வெண்ணிலா எனும் தேவதை – பாகம்-7

0
151
இரவு அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். கோமதி பாட்டி, பேரன், பேத்திகள் இருவர்  மட்டுமே. எப்பொழுதும் பாட்டி சமையல் என்றால் தனி ருசி தான். அதுவும் பாட்டி சொல்லும் அந்தக்கால கதைகளை கேட்டுக்கொண்டே சாப்பிட கேட்கவா வேண்டும்?.
வெண்ணிலாவிற்கு எப்பொழுதும் பாட்டி செய்யும் வேலையில் வேகம், நிதானம் எல்லாம் பார்த்து ஆச்சர்யமாக பார்ப்பாள். “எப்படி பாட்டி இந்த வயசிலயும் அலுக்காம வேலை பார்க்கறீங்க?” என கேட்பாள். அதற்கு சிரித்துக் கொண்டே “மனசுல தெம்பு இருந்தா எதையும் சாதிக்கலாம் நிலா கண்ணு, வயசு முக்கியமில்ல “. என கூறுவார்.
சாப்பிட அமர்ந்தனர் நால்வரும். சத்யா இப்பொழுதாவது பேசுவான் என எதிர்பார்த்தாள் நிலா. ஆனால் வேண்டுமென்றே முகத்தை திருப்பிக் கொண்டான். வெண்ணிலா இருக்கும் பக்கம் திரும்பவே இல்லை. பாட்டி இதை கவனித்தார்.
“ஏன்டா சத்யா ஊர்ல இருந்து உன் அத்தை மகள் வந்திருக்கா பார்க்காத மாதிரியே இருக்க, அப்படியே உன் தாத்தா குணம் எல்லாம் உன்கிட்ட. வம்பா வந்து பேசனும்னு, ஊருக்கு வந்த விருந்தாளிய உபசரிக்கனும்னு சொல்லிக் கொடுக்கலையா.?”
“இல்ல பாட்டி இப்படிலாம் இல்ல அவங்கலாம் பெரிய ஊர்காரங்க. நம்ம எல்லாம் கிராமம் அவங்க டவுன், எங்களையெல்லாம் பிடிக்குமோ பிடிக்காதோ? அதான் அவங்களா வந்து பேசட்டும்னு இருந்தேன்”
சத்யா இப்படி கூறவும் வெண்ணிலாவிற்கு கோவம் வந்தது கோபத்துடனே….
“ஏன் பாட்டி இப்படி என்னை வம்பிழுத்து அழ வைக்கவே இந்த அத்தான் இப்படி பேசுறார் போல, சத்யாவை பார்த்து நான் பேச வந்தேன் நீங்க தான் வீட்டுக்கு ஓடிட்டீங்க”
“ஏன் நான் என்ன வேற தேசத்துக்கா போனேன் அடுத்த தெரு தான என் வீடு பின்னாடியே வரமாட்டிங்களோ மகாராணி.”
“நான் உங்கள பார்த்தே ரெண்டு வருசம் ஆச்சு. ஆனா உங்களை பார்க்க பேசனும்னு தானே ஊருக்கே அப்பாகிட்ட கெஞ்சி கதறி வந்துருக்கேன். நீங்க பேசாமா போன பின்னாடி வரனுமா நானு.”
இப்படியே இருவரும் எப்பொழுதும் போல் ஒருவருக்கொருவர் வம்பு பேசவும் பாட்டி இடையில் புகுந்து
“இப்ப ரெண்டு பேரும் சாப்பிட்டு அப்புறமா உங்க சண்டைய வச்சுக்கோங்க. இப்ப ஒழுங்கா  உட்கார்ந்து சாப்பிடுங்க.”  என இருவரின் பேச்சையும் நிறுத்தினார் பாட்டி….
ஆனாலும் வெண்ணிலாவிற்கு கோபம் குறையவே இல்லை எதாவது அவனை பண்ணனும்னு யோசித்தாள்.
பாட்டியின் வீட்டில் பெரிய ஹால் அதில் நடுவில் ஒரு பெரிய மரப்பலகை  ஊஞ்சல் ஒன்று  இருக்கும். அதில் எப்படி ஐந்து பேர் தாராளமாக அமரலாம். பேரன், பேத்திகள் மூவருக்கும் சிறுவயதில் இருந்தே  இது மாதிரி விடுமுறை நாட்களில் பாட்டி அந்த ஊஞ்சலில் அமர்ந்து சுற்றி இவர்களையும் உட்கார வைத்து கதை சொல்லிக்கொண்டே ஊட்டிவிடுவார்.
இன்றும் அதே போல்தான் மூவரையும் அமர வைத்து ஊட்டிவிட்டார். மூவரும் சாப்பிட்டு முடித்தனர். எப்படா சாப்பிட்டு முடிப்போம் என காத்துக் கொண்டிருந்த வெண்ணிலா கையில் ஒரு செம்பு நிறைய தண்ணீரை எடுத்தாள் ஒன்றும் தெரிந்தது போல் சத்யாவின் பின் பக்கமாக அருகில் சென்றாள். “என்னை  வந்ததும் அழ வச்சதுக்கு தண்டனை” என கூறிக்கொண்டே அப்படியே அந்த தண்ணீரை அவனது தலையில் ஊற்றிவிட்டாள்.
இதை சற்றும் எதிர் பார்க்காத சத்யா அவளை அடிக்க துரத்திக்கொண்டு ஓடினான். அதற்குள் சிரித்துக்கொண்டே பாட்டியின் பின்னே போய் ஒளிந்து கொண்டு “பாட்டி பாட்டி காப்பத்துங்க” என கெஞ்சினாள்.
“என் மேல அசந்த நேரம் பார்த்து தண்ணிய ஊத்திட்டேல இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு” என விரட்டினான் சத்யா.
இப்பொழுதுதான் அப்பாடா என்று இருந்தது தேவிக்கு இது போல தான் எப்பவும் வம்பு சண்டை போடுவார்கள் இருவரும். அது இல்லாமல் இருவரும் ஆளுக்கொரு பக்கம் இருந்தது கவலையடைந்தாள். தன் அண்ணனை பார்த்து
“டேய் அண்ணா இப்ப விடு,  இன்னும் ரெண்டு மாசம் இங்க தான் இருப்பா  அப்ப கவனிச்சுக்கலாம் அவளை”. என கண்ணடித்தாள்.
“கட்டாயம் இருக்கு  உனக்கு இருக்கு சரியான தண்டனை உன்னை பழிவாங்காம விடமாட்டேன் நிலா இரு இரு உன்னை கவனிச்சுக்கிறேன்” என எச்சரிப்பது போல் பரிகாசம் செய்தான். பாட்டிக்கு சந்தோசம் தாங்கவில்லை இவர்களின் விளையாட்டை ரசித்தாள்.
-தொடரும்..
முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
-ஆனந்தி

751total visits,2visits today