கையேட்டில் காணாமல் போன தாஜ்மஹால்

0
40

உத்தரப் பிரதேச மாநில அரசின் சுற்றுலா துறையின் கலாச்சார, பாரம்பரிய அடையாளங்களை சுட்டிக்காட்டும் கையேட்டில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பற்றிய விவரங்கள் இல்லை.
அந்தக் கையேட்டில் வாரணாசியின் கங்கா ஆரத்தி படத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத், சுற்றுலா அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.

கையேட்டின் உட்பக்கம் சுற்றுலா தளங்களின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. காசி முதல் இடத்தையும் கிருஷ்ணர் பிறந்த மதுரா இரண்டாம் இடத்தையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை பூசாரியாக இருக்கும் கோரக்பீத் நான்காவது சுற்றுலா தலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளின்டன், பிரிட்டிஷ் இளவரசர், டிரம்ப் எல்லாம் இந்தியா வந்தா அவங்களும் இனி மாட்டுக்கு பூஜை செய்வாங்க போல.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “ராமாயணமும், மகாபாரதமுமே இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றனவே தவிர தாஜ்மஹால் அல்ல” எனக் கூறியுள்ளார்.நாடி நெரம்பு ரத்தம் எல்லாம் இந்துத்துவா மட்டுமே கலந்திருக்கு போல.

சர்ச்சை கெளம்புற வேகத்தை பார்த்த உத்தரபிரதேச சுற்றுலா அமைச்சர் ரீட்டா பகுகுணா, “உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலை மேம்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை வழங்குகிறது” என்று அறிக்கை கொடுத்திருக்கார் பார்ப்போம்.

வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் நாடுய்யா இந்தியா. இந்தியா இந்துத்துவா ராமர் கிருஷ்ணர் என்று ஒருமை ஆக்குறேன்ன்னு அமைதியை கலைக்க பாக்குறீங்க.

தாஜ்மஹால் வரலாறை காதுலே மட்டும் தான் கேட்ருப்பார் போல. அது பெயர் சொல்வதுக்கூட அபச்சாரம் என்று விட்டுருப்பார் போல . “தேஜோ மஹாலய” என்றும் பெயர் உண்டு. அது சிவன் கோவில் என்ற சர்ச்சை உண்டு. வரலாறை கிளறினோமென்றால் தெரியவரும் முகலாய பேரரசர்கள் இந்திய கட்டிட கலையை வியந்து நம் மக்களிடம் கற்று, இந்திய மக்களை வைத்து கட்டப்பட்டதும் கூட.

தாஜ்மஹால் சுற்றுலா தலமாக இன்றும் வெவ்வேறு நாட்டினர் கண்டு ரசிக்கும் கணிசமாக நாட்டுக்கு வருவாய் ஈட்டி தரும் உலக அதிசயங்களில் ஒன்று. அதை அரசு இப்படி ஒதுக்குவது உள்ளதிலும் உள்ள முட்டாள் தனம். சொந்த கருத்தை ஒரு கூட்டத்தில் மேல் திணிப்பது தவறு யோகியே.

-ஸ்வேதா சந்திரசேகரன்

2255total visits.