விளம்பி – தமிழ் புத்தாண்டு கடக ராசிபலன்

0
36

கடகம் :

மனதில் உள்ள எதையும் மறைக்காமல் பேசும் கடக்க ராசியினரே.!

இந்த ஆண்டு துவங்கம் முதல் அக்டோபர் 3ம் தேதி வரை குரு நான்காம் வீட்டில் இருப்பதால், வேலை சுமை அதிகரிக்கும். சொத்து வகையில் பிரச்னையை தவிர்க்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை கையாளும் போது கவனம் தேவை. எதையும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் அறிவுபூர்வமாக சிந்தித்து எடுக்கவும். அக்டோபர் 4ம் தேதிக்கு பிறகு குரு பகவான் ராசிக்கு 5 இடத்தில் இருந்து பார்ப்பதால். சமுக அந்தஸ்து உயரும். வீட்டில் சுப நிகழ்சிகள் நடைபெறும், சிலருக்கு குழந்தை பாக்கியம் உருவாகும், மகன் / மகளுக்கு திருமணம் கைகூடும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகன் / மகளுக்கு உயர்கல்வி, வேலை போன்ற முன்னேற்றமான பலன் கிடைக்கும். குழந்தைகளால் பெருமை கூடும் நேரமிது. நீண்டகால குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உயர்ந்த ஆடை ஆபரணம் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். ஆண்டு முடியும் தருவாயில் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

வருடம் முழுதும் சனிபகவான் ஆறாம் இடத்திலேயே தொடர்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். தந்தை வகை சொத்து வந்து சேரும். உறவினர்களிடம் இருந்து வந்த சிக்கல்கள் மோதல் போக்குகள் தீரும். சிலருக்கு கடன் அடைபடும். புதிய வங்கிக்கடன்கள் கிடைக்கப்பெறும், யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற அனுபவம் கிடைக்கும். புதிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும், எல்லாக்கவலையும் நீங்கி சாதகமான சூழ்நிலை உருவாகும்.

ஆண்டு துவக்கம் முதல் பிப்ரவரி 12ம் தேதிவரை ராகு ராசிகுள்ளும், கேது 7லிலும் தொடர்வதால், குடும்பத்தில் பிரச்சனை, உடல் ஆரோக்கியமின்மை, மன இறுக்கம், குழப்ப மனநிலை, வாழ்க்கை துணையின் வகையில் மருத்துவ செலவுகள், சண்டை சச்சரவுகள் போன்றவை நடைபெறும்.

பிர்ப்ரவரி 13முதல் ராகு 12லும், கேது 6லும் பெயர்சியாவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அதுவரை இருந்து வந்த மனவியாதிகள் தீரும். குடும்பத்தில் மகிழ்சி திரும்பும். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மோதல் போக்கு தீரும். உற்சாகமான மனநிலை முகப்பொழிவை கொடுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் போன்ற நற்பலன் ஏற்படும். கணவன் / மனைவி வழி உறவுகள் நாடிவந்து பேசுவார்கள், பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பிப்ரவரி மாதத்தில் சுக்கிரனும் ஆறாம் இடத்திற்கு சென்று மறைவதால், உடல் ஆரோக்கியம் கெடும், வேலைச்சுமை அதிகரிக்கும், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு தோன்றும். வாழ்க்கைத்துணையை அனுசரித்து செல்வது பிரிவில் இருந்து காக்கும்.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரை செவ்வாய் கேதுவோடு இணைத்து 7ம் இடத்தில் அமர்வதால் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியம் கெடும். யாருக்கும் ஜாமீன் போடவேண்டாம். உணவு கட்டுப்பாடு அவசியம் உடல் உஷ்ணத்தில் கவனம் தேவை.
தொழிலில் போட்டிகளை சமாளிக்க கடினமாக உழைப்பைகொடுக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். பிரச்சனைக்குரிய பங்குதாரர்கள் தாமாக விலகுவார்கள். பணியாளர்களிடம் அன்பாக பேசி வேலை வாங்கவும், புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வெளிநாட்டு நிறுவனங்களில் ஒப்பந்தமிடும் முன் நன்கு விசாரிக்கவும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், எண்ட்டர்ப்ரைசஸ் வகையில் நல்ல முன்னேற்றம் உண்டு.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும், சக ஊழியர்கள் விடுப்பால் தாங்களே அவர்களது வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டும். மூத்த அதிகாரி உங்கள் வேலையில் குறை கூறுவார்கள். கடுமையாக உழைத்தும் அதற்க்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் உருவாகும். மாசி மாதத்திற்கு பிறகு உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.

உங்களின் 9ம் வீட்டில் ஆண்டு துவங்குவதால், சவால்களை உங்கள் சாமர்த்தியத்தால் செய்து முடிப்பீர்கள். குறைந்த வட்டியில் கடன்பெற்று அதிக வட்டியில் உள்ள கடனை கட்டிமுடிப்பீர்கள். செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகமும் உண்டு. இந்த புத்தாண்டு அலைச்சல். இடமாற்றம் செலவு என்று வாட்டினாலும், உங்கள் அனுபவ அறிவால் ஆக்கம் பெறும் நாளாகும்.

பரிகாரம் : திருசெந்த்தூர் முருகனை வழிபடுவது நன்மைத்தரும்.

-“ஜோதிட அமுதம்” ஜோதிமணி D.Astro

ஓம் ஜோதிட நிலையம், கரூர்

1132total visits,2visits today