வடசென்னை – சினிமா விமர்சனம்

0
85

Machiavillainism ரொம்ப பிடிச்ச theoryல ஒன்னு. சின்னதா ஒரு analysis பண்ணி பார்த்தா இங்க பேசப்பட்ட, திரும்பிப் பார்க்க வைத்த பல திரைப்படங்கள்ல machiavillain கதாபாத்திரங்கள் நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு.

ரைட் ப்ரம் நாயகன் ஒன்லைன் முதல் வட சென்னை ஒன்லைன் வர இந்த கான்செப் தான். Machiavillenism is using clever attitude, but often dishonest methods, which deceives, to achieve power or people.

துரோகம், பதவி வெறி, இதற்கிடையே நடக்கும் கொலைகள், பழிவாங்கல்கள் , நம்ம மக்களுக்கு நாம நல்லது பண்ணணுங்கற ஒரு அடிப்படை நோக்கத்திற்காக.

அன்பு கேரக்டர் ஸ்கெட்ச் மற்றும் அவரது மிகவும் இயல்பான நடிப்பு இன்னொரு நேஷனல் அவார்ட் பெற்றுத் தந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

வடசென்னை, ஒரு க்ராப்ட்மேன்ஷிப் தெரிஞ்ச ஒருத்தரால எந்த காம்ப்ரமைசும் பண்ணிக்காம ஒரு படைப்ப ஒவ்வொரு ப்ரேம்லயும் நியாயத்தோட பண்ணமுடியும்ன்னா அது வெற்றி மாறனால மட்டும் தான். இவ்வளவு நுணுக்கமான திரைக்கதை கண்டிப்பா பிரமிக்க முடியுது. நிறைய Eutopian faces படத்துல அதை ரொம்ப அழகா ஒவ்வொரு ப்ரேம்லயும் காட்டின சினிமாட்டோ க்ராபி கூடுதல் ப்ளஸ்.

ஒவ்வொருத்தோட உடல்மொழியும் அவ்வளவு பொருத்தம். ஆனால், ஆண்ட்ரியா மட்டும் கேள்விக்குறி. சின்ன வயசுல சர்ச் பார்க்ல படிச்சிட்டு, ஸ்டெல்லா மேரிஸ்ல காலேஜ் முடிச்சி ராஜன் மேல காதல்ல விழுந்து கல்யாணம் பண்ணிணவங்க போலன்னு ஒரு பீல். வடசென்னை மொழிய அந்த ஹஸ்கி வாய்ஸ்ல கேக்கறப்ப டிவைன்!

ஏதாவது அதிசயம் அப்பப்போ நிகழும். அந்த கதாபாத்திங்கள், கதைக்களம், சூழ்நிலைகள் நம்மளோட பேசும், நம்ம எவ்வளவு விழிப்பா இல்ல இந்த கதாபாத்திரம் மாறின்னு யோசிக்க வைக்கும் அப்படி யோசிக்க வைச்சது வடசென்னை.

சுய நலத்திற்காக அன்பு கேங்கஸ்டர் கேங் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்று பயப்படும் காட்சியின் ஆழம். அடடா!

நிறைய காட்சிகள் ஆடுகளத்தையும், அப்போ அப்போ சுப்ரமணியபுரத்தையும் நினைவுபடுத்தியது எனக்கு மட்டும் தானா என்பது தெரியவில்லை. க்ளைமேக்ஸ் இரண்டாம் பாகத்திற்காக என திட்டமிட்டு சுவாரஸ்யத்தை குறைப்பதாகவும் இருந்ததாக ஒரு பீல்.

மொத்தத்தில் வடசென்னை a movie not to miss category. சினிமாவா தெரிஞ்சத விட ஒரு நல்ல நாவல் படிச்ச பீல்.

வெற்றி மாறன் தெய்வமே… 💜

– காவ்யா உமாமகேஷ்வரன்

1256total visits,8visits today