வெண்ணிலா எனும் தேவதை – பாகம்-9

0
134
இதை சற்றும் எதிர் பார்க்காத வெண்ணிலா அதிர்ச்சியில் சட்டென கையை பின்னுக்கு இழுத்தாள். நிமிர்ந்து சத்யாவை கேள்வியுடன் நோக்கினாள். சத்யா புரிந்து கொண்டு பேச ஆரமித்தான்.
“எனக்கு உன்னை பிடிக்கும் வெண்ணிலா. சின்ன வயதில் இருந்தே நீ வந்தாலே எனக்கு மனசு சந்தோசமா இருக்கும். ஆனா இது தான் காதல்னு புரிஞ்சது இந்த ரெண்டு வருசமா உன்னை பார்க்காம இருந்த போது தான். ஆனாலும் இது தான் காதலானு புரியல, நீ என்ன நினைக்கிறனும் எனக்கு தெரியாது.? இன்னும் வயசு இருக்கு பக்குவம் வரனும் ரெண்டு பேருக்குமே. ஆனா நான் உன்னை காதலிக்கிறேன்னு மட்டும் நிச்சயமா சொல்வேன். வந்த அன்னைக்கே உன்னை பார்த்ததும் ஓடி வந்து உன் குண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கனும்னு தோனுச்சு. சட்டுனு சுதாரிச்சுட்டேன். அதான் ஓடினேன் வீட்டுக்கு. இல்லைனா அசிங்கமா போயிருக்கும். வீட்டுக்கு போய் என்னை நினைச்சே எனக்கு குற்ற உணர்வு வந்துடுச்சு. என்னடா இப்படி ஒரு நினைப்பு நமக்கு ஏன் வந்துச்சுனு. உன்கிட்ட என்னோட விருப்பத்த சொல்லிட்டா இந்த ஏக்கம் மாறிடும்னு முடிவு பண்ணி சந்தர்பத்துக்காக வெய்ட் பண்ணினேன். இப்ப கிடைச்ச இந்த நேரத்தை வீணாக்க விரும்பல. அதான் சொல்லிட்டேன்”
மனதில் இருந்த அனைத்தையும் சொன்ன திருப்தியில் அவள் கண்களையே பார்த்துக்கொண்டு நின்றான் அவளின் பதிலுக்காக. வெண்ணிலா அவன் சொன்ன அனைத்தையும் பொறுமையாக கேட்டாள். ஏனென்றால் அவள் மனதிலும் இது தானே ஓடியது. இருவருமே ஒன்றாகதான் சிந்தித்திருக்கிறோம் என்பதை நினைத்து  சந்தோசப்பட்டாள். ஆனாலும் மனதில் சிறு தயக்கம் ஒத்துக்கொள்ள. உடனே பதில் சொன்னால் அத்தான் நம்மை தப்பா நினைச்சுடுவாரோ என நினைத்தாள்.
சத்யாவை பார்த்து “நானும் இதே தான் நினைத்தேன். உங்க கிட்ட சொல்லனும்னு ஆனா நீங்களே சொல்லிட்டீங்க. மனசார நானும் உங்களதான் விரும்புறேன், நீங்க சொன்னதும் மிக சரியான விசயம் இன்னும் ரெண்டு பேருக்குமே வயசு இருக்கு, எனக்கும் படிக்கனும் டிகிரி வாங்கனும் பொண்ணுகளிலேயே நம்ம வம்சத்தில் நானும் தேவியும் தான் கலேஜ் போய் படிக்கப்போறோம்.. நீங்களும் ஒரு இன்ஜினியரா வரனும். நானும் டிகிரி முடிச்ச பிறகு இந்த விசயத்தை வீட்டில் சொல்லுவோம். அதுவரை யாருக்கும் தெரியவேண்டாம். எப்பவும் போல நாம இப்படியே இருக்கலாம்.”   இருவரும் ஒரு தெளிவுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைந்தனர்.
அதன் பிறகு சத்யாவை நிமிர்ந்து பார்க்க நிறையவே வெட்கப்பட்டாள். அந்த வெட்கத்தை ரசித்துக் கொண்டே மறுபடியும் அவள் அருகில் வந்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டான். வெண்ணிலா பதட்டத்தில் சிலையாக நின்றுவிட்டாள் ஒரு நொடி. பின் சுதாரித்து “அத்தான் போதும் இனி இது போல பண்ணாதீங்க, யாரவது பார்த்தால் நம்மளை என்ன நினைப்பாங்க?”  “பாட்டியும் நம்மளை தப்பா நினைச்சுடுவாங்க வேண்டாம் சரியா?” என மிரட்டும் தொனியில் கூறினாள்.  தான் பண்ணிய தப்பை உணர்ந்தான் சத்யா உடனே வெண்ணிலாவிடம் மன்னிப்பும் கேட்டான்.
“சாரி வெண்ணிலா இனி இப்படி நடக்காது.  நீ வெட்கப்படும் போது உன்னோட சிரிக்கும் அந்த பெரிய கண்ணும் சிவந்த கன்னங்களும் அழகா இருந்தது. அதான் அடக்க முடியல முத்தம் கொடுத்துட்டேன். தண்டனையா நீ எத்தனை கொடுத்தாலும் வாங்கிக்குவேன் கணக்கெல்லாம் இல்ல ரெண்டு முத்தத்துக்கு இருபதா கூட கொடுக்கலாம் நோ அப்ஜக்சன் என ஸ்டைலாக தோளை குலுக்கினான்”. உடனே வெண்ணிலா இருபது என்ன அத்தான் முப்பதா தரேன் என பக்கத்தில் இருந்த முதல் நாள் தோட்டத்தில் இருந்து பறித்து வந்த முருங்கைகாயை எடுத்து அடிக்க வந்தாள். சத்யா அதை கவனிக்காமல் முத்தம் தான் தர போகிறாள் என நினைத்து அசால்டாக நின்றான் பக்கத்தில் வந்த பிறகு தான் கவனித்து விட்டு “ஆத்தாடி இவ்ளோ ரௌடியா இருக்காளே  கல்யாணம்  பண்றேனு வேற சொல்லித் தொலைச்சுட்டேனே” என பயந்தவன் போல பாசாங்கு செய்து விட்டு ஓடினான். இவளும் பின்னாடியே அடிப்பதுபோல் துரத்தினாள்.
அந்த நேரம் உள்ளே வந்த தேவி “ஆரமிச்சாச்சா உங்க சண்டைய ஆண்டவா இவங்க ரெண்டு பேர்கிட்ட இருந்து என்னை மட்டும் காப்பாத்துடா. எங்கண்ணனுக்கு மொட்டை போடுறேன்” என கூறினாள் இதை கவனித்த சத்யா
“அடிப்பாவி கடைசி என் தலைல கை வைக்கிற நீயெல்லாம் ஒரு தங்கச்சியா பிசாசு, எரும அவ தான் இப்படினா இவ அதுக்கும் மேல இருக்காளே, இதில வெண்ணிலாவையும் கல்யாணம் பண்ணிகிட்டா ரெண்டு பேரும் என்னை ஒரு வழி ஆக்கிடுவாளுங்க போல”
அச்சோ இந்த அத்தான் லூசு மறந்து போய் உளறிட்டாரே தேவி என்ன நினைப்பாளோ..? என்ற பயத்தில் வெண்ணிலா திரு திருவென முழிக்க.. அப்பொழுது தான் தான் உளறியது அறிந்து சத்யாவும் நாக்கை கடித்துக்கொண்டு தனது தங்கையை ஸ்லோமோஷனில் திரும்பிப் பார்த்தான்..
“ஆஹா கதை இப்படி போகுதா சொல்லியாச்சா ஒருத்தருக்கொருத்தர்  யார் முதல்ல சொன்னது நீயா..? வெண்ணிலாவா.? வெண்ணிலாவா தான் இருக்கும் அவதான் நேத்து நீ பேசலைனு அழுதா அவ தானே சொன்னா?” என அண்ணனை பார்த்து கேட்டாள் தேவி.
“என்னது அழுதாளா.? நான் தான் அவசரபட்டுட்டேனா கொஞ்சம் வெய்ட் பண்ணிருந்தா இவ வாயால லவ் பண்றேன் விசயத்த கேட்ருக்கலாமோ..? ச்சே மிஸ் பண்ணிட்டேனே..! அவசரபட்டுட்டேனே” என கூறினான்.
“அட அவசரபட்டுட்டயே லூசு அண்ணா ப்பே உன்னை பத்தி என்னனமோ நினைச்சேன் நீயும் இப்படிதான்னு நிருபிச்சுட்ட போடா”
இதை பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலா “என்னடி அண்ணனும் தங்கச்சுயும் டிராமா பண்ணி என்னை ஓட்டுறீங்களா” என கேட்டுக்கொண்டே இருவரையும் அடிக்க துரத்தினாள்..
-தொடரும்.
முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்..

1300total visits,1visits today