பள்ளிகளில் விசயதசமி சேர்க்கை

0
31

வட மாநிலத்தில் இன்றைய நாளை துர்கா பூஜையாகவும், கர்நாடக மாநிலத்தில் தசரா திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தமிழக்கத்தில் இன்றைய நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

தமிழக அரசும் இன்று பள்ளிகளை திறந்து வைத்திருக்க உத்தரவு பிறப்பித்து இருந்தது. இன்றைய நாளில் பள்ளியில் சேர்க்கும் குழந்தைகள் சிறந்த கல்வி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. விசயதசமி என்றால் வெற்றிவாகை சூடிய நாளென்றும், இன்று தொடங்கும் அனைத்து விசயங்களும் வெற்றி வாகை சூடும் என்பதும், பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்க்காலம் சிறப்பாக இருக்குமென்ற நம்பிக்கை அனைவரிடமும் உண்டு.

மூன்று வயது குழந்தைகளை எல்.கே.ஜி வகுப்பிலும், ஐந்து வயது குழந்தைகளை முதலாம் வகுப்பிலும் தமிழகமெங்கும் பள்ளியில் சேர்க்கை நடைப்பெறுகிறது. ஆங்கில மற்றும் தமிழ் வழி கல்விக்கான சேர்க்கை இன்று கோலாகலமாக ஆரம்பித்தது.

தமிழக அரசு பள்ளியில் இன்று சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு விலையில்லா பாடபுத்தகமும், பள்ளி சீருடைகளும் இன்றே வழங்க கல்வித்துறை ஆணையர் உத்தவிட்டுள்ளார்.

பள்ளிகளில் மட்டுமில்லாது தனியார் கணிப்பொறி பயிற்சிக்கான நிலையங்கள், சிறப்பு வகுப்பு பயிற்சி நிறுவனங்கள் சலுகைகளை அளித்து இன்று சேர்க்கையை சிறப்பாக ஆரம்பித்து இருக்கின்றன.

– நிலோஃபர்

1283total visits,2visits today