உடல் முடிகளை அகற்றுவது சரியா?

0
112

உடல் முடிக்கும் ஹார்மோன்களுக்கும் உள்ள தொடர்பு:

உடலில், எங்கும் இருக்கற முடியையும் அகற்றக் கூடாது. இயற்கை காரணமாக தான் அங்கங்க உடம்புல முடிய குடுத்திருக்கு. எங்கெங்க முடி இருக்கோ அங்க இருக்கிற மெயினான உள் உறுப்பின் சூட்டை சமநிலைப்படுத்தவும், காற்றிலுள்ள தூசிகள் மூக்கு, காது போன்ற உறுப்புகளுள் புகாமல் இருக்கவும்தான் முடி.

அதுவும் இல்லாம உணர்வுகளை தூண்டவும், கடத்தவும்( அதாய்யா சம்திங் சம்திங் சமயத்துல உடம்பெல்லாம் முடி இருந்தாதா உணர்வுகள் தூண்டவும்படும் சப்ளையும் ஆகும் ஸ்ஸப்பா) முடி உதவுது.

அதை விட்டுட்டு அழகுபடுத்தறன்ற பேருல முடிய க்ரீம் போட்டு இழுக்கறது, பட்டைய வச்சு உரிக்கறது, புடுங்கறதுதெல்லாம் பண்ணக் கூடாது. அப்படி இழுக்கறப்ப உள்ளுறுப்புகளும் நரம்புமண்டலமும் பயங்கரமா பாதிக்கப்படுது. அதனால் பல பக்க விளைவுகள் வருது.

ஆனால் முடி இருக்கும் இடங்களை வேர்வை, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொந்தரவாக feel பண்ணா சிறிது கட் பண்ணியோ அல்லது ஷேவிங் ரேஷர் மூலமோ வலியின்றி நீக்கலாம். ஆனால் மூக்கு, காது, கண்இமை, ஆண்களின் மார்பு போன்ற இடங்களில் உள்ள முடிகளை நீக்குவது இயற்கைக்குப் புறம்பானது.

முக்கிய விசயம் முடிக்கும் ஹார்மோனுக்கும் பெரிய தொடர்பு உண்டு. உடல் முழுவதும் முடி உள்ள ஆணின் ஆண்தன்மை, முடியற்ற ஆணை விட அதிகம். கோபம், வேகம், துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவை அதிகமாக இருக்கும்.

மார்பில் அடர்ந்த ரோமம் உள்ள ஆணின்மீது தான் பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. தாடி மீசையின் அடர்த்தி, soft இதைக் கொண்டு அவனின் குணத்தையும் ஆண்மையையும் எடை போட முடியும்.

அதேபோல் பெண் உடலில் சிறிது ஆண்தன்மை இருக்க வேண்டும். அப்போது தான் அவள் பூஞ்சையாக இல்லாமல் எல்லாவற்றிற்கும் சரியாக இருப்பாள். இதையும் அவள் உடல் முடியைக் கொண்டே கண்டு பிடித்துவிடலாம்.

அதே சில பெண்களுக்கு ஆண்களைப் போலவே தாடையிலும் மேல் உதட்டின் மேலும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். அவர்கள் ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, பெண்மைப் பண்பு குறைந்தவர்கள் கலவிக்கும் அவ்வளவாக சரிப்பட மாட்டார்கள். அந்த இடங்களில் உள்ள முடிகளை நீக்கினாலும் அந்த பண்புகளை மாற்ற முடியாது.

உடலின் உள்ளே நடக்கும் விசயங்களையும், நம் குணத்தையும் வெளிப்படுத்தும் சிக்னலே நம் புறத்தோற்றமும் செயல்பாடுகளும். சில பெண்களுக்கு ஆண்கள் போலவே மார்பில் முடி இருக்கும். அவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர்கள் கிட்டத்தட்ட ஆண்களே. அவர்களுக்கு தைராய்டு இருக்கும். எந்த மருத்துவ முறையாலும் அவர்களால் குழந்தை பெற இயலாது என்பதே உண்மை.

மெனோபாஸிற்குப் பிறகு சில பெண்களுக்கு மீசை, தாடி வளர்வதும் இப்படித்தான்.

உடல் முழுவதும் பூனை முடி கொண்ட பெண்தான் கவர்ச்சியாகவும், கலவிக்கு ஏற்றவளாகவும் இருப்பாள். உடல் ஸ்பரிசத்தை மின் அதிவுகளால் கடத்துவதும் முடிகளே.

ஆனால் உடல் முடியை அகற்றுவதே அழகு என்று பெண்கள் நினைக்கிறார்கள். உண்மையில் ஒரு பெண்ணின் முடியற்ற கால்களைப் பார்ப்பதை விடவும் முடி உள்ள கால்களைப் பார்க்கும்போது தான் ஆண் தன்னிலை இழக்கிறான்.

ஆகவே ஆணோ பெண்ணோ நீங்கள் கவர்ச்சியாகவும் அழகுடனும் இருக்கவும், கூடவே கலவி இன்பத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் விளம்பரங்களைப் பார்த்து முடியை நீக்குவதுதான் ட்ரென்ட் என்று முட்டாள்தனமாக அதை செய்யாமல் முடிந்தவரை உடல் முடிகளை இயல்பாக இருக்க விடுங்கள்.

— செல்வராணி தங்கவேல்

2066total visits,6visits today