வெண்ணிலா எனும் தேவதை பாகம்-6

0
199
வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்ததும் தேவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மேலும் அவளை சீண்ட “உன் மேல ஏதும் கோவமோ என் அண்ணனுக்கு ஏன் பேசேமா போனான்.?” என்றாள்.
வெண்ணிலாவின் கண்களில் அதுவரை அடக்கி வைத்த கண்ணீர் மழ மழவென வழிந்தன. இதைக் கண்டு பதறிவிட்டாள் தேவி. வெண்ணிலா அழுது இதுவரை கண்டதில்லை. எப்பொழுதுமே  கலகலப்பாக இருப்பாள். அவளை சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைக்கத்தான் முயற்சிப்பாள் வெண்ணிலா.
இன்று அவள் கண்களில் கண்ணீரை காணவும் ரொம்பவே சங்கடப்பட்டாள் தேவி. அப்பொழுது தான் தன் அண்ணன் மீது இவள் எவ்வளவு அன்பும் காதலும் வைத்துள்ளாள் என்பதை உணர்ந்தாள்.
வெண்ணிலாவை சமாதானபடுத்த முயன்றால் “அடி இவளே இவ்வளவு நேரம் உன்னைப் பற்றி பாட்டியிடம் விசாரிச்சுட்டு தான் போயிருக்கான் சத்யா. சோ நீ அழுகாத எனக்கு நீ அழுவது புதுசா இருக்கு. இந்த சத்யாவை நான் என்னனு கேட்கிறேன் கவலைபடாதே. எப்பவுமே அவன் உன்னை சீண்டிட்டே தானடி இருப்பான் அது போல தான் எதாவது ட்ரை பண்ணிருப்பான் அழாதடி” என ஆறுதல் கூறினாள். அதன் பிறகுதான் கொஞ்சம் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு பேசினாள் வெண்ணிலா.
“ரெண்டு வருசம் ஆச்சுடி உன் அண்ணனை பார்த்து பேசனும்னு எவ்ளோ ஆசையா பேச வந்தேன் சட்டுனு ஓடிட்டார் அதான் கஷ்டமாய்டுச்சு வேற ஒன்னுமில்ல” என தேவியிடம் சொல்லிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டாள் “பாட்டிகிட்ட சொல்லிடாத நான் அழுத கதையை அப்பறம் அவங்களும் சங்கடபடுவாங்க” எனக் கூறிவிட்டு “சிவாகிட்ட பேசவே இல்லடி காலைல இருந்து பேசலைனா பாட்டி வீடடுக்கு போனதும் மறந்துட்டனு சொல்லுவான்” என சிரித்த முகமாய் தன்னை காட்டிக்கொண்டு மொபைலை கையில் எடுத்தாள் வெண்ணிலா.
தேவிக்கும் சிவாவிடம் பேசினால் இவள் கொஞ்சம் நார்மலாகி விடுவாள் என நினைத்தாள். அதற்குள் ‘இந்த சத்யா லூசு ஏன் இப்படி முகத்தில் அடித்தமாதிரி போனான் எனக் கேட்க வேண்டும்’. மனதில் நினைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினாள். அங்கே சத்யா பதட்டமாக இருந்தான் என்பதை அவன் நடந்துகொண்ட விதம் உணர்த்தியது.
சத்யா வந்தாலே வீட்டில் பாட்டு சத்தம் கேட்கும் இசைப்பிரியன் அவன். வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் சீடியில் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும். வெளியில் எங்காவது போய்விட்டு வந்தாலும் உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக மியூசிக் ப்ளேயரை ஆன் பண்ணுவது தான் வழக்கம். ஆனால் இன்று வீடு   அமைதியாக இருந்தது.
சத்யாவை பற்றி  இங்கே கொஞ்சம்…. நல்ல ஒரளவு உயரம். மாநிறம், அடரத்தியான கேசம், ஓரளவு பெரிய கண்கள், அடர்ந்த புருவம் ஆதலால் கண்கள் எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். எப்பொழுதும் சிரிக்கும் கண்கள். ஆனால் இன்றோ பயங்கர பதட்டத்தில் இருந்தன.
தப்பு பண்ணிய மனநிலையில் இருந்தான் தன் தங்கையை பார்த்ததும் அவளிடம் தன் கோவத்தை காண்பித்தான். எங்க போனீங்க எல்லாம். உன்னை கானோம்னு வந்து ரெண்டு மணி நேரமா தேடிட்டு இருந்தேன்.
தேவிக்கு நன்றாக புரிந்தது இவனுக்கும் வந்ததும்  வெண்ணிலாவை பார்க்க முடியலைனு தான் கோவம்போல அதான் பயபுள்ள அவகிட்ட பேசாம வந்துருக்கு என்பதை நினைத்ததும் சத்தமாக சிரித்துவிட்டாள். அவள் சிரிப்பு மேலும் சத்யாவிற்கு கோபம் வந்தது. அதை கவனித்த தேவி
“ஏன் நான் அம்மாகிட்ட சொல்லிட்டு தான போனேன்  தோப்புக்கு போறேன்னு அவங்க கிட்ட கேட்க வேண்டியது தானே. ஆனா நீ என்னை தேடுன மாதிரி தெரியலையே வேற யாரையோ பார்க்க நினைச்சு முடியாம அதனால கோவம் வந்த மாதிரி இருக்கே” என கேட்கவும் சற்றே அதிர்ந்தான் சத்யா.
மனதிற்குள் ‘ஆஹா இவ பெரிய கேடியாச்சே நாமே நம்மள காட்டி கொடுத்துட்டமோ’ என்று நினைத்துக் கொண்டு “இல்ல லூசு உனக்காக ஒரு கிஃப்ட் வாங்கிட்டு ஆசையா வந்தேன் உன்னை கானோம்னு ஏமாந்துட்டேன் அதான் கோபம்” என மழுப்பினான்.
நம்பிட்டேன் ‘அடடா உங்க ரெண்டு பேருக்கும் இடையில் ரொம்ப அவஸ்த்தை படப் போறேன் போலயே’ என மனதில் நினைத்துக்கொண்டாள் தேவி.
“டேய் அண்ணா நைட் பாட்டி வீட்ல தான் சாப்பாடாம் பாட்டி உன்கிட்ட சொல்ல சொன்னாங்க. நான் போய் பாட்டிக்கும், வெண்ணிலாவுக்கும் ஹெல்ப் பண்ண போறேன் உன் கிஃப்ட் என்னவா இருக்கும்னு எனக்குத் தெரியும் எனக்கு பிடிச்ச பேபி பிங்க் கலர்ல சுடிதார் எடுத்துருப்ப, நான் அப்பறமா வந்து பார்த்துக்கிறேன்” எனக் கூறிவிட்டு ஓடிவிட்டாள். அது தான் நன்றாக தெரிந்ததே அண்ணன் மனதில் உள்ளது. அவள் வந்த வேலை ஈசியாக முடிந்த சந்தோஷத்தில் கோமதிப் பாட்டியிடம் இந்த விசயத்தைச்  சொல்ல ஓடினாள்.
இங்கு வெண்ணிலா சிவாவிடம் அன்று நடந்த அனைத்து விசயத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தாள். ஆனால்  சத்யா வந்ததை மட்டும் மறைத்துவிட்டு.  சிவாவிற்கு சந்தேகம். அவள் குரலில் ஒரு உற்சாகம் இல்லாததை கண்டுபிடித்தான். ஆனால் எப்படியும் வெண்ணிலா தன்னிடம் மறைக்கமாட்டாள் நாளை சொல்லுவாள் என்று நினைத்து எதையும் கேட்கவில்லை.
-தொடரும்
முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்:
http://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-4/
– ஆனந்தி

1238total visits,1visits today