வருமானவரி சோதனை காரணமென்ன?

0
28

மணல் மாபியா வைகுண்டராஜனின் விவி மினரல் குருப் நிறுவனத்தில் இன்று அதிகாலை முதல் வருமானவரி துறை சோதனை மேற்க்கொண்டுள்ளது. விவி மினரல் குருப்புக்கு சொந்தமான சுமார் 100 இடங்கள் சோதனையில் சிக்கியுள்ளன. இந்த 100 இடத்திலும் ஒரே நேரத்தில் சோதனை நடைப்பெற்று வருகிறது.

சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை பகுதிகளில் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சரியான வருமானவரி கட்டவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக வருமானவரி துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

– கிஷோர்

1954total visits,16visits today