும், சக ஊழியர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடு ஏற்படும், உங்கள் திறமைக்கு சவாலான மாதமிது, உங்கள் பலம் பலவீனம் அறிந்துக்கொள்வீர்கள், நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், உறவினர், நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல் முடிவுக்கு வரும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகளில் கலந்துக்கொள்வீர்கள், பிள்ளைகள் வழியில் பெருமை கூடும், மகளுக்கு திருமணம் நிச்சயமாகும், மகனுக்கு நல்ல வாழ்க்கை அமையும், வெளிநாட்டு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு உண்டு, குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப்பாக்கியம் உண்டாகும், சொத்து சேர்க்கை உண்டாகும், வி.ஐ.பி அறிமுகம் கிடைக்கும், அரசு காரியங்கள் நல்லவிதத்தில் நடைபெறும், பணப்பற்றாக்குறை ஏற்படும், கடன்தொல்லையால் அவதிபெறுவீர்கள், கௌரவ இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு, பெண்களுக்கு கோபம் குறையும், நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும், வெளி ஊர்களில் வேலை கிடைக்கும்,மாணவ மாணவிகள் அசட்டையாக இல்லாமல் இருப்பது நல்லது, உடல் நலனிலும் அக்கறை தேவை, நன்றாக உண்ணுங்கள், நினைவாற்றல் அதிகரிக்கும், அரசியல் கோஷ்டிபூசலால் இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும், செல்வாக்கு கூடும், கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் வந்து சேரும், வேற்று மொழி இன நண்பர்கள் உதவுவார்கள், விவசாயிகள் நீண்டக்கால பயிர்வகைகளால் ஆதாயம் அடைவீர்கள், விடாமுயற்சியால் வெற்றிக்காணும் மாதமிது.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 4 ந் தேதி இரவு 9 மணிமுதல் 5 மற்றும் 6ந் தேதி வரைதெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல்திணறுவீர்கள், உடல் சோர்வு ஏற்படும்.

பரிகாரம் : சரபேஸ்வரரை வணங்குவது சகல பிரச்சனைக்கும் தீர்வாக முடியும்..

மகரம் : இழப்புகள் ஏமாற்றம் என்பதை எப்போதும் அனுபவித்து பழகிப்போன மகர இராசியினருக்கு இந்த மாதத்தில் வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும், புது வாடிக்கையாளர்கள் வருவார்கள், புதிய முதலீடுகள் செய்வீர்கள், ஷேர் மார்கெட் மூலம் ஆதாயம் உண்டு, சொந்த முதலீடுக்கொண்டு புதிய தொழில் துவங்கவும் வாய்ப்பு உண்டு, வேலையாட்கள் உதவியாக இருப்பார்கள், உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும், மூத்த அதிகாரிகள் உதவியாய் இருப்பார்கள், சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும், சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும், பணப்பற்றாக்குறை நீங்கும், காரியங்கள் நடைபெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும், தைரியம் கூடும், தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள், மனக்குறைகள் நீங்கும், மனதில் இருந்து வந்த இறுக்க நிலை மாறி உத்வேகம் பிறக்கும், நண்பர்கள், உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும், அரசால் அனுகூலம் உண்டு, அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள், வெளிநாட்டு வேலையில் இருப்பவர்கள் உதவியாக இருப்பார்கள், வீடு, இடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், விஐபி களின் அறிமுகம் கிடைக்கும், வீடு மாற்றும் எண்ணம் அதிகரிக்கும், சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், திருமண வாய்ப்பு கைகூடிவரும், உறவினர் வருகையால் உற்சாகமடைவீர்கள், பெண்கள் உற்சாகமடைவீர்கள், சோர்வு, களைப்பு நீங்கும், காதல் கைகூடும், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் உண்டு, கல்வியிலும் சிறந்து விளங்குவீர்கள், மாணவ மாணவியர்கள், படிப்பில் மட்டுமல்ல பொது அறிவிலும் சிறந்து விளங்குவீர்கள், விளையாட்டிலும் வெற்றிப்பெறுவீர்கள், அரசியல்வாதிகளுக்கு பாராட்டுகள் குவியும், மாற்றுக்கட்சியினர் கேள்விக்கு அவர்கள் அசந்து போகும் வண்ணம் பதில் அளித்து வாயடைபீர்கள், கலைத்துறையினருக்கு மாற்று மொழிகளில் வாய்ப்புகள் அதிகம் வரும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும், விவசாயத்தில் மகசூல் பெருகும், கடன் பிரச்சனை தீரும், நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவால் வெற்றி காணும் மாதமிது.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 7, 8 மற்றும் ஏப்ரல் 9 ந் தேதி காலை 7.15 மணிவரை சந்திராஷ்டமம், முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம் : சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க சகல பிரச்சனைகளும் தீரும்,

கும்பம் : எதையும் ஆழ்ந்து யோசித்து செயல்படும் கும்ப ராசியினர் இந்த மாதத்தில் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள், சிலர் கடையை புதிய இடத்திற்கு மாற்றவும் கூடும்,  பங்குதாரர்களை அனுசரித்து செல்லவும், வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு வேண்டாம், உத்தியோகத்தில் நிம்மதியான சூழல் உருவாகும், சக ஊழியர்கள் உங்களை புரிந்துக்கொள்வார்கள், உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரி வேறு இடத்திற்கு மாற்றலாக கூடும், வேலையில் சின்ன சின்ன சலுகைகள் கிடைக்ககூடும், பணவரவு கூடும், சிலருக்கு ஷேர் மூலமும் பணவரவு உண்டு, சிலருக்கு வீடு மாற்றம், வாகன மாற்றம் ஏற்படும், சவாலான செயல்களை சாதரணமாக செய்து முடிப்பீர்கள், பிள்ளைகளின் பிடிவாத போக்கு மாறும், கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நலம், இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது குடும்பத்தில் நிம்மதி தரும், உடலில் ஏற்பட்ட உபாதைகள் நீங்கி, ஆரோக்கியம் சீராகும், வீண் பதட்டங்களை தவிர்க்கவும், உஅணர்ச்சி வேகத்தில் அந்தரங்கவிசயங்களை யாரிடமும் பகிர வேண்டாம், கண், காது, பல்வலி வந்து நீங்கும், பெண்கள் உங்கள் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படுங்கள், சிலர் தடைபட்ட கல்வியை தொடர்வீகள், மாணவமாணவிகள் நன்றாக படிப்பெர்கள், நீண்ட நாட்கள் காண நினைத்த நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள், அரசியலில் எதிர்கட்சியினர் குற்றசாட்டு அதிகரிக்கும், செலவுகள் அலைச்சல் கூடும், கலைத்துறையினருக்கு செல்வாக்கு கூடும், நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும், மரப்பயிர்களால் லாபம் கிடைக்கும்.கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம் : மார்ச் 14 மற்றும் 15ந் தேதி காலை 9 மணி வரையும், 9ந் தேதி காலை 7.35 மணிமுதல் 11ந் தேதி மாலை 4.30 மணிவரை எல்லா செயலும் தாமதாக நடைபெறும்.

பரிகாரம் : நாகதேவதையையும் ஈசனையும் வழிபடுங்கள்.

மீனம் : எல்லோரிடமும் பணிவாக நடந்து கவர்ந்து இழுக்கும் மீனராசியினருக்கு இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், பழைய பாக்கிகள் வசூலாகும், பங்குதாரர்கள் பாராட்டுவார்கள், பணியாளர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் விட்டுவிலகும், வெளியாட்களை வேலைக்கு சேர்க்கும்போது நன்கு தெரிந்தவர்கள் சிபாரிசோடு சேர்க்கவும், உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுகளை பெறுவீர்கள், சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும், சில முக்கிய பொறுப்புகள் உங்கள் வசம் வந்து சேரும், வீடு மனை வாங்கும் திட்டம் நிறைவேறும், நிலம் சம்பந்தமான வழக்குகள் வெற்றிபெறும், பூர்வீக சொத்தும் கைக்கு வந்து சேரும், பூர்விக சொத்தை மராமத்து பணிகள் செய்து சீர் செய்வீர்கள், வாகன பராமரிப்பு செலவும், சிலருக்கு புது வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும், உடல் சோர்வு, முதுகுவலி, மூட்டுவலி, களைப்பு, பல்வலி போன்ற உபாதைகளால் அவதி படுவீர்கள், தந்தை மூலம் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள், தந்தையார் உடல் நலனில் அக்கறை தேவை, பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும், மகளுக்கு திருமண முயற்சி வெற்றியடையும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும், மனைவியால் அந்தஸ்து உயரும், மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும், மனதைரியம் அதிகரிக்கும், அறிவு பூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள், ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும், பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு பெருகும், காதலில் தெளிவு பிறக்கும், உங்களுக்கு பிடித்த மாதிரியான வரன் அமையும், மாணவ மாணவிகள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், தேர்வை நன்றாக எழுதுவீர்கள், மற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிப்பெறுவீர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றமான மாதமிது, கலைத்துறையில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும், வருமானம் அதிகமாகும், விவசாயிகள் காய்கனிகளால் லாபமடைவீர்கள், இடம், சொத்து, ஆபரன சேர்க்கை கிடைக்கும் மாதமிது..

சந்திராஷ்டமம் : மார்ச் 15ந் தேதி காலை 9 மணி முதல் 16, 17ந் தேதி இரவு 8 மணி வரை மற்றும் ஏப்ரல் 11ந் தேதி மாலை 4.30 மணி முதல் 12, 13 ஆகிய தேதிகளில் வேலைச்சுமைஅதிகமாகும்.

பரிகாரம்: கரூர் அருகேயுள்ள நெரூர் தலத்திலுள்ள  சதாசிவ பிரம்மேந்திராரின் ஜீவசமாதியை தரிசித்து வாருங்கள்.

வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் பங்குனி மாத பலனை கணித்தவர்

“ஜோதிட அமுதம்” S.ஜோதிமணிகாந்தி. D.Astro.,

1373total visits.