வெண்ணிலா எனும் தேவதை பாகம்-5

0
159

கீதா, லாவண்யா, அபிநயா, அபியின் தங்கை கீர்த்திகா அனைவரையும் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, தேவியும் வெண்ணிலாவும் பாட்டி வீட்டினுள் நுழைந்தனர் அசதியில்..

வாயிலில் நுழையும் போதே பாட்டியின் சிரிப்பு சத்தம் கேட்டது. இவர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சர்யம் பாட்டி இப்படி சத்தமாக சிரித்து இவர்கள்அறிந்ததில்லை யாருடன் இப்படி பேசி சிரிக்கிறார் இந்த பாட்டி என நினைத்துக் கொண்டே பாட்டியின் அறைக்குள் நுழைந்தனர்.

வெண்ணிலாவோ அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள். அங்கே இருந்தது சத்யா தான்.

வெண்ணிலாவிற்கு சந்தோஷம் நாளை தான் வருவான் என்று எதிர்ப்பார்த்து இருந்தவளுக்கு இன்றே கானவும் பேச்சிழந்து நின்றாள்.

தேவி, “சத்யாவிடம் என்னடா அண்ணா நாளைக்கு ஈவினிங் வரேன்னு சொல்லிட்டு இன்றைக்கே வந்து இப்படி சர்ப்ரைஸ் பண்ணிட்ட, நாங்க ரெண்டு பேரும் என்னன்ன ப்ளான் பண்ணி வச்சிருந்தோம் எல்லாம் போச்சு” என பேச ஆரமித்தவுடன் தான் சுய நினைவிற்கு வந்தாள் வெண்ணிலா.

ஆனால் அதை காதில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளவில்லை அவன்.
வெண்ணிலாவும், தேவியும் உண்மையாகவே சத்யாவை வரவேற்க கிஃப்ட் ஒன்றும் சத்யாவிற்கு பிடித்த எல்லாம் பாட்டியிடம் கேட்டு இருவருமாக சமையல் செய்வதாகப் ப்ளான் பண்ணி இருந்தனர். எல்லாம் வீணாகப் போனதை நினைத்துக் கவலைப்பட   ஆரம்ப்பித்தாள்.

அத்துடன் அவன் முன் இப்படி களைப்புடன் அழுது வடிந்த தோற்றத்துடன் வேறு நின்றதும் மேலும் கவலையளித்தது.

ஒருவழியாக சத்யாவிடம் பேச வாயெடுக்கவும் சத்யா தனது பாட்டியிடம் “உங்க அருமை பேத்திகளை கவனிங்க நான் ஊர்ல இருந்து வந்து அப்படியே இங்க வந்துட்டேன் அம்மா காணோம்னு தேட ஆரமிக்கிறதுக்குள்ள போய்ட்டு அப்பறம் வரேன்” என கூறிவிட்டு வெண்ணிலாவை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் சென்றுவிடுகிறான். காற்று இறங்கிய பலூனாக முகம் வாட சொத்தன அருகில் இருந்த ஷோபாவில் அமர்ந்துவிடுகிறாள் வெண்ணிலா.

தேவியும் அப்பொழுது தான் வெண்ணிலாவைப் பார்த்து அவளின் அழகிய முகம் வாடியதைக் கண்டு ஒருவாறு யூகித்து விடுகிறாள். ஒன்றும் கவனிக்காத மாதிரி “ஊர்ல இருந்து மூனு மாசம் கழிச்சு வந்துருக்கானே, பேசலாம்னு பார்த்தா.? நான் கேட்ட கேள்விக்குக் கூட பதில் சொல்லாமல் ஓடிட்டான் பார். வீட்டில் போய் நல்லா கவனிச்சுக்கிறேன் அந்த பக்கிய, பாட்டி சூடா காபி தாங்களேன்” என பாட்டியை அழைத்துக்கொண்டு சமையலறைக்குச் செல்கிறாள் தேவி.

வெண்ணிலாவிற்கு இங்கு மனதில் குழப்பம் ஏன் அத்தான் நம்மை பார்த்ததும் இப்படி ஓடினார்? காரணம் என்னவாக இருக்கும்? என சிந்தனையில் இருக்க.. சமையலறையில் பாட்டியிடம் விசாரணையை ஆரமித்திருந்தாள் தேவி.

“என்ன சொன்னான் உங்க அருமை பேரன். எதுக்கு நிலாவை பார்த்து இந்த ஓட்டம் ஓடுறான்? என்ன நடந்துச்சு நாங்க வந்த போது?”

கோமதி பாட்டிக்கோ சிரிப்பு தாங்கவில்லை. அட அதான் நானும் யோசிச்சேன். நீங்க வரது முன்னாடி வரை நிலாவை பத்தி துருவி துருவி விசாரிச்சான். எத்தனை நாள் இருப்பாள்? எப்ப வந்தாள்? அவளை யார் கூப்பிட்டு வந்தா? என்னைப் பத்தி எதுவும் கேட்டாளா? என ஆயிரம் கேள்வி கேட்டான் அவளை பார்த்ததும் ஓடிட்டான். என ஆச்சர்யபட்டு பேசினார் பாட்டி. “ஓ அப்படியா விசயம் இனி நான் கவனிச்சுக்கிறேன் அவனை.”என கூறிக்கொண்டு காபியை கையில் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு வெண்ணிலாவிடம் வந்தாள் தேவி. இங்கே ஏமாற்றத்துடன் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.

அவள் கையில் காபி டம்ளர் ஒன்றை தினித்து “எந்த கப்பல் கவிழ்ந்திருச்சு மகாராணி வெண்ணிலா அவர்களே” எனக் கூறவும் நிலாவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது..

-தொடரும்…

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-4/

-ஆனந்தி

1091total visits,4visits today